Monday, March 3, 2025

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்!*

*இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்!*

ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் வரவேற்றார். இந்த ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைவர் இயக்குநர் விஜய். ராஜகிருஷ்ணன், ஹெட் ஆஃப் சவுண்ட், ராஜசேகரன் விஷுவல் பிரிவின் தலைவராகவும், முத்துகிருஷ்ணன் குரல் பிரிவின் தலைவராகவும் உள்ளனர்.

’டி ஸ்டுடியோஸ் போஸ்ட்’ அமைந்துள்ள இடம்: எண். 87/4, பிளாட் எண். 1A, 1B & 1D, சம்பு பிரசாத் அவென்யூ, சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு - 600 093

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...