Monday, March 31, 2025

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !! 

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன்  இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. 


இந்நிகழ்வினில்.., 


நடிகர் கார்த்தி பேசியதாவது… 
சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து,  உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது.  அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான்  என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும், அத்தனை செலவு செய்துள்ளார்கள். லக்‌ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.  இன்றைய காலகட்டத்தில் படத்திற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் கடமையாக ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம் நன்றி. 

இயக்குநர் பி.எஸ்.மித்ரன்  பேசியதாவது… 
முதன் முதலில் சர்தார் எடுக்கும்போது சர்தார் எப்படி இருக்க வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. கார்த்திக்கு மேக்கப் போட்டு முதல் சீன் எடுக்கும்போதே, இந்த கேரக்டர் நிறைய கதை சொல்ல முடியும் என்று தோன்றியது. அப்போதே இந்தப் பயணம் துவங்கிவிட்டது. இந்தப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் என இரண்டாகவும் இருக்கும். சர்தாரின் ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதை நடக்கும். இது மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகும் படம். அதற்கு லக்‌ஷ்மன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சர்தாரில் கார்த்தி சாரை பாடாய்படுத்தினோம், அதைத் தாண்டியும் மீண்டும் மேக்கப் போட்டு இந்தப்படத்திற்கு வந்ததற்கு நன்றி. இந்த ஃபர்ஸ்ட் லுக், சர்தாரில் யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை அறிமுகப்படுத்ததத் தான். எஸ் ஜே சூர்யா சார் கதை கேட்டு முடிக்கும் முன்பே ஒத்துக்கொண்டார். இதில் அசத்தியுள்ளார். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமார் பேசியதாவது… 
இறைவனுக்கு வணக்கம், சர்தார் முடித்தபோது அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாம் என ஹீரோவும் இயக்குநரும் முடிவு செய்தார்கள், அப்போது மித்ரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். இது பெரிய கேன்வாஸில் இருக்கும் ஓகேவா என்றார். சர்தார் படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதற்காக அவர் கடுமையாக உழைத்திருந்தார். அதனால் இது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உடனே ஓகே சொன்னேன். சர்தார் மேக்கப் போடவே அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டார். இதற்காக கார்த்தி இன்னும் கடுமையாக உழைத்துள்ளார். மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறோம் நன்றி. 


நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது….
“சர்தார் 2” ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 3 அற்புதமான மனிதர்கள், கார்த்தி சார், அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள். கார்த்தி சாரிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். அந்த மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும், அதை பொறுத்துக் கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது பெரிய வெற்றி தரும், அனைவருக்கும் நன்றி. 

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது… 
இது மிகப்பெரிய மேடை, 10 வருடம் முன் இந்த இடத்தில் மித்ரன் என்னிடம் சர்தார் கதையைச் சொல்லியுள்ளார். அவர் எப்போதும் ஹாலிவுட் தரத்தில், நம் கதையை சொல்லும் இயக்குநர் அவருடன் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. தூக்கத்தில் எழுப்பினாலும் ஸ்பை திரில்லருக்கு இசையமைப்பேன், எனக்கு பிடித்த ஜானர்.  கார்த்தி சாருடன் கைதி படத்திற்கு பிறகு வேலை பார்க்கிறேன். மிகத் தனித்துவமான திறமைசாலி. அவரிடம் எப்போதும் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு இருக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. பிரின்ஸ் பிக்சர்ஸ் என் குடும்பம் மாதிரி. இவர்களுடன் பல ஜானர்களில் வேலை பார்த்துள்ளேன்.  இன்னும் பல படங்கள் பணியாற்ற வேண்டும். இந்தப்படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 





தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள்
கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு,  மற்றும் பலர்.


இசை - சாம் சிஎஸ் 
ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ். 
சண்டைப் பயிற்சி - திலீப் சுப்பராயன், சேத்தன் டிசோசா
கலை இயக்குனர் - ராஜீவன் நம்பியார் 
படத்தொகுப்பு - விஜய் வேலு குட்டி
தயாரிப்பு நிர்வாகம் - AP பால் பாண்டி
இணை தயாரிப்பு - A வெங்கடேஷ் 
தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் - S.லக்‌ஷ்மன் குமார், இஷான் சக்சேனா
மக்கள் தொடர்பு - சதீஷ்குமார் (S2 Media)

Chennai Roadshow Showcases Madhya Pradesh as Premier Tourist Destination for Tamil Nadu Travelers


 

Chennai Roadshow Showcases Madhya Pradesh as Premier Tourist Destination for Tamil Nadu Travelers

 Chennai : The Madhya Pradesh Tourism Roadshow at Novotel Chennai was a grand success, drawing an overwhelming response from travel enthusiasts and industry stakeholders across Tamil Nadu. The event effectively highlighted Madhya Pradesh's diverse attractions, robust connectivity, and exceptional hospitality, positioning the state as an ideal destination for South Indian tourists.

