*சமூக சேவகர் அப்சரா ரெட்டியின் அடுத்த மைல் கல் முயற்சியாக ‘Dignity Project’ மூலம் திருநங்கைகளுக்கு வாழ்வாதாரமளிக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைப்பெற்றது.*
இலக்கு வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்து அரசியல், சமூக சேவைகளில் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வரும் அப்சரா ரெட்டி தலைமையிலான பெண்கள் அமைப்பான 'The Good Deeds Club', '‘Dignity Project’' எனும் முயற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
‘Dignity Project’ திருநங்கைகளை பொருளாதார மேம்பாடு அடையச் செய்ய, நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய வளங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தண்ணியல்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ முடியும். இந்நிகழ்ச்சியில் 200 திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் தினசரி தேவைகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் உடனடி நலனை உறுதி செய்கிறது. மேலும், சுய பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக, 'The Good Deeds Club ' ஐந்து புதிய உணவு வண்டிகளையும் நன்கொடையாக வழங்கியது.
இந்த உணவு வண்டிகள் எர்ணாவூர் பகுதியில் திருநங்கை வாழ்விடங்களிலேயே வழங்கப்பட்டன. இது பொருளாதார அதிகாரமளிப்பின் தொடர்ச்சியான பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
'‘Dignity Project’' என்பது அப்சரா ரெட்டியால் பல கட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இதுவரை, தமிழ்நாடு முழுவதும் 116 திருநங்கைகளுக்கு உணவு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியைப் பற்றி பேசிய 'The Good Deeds Club' நிறுவனர் அப்சரா ரெட்டி,
‘Dignity Project’ என்பது உதவி மட்டுமல்ல என்றும் இது திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் மரியாதையை மீட்டெடுக்கும் முயற்சி என்றும் கூறினார். திருநங்கைகளுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவது யாசக உதவி அல்ல என்றும், பொருளாதார சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை வளர்ப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ இம்முயற்சியின் மூலம் தாக்கத்தை உருவாக்க நாங்கள் உறுதி கொள்கிறோம் என்றார்.
'‘Dignity Project’' அனைத்தும் உள்ளடக்கிய சமூக முன்னேற்றத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும், பொருளாதார அதிகாரமளிப்பே உண்மையான சமத்துவத்திற்கான வழி என்பதையும் நிரூபிக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், 'The Good Deeds Club' புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான தனது பணியை உறுதிப்படுத்துகிறது, அவர்களுக்கு தர்சார்பு மற்றும் கண்ணியமான எதிர்காலத்தை கட்டமைக்க தேவையானவற்றை உறுதி செய்கிறது.
எம்.கண்ணதாசன் மூர்த்தி மற்றும் Good Deeds Club உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.