Wednesday, March 19, 2025

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!


 மோகன்லால்- பிரித்திவிராஜின்  “எம்புரான்”  திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !! 


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம்,  வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்”  திரைப்படம் உருவாகியுள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  மலையாள சினிமாவில்  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. 

இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 2023 அக்டோபர் 5-ம் தேதி, ஃபரிடாபாத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு, உலகம் முழுக்க பல இடங்களில் நடைபெற்றது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.  

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார். 

“எம்புரான்” படத்தின்  விளம்பரப் பணிகள் படத்தைப் போலவே, பிரம்மாண்டமாக துவங்கி நடந்து வருகிறது. 2025 ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தில் கொச்சியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ டீசர், டிஜிட்டல் தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிப்ரவரி 9, 2025-ல் ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல்களில், படத்தின் கதாப்பாத்திரங்கள் 2-3 நிமிட வீடியோக்கள் மூலமாகக் குறுகிய கால இடைவெளியில் வெளியானது. பிப்ரவரி 26, 2025 அன்று மோகன்லால் குரேஷி- ஆப்ரஹாம் எனும் ஸ்டீபன் நெடும்புள்ளியாக அறிமுகப்படுத்தப்பட்டது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்”, இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 2025 மார்ச் 27 அன்று ஸ்டீபன் நெடும்புளஙளியை திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!


Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments

Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments National, September 18,...