Highlighting the achievements of this roadshow, Shri Sheo Shekhar Shukla, Principal Secretary, Tourism, Culture, and Religious Trusts & Endowments Department, and Managing Director, Madhya Pradesh Tourism Board, stated, “The Chennai roadshow has been a great success, reaffirming our belief in the power of collaboration in the tourism sector. Madhya Pradesh is not just a destination; it is an experience that offers a blend of history, culture, spirituality, and adventure. With strong investment commitments, new initiatives, and enhanced tourism offerings, we are confident that Madhya Pradesh will continue to emerge as a preferred travel and investment destination in India.”

The roadshow witnessed an impressive turnout, reflecting the growing interest among Tamil Nadu travelers in exploring Madhya Pradesh. A multitude of stakeholders, including prominent tour operators and hospitality partners from Madhya Pradesh, actively participated, fostering collaborative opportunities and promoting the state's tourism potential.

A Destination That Offers Everything – Spirituality, Wildlife, and Heritage

Madhya Pradesh is a treasure trove of attractions catering to the diverse interests of Tamil Nadu’s travelers. For spiritual seekers, the state is home to two revered Jyotirlingas – Mahakaleshwar in Ujjain and Omkareshwar, drawing lakhs of pilgrims every year. Wildlife enthusiasts can embark on thrilling safaris in Kanha and Bandhavgarh National Parks, renowned for their tiger reserves and rich biodiversity. For those fascinated by history and architecture, the UNESCO-listed Khajuraho Group of Monuments offers a glimpse into India’s artistic and cultural brilliance.

Seamless Connectivity from Chennai to Madhya Pradesh

Travel between Chennai and Madhya Pradesh has become easier than ever. Regular flights connect Chennai with major cities like Bhopal and Indore, ensuring a quick and comfortable journey. Additionally, direct train services offer an affordable and scenic way to explore the state. Once in Madhya Pradesh, tourists can take advantage of an extensive road network, ensuring smooth access to all major attractions.

UNESCO World Heritage Sites and Historic Landmarks

Madhya Pradesh is home to 18 UNESCO World Heritage Sites, including Khajuraho’s intricate temples, the ancient Buddhist site of Sanchi Stupa, and the prehistoric rock shelters of Bhimbetka. These sites offer a deep dive into India’s historical and architectural grandeur.

A Cultural Extravaganza – Art, Craft, and Cuisine

Every visit to Madhya Pradesh is not just about sightseeing but also about experiencing its rich cultural heritage. Tourists can indulge in local culinary delights, savoring flavors unique to the region. The state is also famous for its handcrafted textiles like Chanderi and Maheshwari, along with tribal art forms such as Gond and Bhil paintings. These artistic and cultural elements make every journey in Madhya Pradesh a holistic and immersive experience.

A Safe and Well-Planned Destination

Madhya Pradesh has emerged as a safe and secure travel destination, implementing measures to ensure visitor safety. The government has focused on developing tourist-friendly policies, making travel within the state a hassle-free and enjoyable experience.

Tourism Driving Economic Growth and Employment

The remarkable growth of tourism has significantly boosted Madhya Pradesh’s economy, creating thousands of employment opportunities. The state recorded over 133 million visitors in 2024, a sharp rise from 34.1 million in 2022. Ujjain alone welcomed 52.8 million tourists, underscoring its status as a major spiritual tourism hub.

The Chennai Roadshow has successfully positioned Madhya Pradesh as a top travel destination for Tamil Nadu tourists. With seamless connectivity, rich cultural heritage, diverse experiences, and top-notch hospitality, Madhya Pradesh continues to establish itself as the heart of Incredible India.

World-Class Hospitality – From Luxury to Homestays

Madhya Pradesh offers an array of accommodation options, catering to different traveler preferences. Luxury resortsprovide top-tier amenities, with renowned brands such as Taj, Marriott, Radisson, Ramada, The Park, and Clarion Inn establishing their presence in key cities like Bhopal, Indore, and Jabalpur. Heritage hotels, including grand havelis and royal palaces, allow visitors to immerse themselves in regal splendor, offering a blend of history and luxury. The state has successfully facilitated 208 tourism projects, leading to the creation of 7,151 new hotel rooms, significantly enhancing its hospitality infrastructure. For a more authentic experience, homestays and eco-tourism stays provide travelers an opportunity to engage with local communities, experiencing their traditions firsthand. With investments of ₹3,850 crore in tourism projects and a focus on sustainable growth, Madhya Pradesh is well-equipped to cater to both domestic and international travelers.Comprehensive Travel Assistance for Tourists

Madhya Pradesh Tourism has curated detailed itineraries and provides an updated list of accredited tour operators on its official website. Experienced travel professionals are available to guide tourists, ensuring seamless and enriching experiences across the state.

 

For detailed information about Madhya Pradesh tourism, visit the official website at mptourism.com. 

Sunday, March 30, 2025

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!*

*இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!*

பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம்
ஜூனில்  படப்பிடிப்பு தொடக்கம்!!

பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும்,  புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது.  கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில்,  விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார்.  இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திருவிழாவாக இருக்கும்.

இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவத்தின் கீழ், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். இந்த அற்புதமான படம் இன்று உகாதி தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக இயக்குநர்  பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்  எனக் கூறப்படுகிறது.

