சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ஜியோ இந்தியா அறக்கட்டளை சார்பில் 13 பெண்களுக்கு, 2025 ஆம் ஆண்டிற்கான WOW Wonder Woman விருதுகள் வழங்கப்பட்டன
ஜியோ இந்தியா அறக்கட்டளை சென்னை துர்யா நட்சத்திர விடுதியில் 2025ஆம் ஆண்டிற்கான WOW Wonder Woman விருது விழாவை நடத்தி சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் திருமதி. சாரதா, டாக்டர், எம்.சி. சாரங்கன் ஐபிஎஸ், யாஸ்மீன் ஜாவஹர் அலி,நடிகை இனியா நிறுவனர் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Rtn.PHF AKS.நல்லமை ராமநாதன் - நிர்வாக இயக்குநர், அபிராமி மெகா மால்,திருமதி சித்தாரா சாரங்கன் - சென்னை மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர், திருமதி மகாலட்சுமி அஸ்வின் - TAPAS கலாச்சார அறக்கட்டளையின் கலை இயக்குநர், திருமதி.ஜி.ஸ்ரீ வித்யா - ரவீந்திர சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,திருமதி விஷ்ணுப்ரியா எச். பட் - பாடகர், திருமதி ஷாலினி சிங் பாலாஜி - பாப் பாடகி, திருமதி மல்லிகா சவுத்ரி - டிஜிட்டல் படைப்பாளர், சமூக ஊடகவியலாளர், திருமதி.அக்ஷயா.பி கர்நாடக பாடகர் மற்றும் வயலின் கலைஞர், திருமதி. ஆர்.ஜே. மிருதுலா - ரேடியோ ஜாக்கி, பிக் எஃப்.எம், திருமதி. ஷீத்தல் எச். ரஜனி - பிராந்திய மனிதவளத் தலைவர், டி.சி.எஸ் சென்னை, திருமதி.நிரூபா பால்சன் - தலைவர் - பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, டி.சி.எஸ் சென்னை, திருமதி.அஞ்சு தேவதாஸ் - இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பனியா, திருமதி. வைஷாலி தண்டா - நகைகள் வடிவமைப்பாளர் ஆகிய 13 பேருக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் பிரியா ஜெமிமா, பழங்குடியின பெண்களின் மேம்பாட்டுக்காக 10 தையல் இயந்திரங்களை வழங்கினார்.
விருது பெற்ற அனைவரும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும், கிராமப்புற பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் நிகழ்ச்சியின் அமைப்பாளரான ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் பிரியா ஜெமிமா தெரிவித்தார்.