*ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ், தொழில்முறை விருந்தோம்பல் கல்விக்கான THE GReaT PATASHALA எனும் யூட்யூப் சேனல் இந்திய சுற்றுலாத் துறையின் தெற்கு மண்டல இயக்குநர் திரு.வெங்கடேசன் தாத்தரேயன் மற்றும் ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு விக்ரம் கோட்டா தொடங்கி வைத்தனர்.*
ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ், தங்களது மாணவர்களின் பயிற்சிக்காக தொடக்கத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறை வீடியோக்களை அதாவது STANDARD OPERATING PROCEDURE (SOP)ஐ உருவாக்கியது.
இந்த முயற்சி ஹோட்டல் மேலாண்மை மாணவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் விருந்தோம்பல் திறமைகளுக்கு பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி மைல்கல் சாதனையாகும்.
ஏனெனில் தொழில்துறைக்கு இத்தகைய விரிவான கல்வி உள்ளடக்கத்தை வழங்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் ஆகும். கிராண்ட் சென்னை பை ஜி. ஆர். டி ஹோட்டலில் நடைபெற்ற துவக்க விழாவில் இந்திய சுற்றுலாத் துறையின் தெற்கு மண்டல இயக்குநர் திரு வெங்கடேசன் தாத்தரேயன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் சுற்றுலா ஆய்வுத்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் சோபனா தேவி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டீன் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஆனந்த், டாக்டர் எம். ஜி. ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் (மனிதநேயம் மற்றும் அறிவியல்) திரு பிரபு ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு, "விருந்தோம்பல் பயிற்சியின் அடிப்படைகள் மற்றும் வளர்ச்சி நிலை" குறித்த விவாதத்தில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
விருந்தோம்பல் பயிற்சியின் எதிர்காலம் குறித்த அவர்களது தொலைநோக்கு பார்வை சிறப்பான உரையாடலுக்கு பங்களித்தது. அனைவருக்குமான வாய்ப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ், மேலும் ஒரு தலைசிறந்த முன்னெடுப்பு மேற்கொண்டது. அது மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை உருவாக்க சென்னையைச் சேர்ந்த V- SESH நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நல்முயற்சி ஆகும்.
இந்த ஒத்துழைப்பு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை வழங்குவதற்கும், தொழில்முறை சுதந்திரத்தை அடையவும், தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் 'தி கிரேட் பாடஷலா' யூட்யூப் சேனலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜி. ஆர். டி ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸின் துணை நிர்வாக இயக்குனர் திரு. டி. நடராஜன், தங்கள் நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டுக் குழுவின் இந்த பயனுள்ள முன்முயற்சியைப் பாராட்டினார்.
விருந்தோம்பல் துறையில் தொழில்முறை புத்திசாலித்தனத்தை மேம்படுத்த பொருத்தமான வீடியோக்களை தொடர்ந்து தொகுக்குமாறும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்கள் இதன் மூலம் பயனடைய அவர் அழைப்பு விடுத்தார்.
ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு விக்ரம் கோட்டா, அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் வளர்ச்சியை உருவாக்குவதன் மூலமும் பரந்த பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இந்த முன்முயற்சி மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவும், ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்களுக்கு ஆதரவளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் துறை முழுவதும் தரத்தை உயர்த்துவதற்கான திறனை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த முன்முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமகால தொழில்துறை மற்றும் அடிப்படை விருந்தோம்பல் நடைமுறைகளை இணைக்கும் 75 க்கும் மேற்பட்ட வீடியோக்களின் தொகுப்பை ' தி கிரேட் பாடஷாலா' வழங்குகிறது. பில்லிங் செயல்முறைகள் குறித்த எஸ்ஓபி முதல் விருந்தினர்களின் செல்லப்பிராணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வரை இந்த சேனலில் இடம்பெற்றுள்ளன.
இது ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸின் அறிவு பகிர்வு மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு மற்றும் கற்றல் தொகுதிகளை அணுக, YouTube இல் @TheGreatPatashala ஐப் பார்வையிடவும்.