இந்த மாபெரும் கனவு திரைப்படத்தை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் புன்னகையுடன் இணைந்திருக்கும் அழகான  போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் :
விஜய் சேதுபதி

தொழில்நுட்பக் குழு: 
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் 
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ் 
CEO : விசு ரெட்டி 
மக்கள் தொடர்பு : யுவராஜ் 
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு


 தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு

நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர்.

முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். 

காற்றில் விதைத்த கருத்து நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். 

கவிஞர் முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு K. பாக்யராஜ், தலைவர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தலைமை தாங்க RK செல்வமணி,  தலைவர், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்; T. சிவா, பொதுச்செயலாளர், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்; கருணாஸ், துணைத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாக்யராஜ் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார். 

தமிழ்த்தாய் வாழ்த்தை வைஜெயந்தி பாட, லியாகத் அலிகான், பொதுச்செயலாளர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், வரவேற்புரை வழங்கினார். நடிகைகள் பூர்ணிமாபாக்யராஜ், குட்டி பத்மினி, ரோகிணி, தேவயாணி ராஜகுமாரன், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். 

கவிஞர் முத்துலிங்கம் பற்றிய குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது. 


***

PAGE 3 LUXURY SALON 30 வது கிளையை VR மாலில் நடிகை கயாடு லோஹர் திறந்து வைத்தார்.*

*PAGE 3 LUXURY SALON  30 வது கிளையை VR மாலில் நடிகை கயாடு லோஹர் திறந்து வைத்தார்.*

இந்தியாவின் அதிக மக்களால் பரிந்துரைக்கப்படும், ஆடம்பர மற்றும் உயர்தர சிகை அலங்காரம், அழகு நிலையமான PAGE 3   சென்னை VR மாலில் 30 வது கிளையை கண்கவர் அரங்காக மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது.இந்தக் கிளையை SIRA நிறுவனம் கையாள உள்ளது.  

இதன் திறப்பு விழாவில் டிராகன் திரைப்பட நாயகி காயடு லோகர்,  திரு. சி. கே. குமாரவேல், ரஷன்தா, ஆறுமுகம், மல்லிகா சிந்து  ஆகியோர் கலந்து கொண்டனர். PAGE 3 LUXURY SALON  தலைமை நிர்வாக அதிகாரி, சண்முக குமார் தலைமையில்,  கவர்ச்சிகரமான  வருகையின் மூலம் காயடு லோகர் இந்த திறப்பு விழாவிற்கு மெருகூட்டினார்.

 இந்நிகழ்ச்சி,  அழகுக் கலை நிபுணர்கள், மிக முக்கியஸ்தர்கள் மற்றும் உரிமையாளர்கள், அவர்களது நண்பர்கள் என  நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது அவர்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியை தங்களது மகிழ்ச்சியால் வரவேற்றனர்.  இந்த கிளை அதிநவீன ஆடம்பர சேவைகளின் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. 

இந்த திறப்புவிழாவின் சிறப்பம்சமாக, திரு. சி. கே. குமாரவேல் அவர்களின் கலந்துரையாடல் அமைந்தது. அதில், காயடு லோகர் சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக சுய கவனிப்பு, நம்பிக்கை மற்றும் அழகின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். அவரது அனுபவப்பகிர்வு பார்வையாளர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.  

இது அழகுத் துறையில் PAGE 3 இன் மாற்றத்திற்கான பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. ரிப்பன் வெட்டி PAGE 3 LUXURY SALON ஐ திறந்து வைத்த காயாடு லோஹர் ஒரு பிரமாண்டமான கேக்கை வெட்டி திறப்பு விழா மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.   

 மேலும் திறப்பு விழாவின் மற்றொரு அம்சமாக, சிறந்த செயல்திறன் கொண்ட உரிமையாளர்கள் மற்றும் பேஜ் 3 இன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

NATURALS அழகு நிலையத்தின் இணை நிறுவனர் C.K.குமாரவேல் உரையாற்றும் போது,  PAGE 3 எப்போதும் அழகு என்பதன் அளவுகோலை விட மேம்பட்டதாக சேவை வழங்குகிறது என்றார். இது மாற்றம், நம்பிக்கை மற்றும் ஆடம்பர அழகுத் துறையில் புதிய அளவுகோல்களை அமைப்பது பற்றியது என்றும், ஒவ்வொரு புதிய கிளையிலும், தொடர்ந்து தரத்தை உயர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.  மேலும் இந்த VR மால்  கிளை இந்தியா முழுவதும் உயர்நிலை அழகுக்கலையை அணுகுவதற்கான  பார்வையை நோக்கிய மற்றொரு படியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

PAGE 3 LUXURY SALON இன்  தலைமை நிர்வாக அதிகாரி ஷண்முகா குமார், இந்திய அழகுத் தொழில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றும்,  மேலும் இந்த மாற்றத்தின் தலைமையில் PAGE 3 உள்ளது என்றும் கூறினார்.  உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம், தலைசிறந்த பிராண்டுகள் மற்றும் ஒரு அதிவேக அழகுக்கலை அனுபவத்தை இணைத்து ஆடம்பர அழகுக்கலை செயல் திறனை மறுவரையறை செய்வதே தங்கள் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார். 

