Tuesday, March 11, 2025

கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.


 இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.


ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.

இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். 

இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, அண்மையில் வெற்றி பெற்ற “சித்தா”திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான சுரேஷ் A. பிரசாத் படத்தொகுப்பு செய்ய கலை இயக்குனராக கலா மோகனும் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படமானது இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகிறது என்பது சிறப்பம்சமாகும்.

அதோடு இப்படம் ஈழத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாக்கப்படுகின்றது என திரைப்படக்குழு அறிவித்தருகின்றனர்.


MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்*

*MRP Entertainment  தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரி...