Monday, March 3, 2025

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

*BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!*

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு,  இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார்.

இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்து,  கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் படைப்பாக உருவாக்கவுள்ளார். 

பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு அழகான வாழ்வியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. 

இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி.G ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் பங்குபெறும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாக இருக்கிறது.

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...