ஆடம்பர அழகுக் கலையில் 15 ஆண்டு கால பாரம்பரியத்துடன், PAGE 3 LUXURY SALON,  ஒரு தொழில்துறை தலைமையாக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பிரபல நடைமுறைகளில் உயர்மட்ட அழகுக்கலை அனுபவங்களை வழங்குகிறது. 

30 அதிநவீன கிளைகளுடன் ஆறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் PAGE 3 இப்போது ஒரு லட்சிய வளர்ச்சிப் பாதையில் உள்ளது.  2025 ஆம் ஆண்டில் 50 கிளைகளையும்,  2027 ஆம் ஆண்டில் 100 கிளைகளை இலக்காகக் கொண்டும்  செயல்பட்டு வருகிறது.  இது பிரீமியம் ஸ்டைலிங் மற்றும் அதிநவீன அழகு தீர்வுகளுடன் இந்ததுறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி - அவர் நடிக்கும் ' ஆர் பி எம் - R P M' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

*நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி - அவர் நடிக்கும் ' ஆர் பி எம் - R P M' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

*ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு*

*டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான 'ஆர் பி எம் (RPM) ' படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்* 

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. 

இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி  இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது

எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர்களுடன் கிரியா டெக்  நிறுவனர்-  தொழிலதிபர் பாஸ்கரன், 'எம் ஆர் டி மியூசிக்' முருகன், 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்' சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர்,  தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், '' இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்..  எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி  தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார். அந்த சந்திப்பின்போது, 'நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?' என கேட்டார். அந்தப் பாடலைக் கேளுங்கள். தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னேன். 'தண்ணீர் தண்ணீர் ' எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய 'கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே..' என்ற பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலாததற்கு மன்னிக்கவும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயிற்சி பெற்று அந்த பாடலை நேரில் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன். 

'சிங்கார வேலனே' என்ற பாடலை பாட இயலுமா! என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன்.  

அவர் மிகுந்த திறமைசாலி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்... நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர். 
அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும். 

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. 

அதன் பிறகு அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன்.‌ அந்தப் பாடலை இங்கு நான் பாட விரும்புகிறேன். இந்த பாடலுக்கான வரிகள் நம்மிடமிருந்து மறைந்த அந்த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும்.

மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 

அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலுத்தினேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை.  நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் 'ஆக்சன்' என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது வியந்து போனேன். 

இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வர் கார்த்திக் - நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. 

ஆர் பி எம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இயக்குநர் பிரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினரும் பரிபூரணமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.  இந்தத் திரைப்படத்திற்கு அனைவருடைய ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.

டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், '' டேனியல் பாலாஜி சின்ன குழந்தையாக இருக்கும்போதே ரொம்ப பக்தி. மூன்று வயதில் இருந்தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான்.
காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். 

அவன் நடிச்ச படம். இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.  

கௌதம் மேனன், பாலாஜி இவர்களெல்லாம் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் அவனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. பிறகுதான் வந்தது.  முதலில் அவர்கள் அப்பா வேண்டாம் என்று தான் சொன்னார். பிறகு 'வேட்டையாடு விளையாடு ' படத்தை பார்த்துவிட்டு அவர் சந்தோஷம் அடைந்தார்.  எப்போதும் அவன் ...அவன் இஷ்டப்படி தான் இருப்பான். 

கடைசி அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, 'நான் இருக்க மாட்டேனே!!' என்று சொன்னான்.  நான் இன்னும் இருக்கும்போது... அவன் இல்லையே!! என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது '' என்றார்.


கல்வியாளர் - ஆராய்ச்சியாளர் - தொழிலதிபர் பாஸ்கரன் பேசுகையில், '' கல்லூரியில் படிக்கும் போது வாரம் இரண்டு திரைப்படங்களை பார்ப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் திரைப்படங்களை பார்ப்பேன். தொழில் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது தான் சினிமாவின் வீரியம் எனக்கு புரிந்தது. 

மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் சினிமா தான். ஏனென்றால் அங்கு பள்ளி படிப்பில் தமிழ் கிடையாது. 

அமெரிக்காவில் கூட கடந்த 20 ஆண்டுகளாக தான் நம்மவர்கள் தமிழில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் தமிழர்கள் இன்று தமிழ் பேசுகிறார்கள் என்றால் அது திரைப்படங்களை பார்த்து தான். புத்தகத்தை வாசித்து தமிழ் தெரிந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்காவின் என்னுடைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் தமிழ் பேசுவார்கள். 
நான் இது இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்.. தமிழ் திரைப்படத்தில் ஒரு பக்கம் கான்ட்ரவர்ஸியல் பேசினாலும்.. மற்றொரு பக்கம் சமூகத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

இந்தோனேசியாவில் ஒரு ஆலயத்தில் ஒரு சின்ன பெண் முருகனின் பாடலை அற்புதமாக பாடினார். அந்தப் பெண் அந்த நாட்டை சேர்ந்த ஐந்தாம் தலைமுறை பெண். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியவில்லை. ஆனால் தமிழில் அற்புதமாக பாடுகிறார். அந்தப் பாட்டின் பொருள் தெரியவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தப் பாடலை அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். 

