Wednesday, April 9, 2025

கலைஞர் டிவியின்ஏப்ரல் 14 சித்திரைத் திருநாள்சிறப்பு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின்
ஏப்ரல் 14 சித்திரைத் திருநாள்
சிறப்பு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
 
 
கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற ஏப்ரல் 14 சித்திரிரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
அதன்படி, வருகிற திங்கள் கிழமைன்று காலை 9 மணிக்கு நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ லியோனி தலைமையில் "நம் மொழியையும், பண்பாட்டையும் காக்க பெரிதும் துணை நிற்பது தனிமனித முயற்சியே? அல்லது கூட்டு முயற்சியே?" என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி - மீனாட்சி சவுத்ரி - சத்யராஜ் - கிஷன் தாஸ் - லால் நடிப்பில் "சிங்கப்பூர் சலூன்" நகைச்சுவையான சூப்பஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் - சித்தார்த் - பிரியா பவானி ஷங்கர் - பாபி சிம்ஹா - விவேக் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த "இந்தியன் 2" அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

கிளாசிக் திரைதமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன.

கிளாசிக் திரை தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன...