Sunday, March 30, 2025

PAGE 3 LUXURY SALON 30 வது கிளையை VR மாலில் நடிகை கயாடு லோஹர் திறந்து வைத்தார்.*

*PAGE 3 LUXURY SALON  30 வது கிளையை VR மாலில் நடிகை கயாடு லோஹர் திறந்து வைத்தார்.*

இந்தியாவின் அதிக மக்களால் பரிந்துரைக்கப்படும், ஆடம்பர மற்றும் உயர்தர சிகை அலங்காரம், அழகு நிலையமான PAGE 3   சென்னை VR மாலில் 30 வது கிளையை கண்கவர் அரங்காக மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது.இந்தக் கிளையை SIRA நிறுவனம் கையாள உள்ளது.  

இதன் திறப்பு விழாவில் டிராகன் திரைப்பட நாயகி காயடு லோகர்,  திரு. சி. கே. குமாரவேல், ரஷன்தா, ஆறுமுகம், மல்லிகா சிந்து  ஆகியோர் கலந்து கொண்டனர். PAGE 3 LUXURY SALON  தலைமை நிர்வாக அதிகாரி, சண்முக குமார் தலைமையில்,  கவர்ச்சிகரமான  வருகையின் மூலம் காயடு லோகர் இந்த திறப்பு விழாவிற்கு மெருகூட்டினார்.

 இந்நிகழ்ச்சி,  அழகுக் கலை நிபுணர்கள், மிக முக்கியஸ்தர்கள் மற்றும் உரிமையாளர்கள், அவர்களது நண்பர்கள் என  நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது அவர்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியை தங்களது மகிழ்ச்சியால் வரவேற்றனர்.  இந்த கிளை அதிநவீன ஆடம்பர சேவைகளின் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. 

இந்த திறப்புவிழாவின் சிறப்பம்சமாக, திரு. சி. கே. குமாரவேல் அவர்களின் கலந்துரையாடல் அமைந்தது. அதில், காயடு லோகர் சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக சுய கவனிப்பு, நம்பிக்கை மற்றும் அழகின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். அவரது அனுபவப்பகிர்வு பார்வையாளர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.  

இது அழகுத் துறையில் PAGE 3 இன் மாற்றத்திற்கான பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. ரிப்பன் வெட்டி PAGE 3 LUXURY SALON ஐ திறந்து வைத்த காயாடு லோஹர் ஒரு பிரமாண்டமான கேக்கை வெட்டி திறப்பு விழா மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.   

 மேலும் திறப்பு விழாவின் மற்றொரு அம்சமாக, சிறந்த செயல்திறன் கொண்ட உரிமையாளர்கள் மற்றும் பேஜ் 3 இன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

NATURALS அழகு நிலையத்தின் இணை நிறுவனர் C.K.குமாரவேல் உரையாற்றும் போது,  PAGE 3 எப்போதும் அழகு என்பதன் அளவுகோலை விட மேம்பட்டதாக சேவை வழங்குகிறது என்றார். இது மாற்றம், நம்பிக்கை மற்றும் ஆடம்பர அழகுத் துறையில் புதிய அளவுகோல்களை அமைப்பது பற்றியது என்றும், ஒவ்வொரு புதிய கிளையிலும், தொடர்ந்து தரத்தை உயர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.  மேலும் இந்த VR மால்  கிளை இந்தியா முழுவதும் உயர்நிலை அழகுக்கலையை அணுகுவதற்கான  பார்வையை நோக்கிய மற்றொரு படியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

PAGE 3 LUXURY SALON இன்  தலைமை நிர்வாக அதிகாரி ஷண்முகா குமார், இந்திய அழகுத் தொழில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றும்,  மேலும் இந்த மாற்றத்தின் தலைமையில் PAGE 3 உள்ளது என்றும் கூறினார்.  உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம், தலைசிறந்த பிராண்டுகள் மற்றும் ஒரு அதிவேக அழகுக்கலை அனுபவத்தை இணைத்து ஆடம்பர அழகுக்கலை செயல் திறனை மறுவரையறை செய்வதே தங்கள் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார். 

ஆடம்பர அழகுக் கலையில் 15 ஆண்டு கால பாரம்பரியத்துடன், PAGE 3 LUXURY SALON,  ஒரு தொழில்துறை தலைமையாக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பிரபல நடைமுறைகளில் உயர்மட்ட அழகுக்கலை அனுபவங்களை வழங்குகிறது. 

30 அதிநவீன கிளைகளுடன் ஆறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் PAGE 3 இப்போது ஒரு லட்சிய வளர்ச்சிப் பாதையில் உள்ளது.  2025 ஆம் ஆண்டில் 50 கிளைகளையும்,  2027 ஆம் ஆண்டில் 100 கிளைகளை இலக்காகக் கொண்டும்  செயல்பட்டு வருகிறது.  இது பிரீமியம் ஸ்டைலிங் மற்றும் அதிநவீன அழகு தீர்வுகளுடன் இந்ததுறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

Test - திரைவிமர்சன

இயக்குனர் சஷிகாந்தின் நெட்ஃபிக்ஸ் ஸ்போர்ட்ஸ் த்ரில்லர் 'டெஸ்ட்', வழக்கமான கதைக்கள இயக்கவியலை விட கதாபாத்திர வளர்ச்சிக்கு முன்னுரிமை ...