மொழி மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சினிமாவை பார்க்க வேண்டும். புத்தகத்தை வாசிக்குமாறு கேட்டால் மறுத்து விடுவார்கள்.

அதில் தருணத்தில் சினிமாக்காரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். உங்களுடைய படத்தின் வன்முறையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.

தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாராகும் திரைப்படங்களை பார்த்து தான் மொழியை பேசுகிறார்கள். 

இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைவரது ஆசீர்வாதமும், ஆதரவும் இந்தத் திரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.

இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், '' அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன். 
அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை. 

சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி. 

அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.

சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

*’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. 

நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். 

நடிகர் சத்யா யாது, “நான் உத்ரபிரதசேத்தை சேர்ந்தவன். ‘சாரி’ படம்தான் எனக்கு அறிமுகப் படம். இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ‘சாரி’ திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் படத்தை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்” என்றார். 

தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா, “ராம் கோபால் வர்மா சாருடன் எனக்கு இது முதல் படம். நல்ல படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்”.

கேரள விநியோகஸ்தர் ஷானு, “உலகம் முழுவதும் இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இப்போது சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ்டுடியோஸ் வினோத் அவர்களை படம் பார்க்க அழைத்தேன். படம் பிடித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விநியோகிக்க கேட்டுக் கொண்டோம். 100 செண்ட்ருக்கும் மேலாக தமிழகத்தில் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொன்னார். படத்தை புரமோட் செய்யுங்கள்” என்றார். 

தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத், “இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ படம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டேன். விநியோகஸ்தராக இது என்னுடைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா, “ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில்  கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது” என்றார்.

Saturday, March 29, 2025

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து*

*வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து*


வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. 

மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.


கௌதமன் இயக்கும்
புரட்சிப் படம்
படையாண்ட மாவீரா 

அனைத்துப் பாடல்களையும்
எழுதியிருக்கிறேன்

ஒவ்வொரு பாடலையும்
வந்து வாங்கிச் செல்வார்;
வாசித்து வழங்கச் சொல்வார்

இந்தப் பாடலை
வாசிக்கும் பொழுது
குளமான கண்களோடு
கும்பிட்டுக்கொண்டே எழுந்தார்

அவர் கைகளில்
பாட்டுத்தாளை ஒப்படைத்தேன்
நல்ல ரசிகனுக்கு
நல்ல பாடல் அமையும் 

இசை: ஜி.வி.பிரகாஷ்

பல்லவி:

"மாவீரா மாவீரா
வாவா வீரா மாவீரா!

நதியில் குளித்தது போதும்
இனிமேல்
குருதியில் குளித்து வா வா
பொடிநடை போட்டது போதும்
இனிமேல்
புலிநடை போட்டு வா வா

ஆதித் தமிழின்
அடையாளமே வா
ஆதிக்கம் அழிக்கும்
படையாழமே வா

ஆதவனை உன்
இடுப்பில் கட்டு
ஆயிரம் யானையைக்
கால்களில் கட்டு

காக்கும் கடவுள் அம்சம் நீதான்
வன்னிக் காட்டின் வம்சம் நீதான்

ஆயிரம் கோயில் ஆராதிக்கும்
அய்யனாருமே நீயேதான்

எரிமலை பொடிபட
எதிரிகள் அடிபட
கோழைகள் வழிவிட
ஏழைகள் வழிபட
எழுந்த மாவீரன் நீயேதான்

சரணம்:

உயிரைப் பிரிவது
மட்டுமா சாவு?
ஊரைப் பிரிவதும்
சாவுதானடா!
மண்ணகம் எல்லாம்
மண்ணகம் அல்ல
மானம் வீரம் வாழ்வுதானடா

தமிழன் யார்க்கும் சோறு கொடுப்பான்
மண்ணைத் தொட்டால்
திருப்பி அடிப்பான்

வீரத் தமிழன் மானத் தமிழன்
மூன்று இடத்தில் திருப்பி அடித்தான்

ஒருகாடு எங்கள் சந்தனக்காடு
மறுகாடு இந்த முந்திரிக்காடு
எல்லாவற்றிலும் மேலாய் இருப்பது எங்கள் எங்கள் வன்னிக்காடு

மாவீரா மாவீரா
வா வா வீரா மாவீரா!


படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் மிகவும் உக்கிரமான நான்கு சண்டைக் காட்சிகளை "ஸ்டண்ட்" சில்வா வடிவமைக்க  நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், "தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை '"கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன் கவனிக்கின்றனர். இப்படைப்பைப் பற்றி இயக்குநர் வ.கௌதமன் பேசும் பொழுது நேர்மையோடும் அறத்தோடும் படைக்கப்பட்ட "படையாண்ட மாவீரா" மொழி கடந்து, இனம் கடந்து மனித மனங்களை கொள்ளையடிப்பான், ஆன்மம் அதிர மெய் சிலிர்க்க வைப்பான். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இப்படைப்பு வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது" என மகிழ்ச்சி பொங்க நிறைவு செய்கிறார்..

