Monday, March 17, 2025

ஆர்வலர் அப்சராரெட்டியால் தொகுக்கப்பட்டு, NAC ஜுவல்லரி வழங்கிய, மகளிரை கௌரவிக்கும் Humanitarian விருதுகள், கௌரி அடப்பா, சிந்தூரா அரவிந்த் உள்ளிட்ட 9 பேருக்கு வழங்கப்பட்டன.

*  ஆர்வலர் அப்சராரெட்டியால் தொகுக்கப்பட்டு, NAC ஜுவல்லரி வழங்கிய, மகளிரை கௌரவிக்கும் Humanitarian விருதுகள், கௌரி அடப்பா, சிந்தூரா அரவிந்த் உள்ளிட்ட 9 பேருக்கு வழங்கப்பட்டன.*

சமூகத்தில் தாக்கத்தை  ஏற்படுத்திய, தங்கள் துறைகளில் சாதித்த, பெண்களை கொண்டாடும் மாலைபொழுதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் மதிப்புமிக்க Humanitarian விருதுகளில், பிரத்யேகமாக பெண்களை கௌரவிக்கும் இரண்டாம் ஆண்டு இது. 

 தடைகளை உடைத்து, தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் புதுமைகளால் வாழ்க்கையை மாற்றிய பெண்களை இந்த விருது அங்கீகரிக்கிறது. விருதாளர்களின் சமூக மனிதாபிமான பங்களிப்புகளை எடுத்துரைக்கும் வீடியோ காட்சிகளுடன் இந்த நிகழ்ச்சி ஆரவாரத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து,  பார்வையாளர்கள்  ஆத்மார்த்தமான இசை நிகழ்ச்சியால் ஈர்க்கபட்டனர். 

புகழ்பெற்ற பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான அப்சரா ரெட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் தனது தனித்திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இது அவரின் பரந்த, தெளிவான சிந்தனையை வெளிப்படுத்தியது.  நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தங்கள் துறைகளில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் பெண்களை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

 பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும்,  கொண்டாடுவதிலும் NAC யின் உறுதிப்பாட்டை  அதன் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமானுஜம் எடுத்துரைத்தார்.  விருது பெற்றவர்கள், ஒவ்வொருவரும் தங்கள்  சிறப்புக்காகவும் தாக்கத்திற்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 

கட்டிடக்கலையில் தொலைநோக்கு பார்வை கொண்ட கௌரி அடப்பா, தனது திரமைக்காக சர்வதேச பத்திரிகைகளால் பாரட்டப்பட்டவர்.  குறிப்பாக கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பை கொண்டாடும் AD100 இன் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து, கட்டிடக்கலைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டவர்.  அவருக்கு Humanitarian விருது வழங்கப்பட்டது.

 கல்வியாளர் சிந்துரா அரவிந்த்,  ப்ரிம்ரோஸ் பள்ளிகளில் தனது 18 ஆண்டு பயணத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

  சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒப்பனை கலைஞரான கார்த்திகா, தனது திருமண ஒப்பனைகளால் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம்  செல்வாக்கு  மிகுந்தவர்.  அழகை மறுவரையறை செய்வதில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு Humanitarian விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டார்.

 குழந்தைகள் பல் மருத்துவ நிபுணரான நிலயா, தனது அதிநவீன அணுகுமுறையுடன் குழந்தைகளின் பல் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக Humanitarian விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டார். 

 தமிழ்நாடு விலங்கு நல வாரிய உறுப்பினரான ஸ்ருதி, வழிதவறிப்போன விலங்குகளை நல்வாழ்வுபடுத்துவதிலும்,  கைவிடப்பட்ட விலங்குகளை மீட்பதிலும்  இடைவிடாத பணிகளை மேற்கொண்டதற்காக விருது பெற்றார்.  

 கல்வியாளரான சுப்தா தாதா, தனது அறக்கட்டளை மற்றும் பள்ளிகள் மூலம் தலைமுறைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக Humanitarian விருது வழங்கி கொண்டாடப்பட்டார். 

 பாரம்பரியமிக்க கோட்டா புடவைகளை உருவாக்கும் இந்திய நேசவாளர்களை ஆதரிப்பதற்கும் , ஊக்குவிப்பதற்கும் பூஜா சிங்கி க்கு Humanitarian விருது வழங்கப்பட்டது.  

  மூத்த பத்திரிகையாளரான சி.எஸ்.எஸ்.லதா, பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.

  ரெட்வுட் மாண்டிசோரியின் வெற்றியின் பின்னணியில் பெரும் சக்தியாக இருக்கும் மதுரா விஸ்வேந்திரனுக்கு கல்வி மற்றும் குழந்தை வளர்ச்சியில் அவரது முற்போக்கான அணுகுமுறைக்காக விருது வழங்கப்பட்டது.

 ஆன்மீக வழிகாட்டி, டாரட் ஜோதிட நிபுணர் மற்றும் எழுத்து மந்திர பயிற்சியாளரான அன்னபூர்ணா அபினேஷ், தனிநபர்களுக்கு தெளிவு மற்றும் மாற்றத்தைக் கண்டறிய உதவியதில் அவரது பங்கிற்காக Humanitarian விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டார். 

இந்நிகழ்ச்சியில் NAC ஜூவல்லரியின் சிறப்பு விளக்கக்காட்சியும் இடம்பெற்றது. இது பெண்களைக் கொண்டாடும் மற்றும் உயர்த்தும் முன்முயற்சிகளுக்கு அவர்களின் அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டியது.    

 திறமையையும் தாக்கத்தையும் அடையாளம் காண்பதில் தனது தீவிரக் கண்ணோட்டத்திற்கு பெயர் பெற்ற அப்சரா ரெட்டி, பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் உண்மையிலேயே தகுதியான மரியாதையைப் பெறுவதை உறுதி செய்வதில்,  தொடர்ந்து தீவிர செயல்பாடுகள் மூலம் முன்னிலை வகிக்கிறார். 

 தலைமுறை தலைமுறையாக பெண்ணினத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை அங்கீகரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இன்னும் சக்திவாய்ந்த தளமாக மகளிர் சிறப்புக்கான Humanitarian  விருதுகள் தொடர்ந்து நடைபோடும்.

என்றென்றும் TMS பாடகர்களின் பிதாமகன்

என்றென்றும் TMS பாடகர்களின் பிதாமகன் திரையுலக தொடக்க காலத்தில், M.K.தியாகராஜ பாகவதர்,P.U.சின்னப்பா போன்ற ஜாம்பவான்கள் தாங்களே பா...