ராசய்யா கண்ணன் தயாரிப்பில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பைலா’!

ராசய்யா கண்ணன் தயாரிப்பில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பைலா’!

’ராசய்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் ராசய்யா கண்ணன், ’கதையல்ல நிஜம்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தம்பியாக ராஜ்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர நடிகை மிச்சலா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என்.இளங்கோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

’சேஸிங்’ படத்தை இயக்கிய K.வீரக்குமார் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, ’அழகிய தீயே’, ‘மொழி’, ’36 வயதினிலே’, ‘கோட்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார்.

”அய்யோ சாமி..” ஆல்பம் பாடல் புகழ் இலங்கை இசையமைப்பாளர் சனுகா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை இலங்கை புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்வின் எழுதியிருக்கிறார். பாலுமகேந்திரா, ரத்தினவேல், ஆர்த்தர் ஏ.வில்சன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஏ.எஸ்.செந்தில்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் தென்னரசு கலை இயக்குநராக பணியாற்ற, திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார் நிர்வாக தயாரிப்பாளர் சுகிந்தன் சக்திவேல் கவனிக்க தயாரிப்பு மேற்பார்வை கோகுல்நாத் பணியாற்றுகிறார்.
நீல்கிரிஸ் முருகன் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நீலகிரி முருகன் மற்றும் கே.ஆர்.எம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.ஆர்.முருகானந்தம் இணை தயாரிப்பில் உருவாகும் ‘பைலா’ படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரம், உத்திரகோச மங்கை அம்மன் கோவில், வழி விடு முருகன் கோவில்களில் தொடங்கி, தற்போது இராமேஸ்வரம், இலங்கை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Friday, March 28, 2025

MoonBakes Offers A Celestial Feast This Ramzan with its Exclusive Menu for the Season


MoonBakes Offers A Celestial Feast This Ramzan with its Exclusive Menu for the Season

Chennai, 28 March, 2025 – Inviting Chennaiities to transform their festive gatherings this Ramzan, Moonbakes, Chennai’s finest dessert and pastry studio, has introduced a divine selection of handcrafted desserts, each designed to capture the essence of the season. Featuring four extraordinary creations including Toffee Crunch Pudding, Chocolate Pistachio Cheesecake, Pistachio Kunafa Pull-Up Cake, and the dazzling Sun and Moon Cake, the brand brings rich flavors to this timeless tradition. Whether it's an intimate Iftar with family or a grand Suhoor celebration, these limited-edition delights promise to add an extra layer of sweetness to moments of togetherness. 

The Toffee Crunch Pudding is a heartwarming classic reimagined. A crunchy digestive biscuit base provides the perfect contrast to the luscious, homemade toffee sauce drizzled atop, making every spoonful a delightful indulgence. Nostalgic and comforting, this dessert is the perfect companion for cherished family moments during the holy month. On the other hand, for those who revel in layers of decadence, the Chocolate Pistachio Cheesecake delivers a luxurious experience. A smooth chocolate cheesecake base is paired with caramelized pistachio praline, adding a satisfying crunch. The final touch is a crown of golden, ghee-roasted kataifi shreds which elevates the flavors, ensuring a symphony of textures in every bite.

Bringing a refined fusion of tradition and innovation, the Pistachio Kunafa Pull-Up Cake is a culinary masterpiece. Rich chocolate sponge is layered with the crisp, nutty essence of pistachio kunafa, offering a harmonious blend of textures and flavors. As the acetate collar is lifted, a smooth cascade of velvety pistachio cream elegantly envelops the cake, creating a captivating moment of indulgence.

Completing the collection is the Sun and Moon Cake, a true embodiment of the beauty of Ramzan nights. A deep, shimmering blue crescent moon embraces a radiant bronze-gold sun, symbolizing the duality of night and day during this sacred time. Available in a variety of flavors, this breathtaking creation is a statement piece for the celebrations.

Crafted with passion and precision, Moonbakes' exclusive Ramzan collection is a perfect blend of artistry and flavor, bringing a modern twist to festive indulgence. Available for a limited time, these desserts promise to make Ramzan gatherings truly unforgettable.

About Moonbakes:
Moonbakes is a cloud kitchen that was started by Dharani Ranganathan  in 2021. It's one of a kind bespoke bakeries in Chennai that offers a wide variety of desserts that are premium and rich in taste. In order to capture the taste buds of health enthusiasts, Moonbakes has recently forayed into healthy desserts domain with their sister brand "Healthy Moonbakes" that offers a variety of desserts that are Gluten free, Vegan and Sugar free.

கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில்

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா  திரையில் !!

ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில், S.முருகன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம்  “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்....

*நடிகை சுதா பேசியதாவது...* 
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. 

*நடிகை சாந்தி பேசியதாவது...* 
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இயக்குநருக்கு நன்றி, என் முதல் படம் என்னை நம்பி சான்ஸ் தந்ததற்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி

*நடிகர் வைகுண்டம் பேசியதாவது பேசியதாவது...* 
இந்தப்படத்தில் வில்லன் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, படம் மிக நல்ல எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது. மக்களிடம் சேர்க்க வேண்டியது பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் பொறுப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

*ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த் பேசியதாவது...* 
மேடையில் இருக்கும் அனைவருக்கும் நன்றி, தயாரிப்பாளரை இப்போது தான் இரண்டாம் முறையாகப் பார்க்கிறேன். இயக்குநர் விக்னேஷ் என் நண்பர் அவர் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது, உங்களோடு தான் படம் செய்வேன் என்றார், அதே போல எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார், தயாரிப்பாளர் யாருக்கும் சம்பள பாக்கி வைக்கவில்லை, நான் பார்த்ததில் மிக நல்ல தயாரிப்பு நிறுவனம் இது. இன்னும் நீங்கள் பல படங்கள் தயாரிக்க வேண்டும், இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி. 

*நடிகர் அஷ்வின் பேசியதாவது...* 
மிக மிக மகிழ்ச்சி, மிக அருமையான டீம் இது, இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் ஷீட்டிங்க் என்பதே கஷ்டம், இந்தத் திரைப்படத்தை இந்த அளவு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷ் மிக நல்ல இயக்குநர். மிக அருமையாக இப்படத்தைத் தந்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியது மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி. 

*நடிகர் ஹர்ஷத் பேசியதாவது...*
நான் இங்கு இருக்க இயக்குநர் நெல்சன் அண்ணா தான் காரணம் அவருக்கு நன்றி.  இயக்குநர் விக்னேஷ் நான் ஒரு ஷீட்டில் இருந்த போது போன் செய்தார், அவர் அணுகிய  விதம், அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை வில்லனாக நடிக்க கேட்டார். அவருக்கு ரொம்ப நல்ல மனசு. எல்லோரும் அவர் மீதான அன்பில் பணியாற்றினார்கள். உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. மீடியா இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

*பாடாலாசிரியர் அஸ்மின் பேசியதாவது....*
2012 ல் விஜய் ஆண்டனியால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப் பட்டேன்,  அவருக்கு என் நன்றி. இயக்குநர் விக்னேஷ் அவர்களை, இப்படத்தில் ஒரு பாடல் எழுதத்தான் சந்தித்தேன், அந்தப்பாடல் பிடித்துப் போய், எல்லாப்பாடல்களையும் எழுதும் வாய்ப்பைத் தந்தார். எல்லோருக்கும் இப்படப் பாடல்கள் பிடித்திருக்குமென நம்புகிறேன். அனைத்து மீடியா நண்பர்களும் இப்படத்திற்கு ஆதரவைத்தர வேண்டும் நன்றி. 

*நாயகன் நிஷாந்த் பேசியதாவது...* 
இந்த வருடம் மிகுந்த ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. எனது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. கொஞ்ச நாள் பொறு தலைவா மிக நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர் யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல், மிக பொறுப்புடன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் மிக அட்டகாசமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்திற்கு மீடியா நண்பர்கள் முழு ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி. 

*இசையமைப்பாளர் சமந்த் நாக் பேசியதாவது...* 
தயாரிப்பாளரை இன்று தான் முதல் முறையாகப் பார்க்கிறேன், மிக நல்ல தயாரிப்பாளர். விக்னேஷுக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும், ஆனால் எல்லாம் படத்துக்காகத் தான். மிக அருமையாகப் படத்தை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் அஸ்மின் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. என்னுடன் வேலை பார்த்த பிரவீனுக்கு நன்றி. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி. 


*இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது...* 
கொஞ்ச நாள் பொறு தலைவா இந்த விழா ஒரு குடும்ப விழாவைப் போல உள்ளது. எல்லோரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். எல்லோரும் தயாரிப்பாளரைப் பற்றி மிக மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். தயாரிப்பாளர் முருகன் அவர்களுக்கு நன்றி. உழைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் தந்த முதல்பட தயாரிப்பாளருக்காக, இப்படம் ஓட வேண்டும். இயக்குநர் விக்னேஷ் மிக அருமையாக இயக்கியுள்ளார். பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள். ஈழத்து கவிஞர் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், அவருக்குத் தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தைத் தரும். நடிகர் நிஷாந்த் அருமையாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

*டிரெய்லர் இசையமைப்பாளர்  ஷாஜகான் பேசியதாவது...*
இந்தப்படக்குழுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இந்த அனுபவம் மிகப் புதுமையாக இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி. 

*ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில் கலியமூர்த்தி பேசியதாவது...* 
ஆரூத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது, அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து உள்ளோம். எப்போதும் காமெடி படத்திற்குத் தனி வரவேற்பு உண்டு. மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள். நான் படம் பார்த்தேன் எனக்குப் படம் மிகவும் பிடித்தது. இப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

*நடன இயக்குநர் சபரீஷ்* 
இந்தப்படத்தில் இரண்டு பாடல்கள் வேலை செய்துள்ளேன், ஒரு பாடல் தான் வேலை செய்வதாக இருந்தது என் வேலையைப் பார்த்து எனக்கு இரண்டு பாடல் வாய்ப்பைத் தந்தார் இயக்குநர் விக்னேஷ். அவருக்கு என் நன்றி. இப்படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

*இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் பேசியதாவது...*
என்னை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் முருகன் சாருக்கு என் நன்றி. ஒரு நாள் கூட அவர் ஷீட்டிங்க் வந்ததே இல்லை, முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கை மீடியா நண்பர்கள் தான் எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தர  வேண்டும்.  ஒரு நல்ல படம் தந்துள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி. 

"வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.  நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன்  காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 
பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். 
ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கிறார். எடிட்டிங் விது ஜீவா. 
இத்திரைப்படத்தை,, 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வெற்றி கொடி நாட்டிய, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஆரூத்ரன் லேண்ட் டெவலப்பர்ஸ்  நிறுவனத்தின், மற்றொரு அங்கமான, ஆரூத்ரன் பிக்சர்ஸ் சார்பில் S.முருகன் தயாரித்து, வழங்குகிறார்.

Thursday, March 27, 2025

வீர தீர சூரன் - திரைப்பட விமர்சனம்


விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படம் ஒரு பிரம்மாண்டமான மாஸ் ஆக்‌ஷன் டிராமா. எஸ்.யு. அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், யதார்த்தம் மற்றும் உயர்தர ஆக்‌ஷனின் கலவையாகும், எனவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக அமைகிறது.

எஸ்.யு.அருண்குமாரின் கதைசொல்லல் எளிமையானது ஆனால் பயனுள்ளது, படம் முழுவதும் படிப்படியாக பதற்றத்தை உருவாக்குகிறது. படம் ஒரே இரவில் விரிவடைந்து, அதன் தீவிரத்தை அதிகரித்து, ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை ஈர்த்து வைத்திருக்கிறது.

விக்ரம் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நடிப்பை வெளிப்படுத்துகிறார், அவரது ரசிகர்கள் விரும்பும் கவர்ச்சியையும் தீவிரத்தையும் மீண்டும் கொண்டு வருகிறார். அவரது கதாபாத்திரம் பல அடுக்குகளாக உள்ளது, அவரது முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோ ஆளுமை மற்றும் உணர்ச்சி ஆழம் இரண்டையும் வெளிப்படுத்துகிறது, இது அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது.

ஆக்‌ஷன் பிரியர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள்! இந்தப் படத்தில் நன்கு நடனமாடப்பட்ட மற்றும் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன, அவை பச்சையாகவும் உண்மையானதாகவும் உணர வைக்கின்றன. சண்டைக்காட்சிகள் குறைபாடற்ற முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன, ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜி.வி.பிரகாஷின் துடிப்பான பின்னணி இசை பதற்றத்தை உயர்த்துகிறது, படத்திற்கு ஒரு சிலிர்ப்பூட்டும் அம்சத்தை சேர்க்கிறது.

அதன் அடிப்படையான அணுகுமுறை இருந்தபோதிலும், படம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துவதில் தயங்குவதில்லை. திருப்பங்களும் திருப்பங்களும் உற்சாகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன, இது இருக்கையின் நுனியில் வரும் அனுபவமாக அமைகிறது.

அதன் கவர்ச்சிகரமான கதைசொல்லல், தீவிரமான அதிரடி மற்றும் அற்புதமான நடிப்புகளுடன், வீர தீர சூரன் திரையரங்குகளில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாகும்.

வீர தீர சூரன் (PART 2) - CAST AND CREW

HR PICTURES வழங்கும் தயாரிப்பு - HR PICTURES

ெவளியீடு - 5STAR SENTHIL 

தயாரிப்பாளர்கள் - ரியா ஷிபு, மும்தாஸ் M

CAST

சீயான் விக்ரம் as காளி

S.J. சூர்யா as SP அருணாகிரி சுராஜ் ெவஞ்சரமுடூ as கண்ணன்

துஷாரா விஜயன் as கைலவாணி மாருதி பிரகாஷ் ராஜ் as ெபரியவர் பாலாஜி as ெவங்கட்

ரேமஷ் இந்திரா as ெபரியய்யா

மாலா பார்வதி as ெபரியவர் மைனவி ஶ்ரீஜா ரவி as அம்மா

CREW

இயக்குனர் - S.U. அருண் குமார் எழுத்தாளர் - S.U. அருண் குமார் ஒளிப்பதிவு - ேதனி ஈஸ்வர் இைச - G.V. பிரகாஷ் குமார் படத்ெதாகுப்பு - பிரசன்னா G.K கைல - C.S. பாலசந்தர்

சண்ைடப் பயிற்சி - பீனிக்ஸ் பிரபு தயாரிப்பு - H.R PICTURES

தயாரிப்பாளர்கள் - ரியா ஷிபு, மும்தாஸ் M

ெவளியீடு - 5STAR SENTHIL PRO - யுவராஜ்


 

" EMI (மாத்தவணை) " - திரைவிமர்சனம்

"EMI" என்பது அதிகப்படியான செலவினங்களின் அபாயங்கள் மற்றும் நிதி பொறுப்பற்ற தன்மையின் ஆபத்துகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டும்...