Monday, June 30, 2025
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் 'கயிலன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் - டீசர் வெளியீடு..!
தமிழ் சினிமா முழுக்க புதுவித திகில் கதைசொல்லும் வழக்கம் தற்போதைய டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும். பேய் படங்கள் என்றாலே “பேய்-சந்திப்பு-பழிவாங்கும்” என அதிகமாகப் பயன்படுத்தப்படும் கதைக்களத்தை தவிர்த்து, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் மர்மம், நாட்டுப்புற மரபு மற்றும் பயம் நிறைந்த ஒரு கதையை கொண்டுவருகிறார்.
"சுழல் - தி வொர்டெக்ஸ்ட் என்ற இணைய தொடரில் தனது நடிப்பிற்காக மகத்தான வரவேற்பைப் பெற்ற எஃப்.ஜே. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் டீசர், ஏற்கனவே சினிமா ஆர்வலர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற நிழல் கிராமத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது.
காலனித்துவ கால மாந்திரீகம் மற்றும் சூனியத்தால் நீண்ட காலமாக சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் இரண்டு பெண்கள் அலிஷா மற்றும் அவரது தாயாரைச் சுற்றி கதை சுழல்கிறது. ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்கள் நினைத்ததை விட ஆழமான, ஆபத்தான ஒரு இடத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன் மட்டுமே அவர்களுடன் நிற்கும் நிலையில், மூவரும் அமைதிக்கு பின் இருக்கும் பயங்கரங்களையும், அதில் இருந்து தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.
தி பிளாக் பைபிள் படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை EPS பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.
Sunday, June 29, 2025
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் - அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய 'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான்,
ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ் பேசுகையில், ''மிகவும் சந்தோஷமான நாள் இது. 'டிராகன்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா. பொதுவாக தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் 'டிராகன்'. இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை ' டிராகன்' பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,'' என்றார்.
கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு பேசுகையில், ''குழுவாக இணைந்து இந்த படத்தை வழங்கி வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் 'இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்' என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட 'கோட்'( GOAT) திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் 'டிராகன்' திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் 'DUDE' படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ் -அஸ்வத்- பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி,'' என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ''இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் 'நான் ஹீரோவாக போகிறேன்' என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் 'டிராகன்' என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.
'லவ் டுடே' படத்தை விட 'டிராகன்' படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஒரு படம் நன்றாக இருக்கும் போது அந்தப் படத்திற்கான வேர்ட் ஆஃப் மவுத் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பாராட்டினீர்கள். அதை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தீர்கள். இதற்காக இந்த தருணத்தில் ஊடகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ''இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், 'இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?' என கேட்டார். அதற்கு நான் 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.
அதன் பிறகு 'லவ் டுடே' படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.
'டிராகன்' படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் 'டிராகன்' அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.
'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் 'டிராகன்' படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் 'கோமாளி', 'லவ் டுடே' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக 'டிராகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். 'டிராகன்' படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நூறாவது நாள் வெற்றி விழாவில் 'டிராகன்' பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Love Marriage - திரைப்பட விமர்சனம்
“லவ் மேரேஜ்” என்பது ஒரு மென்மையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இது அதன் கதைக்களம் ஒரு பழக்கமான பாதையைப் பின்பற்றினாலும் கூட, அரவணைப்பு, நகைச்சுவை மற்றும் தொடர்புபடுத்தக்கூடிய தருணங்களை வழங்குகிறது. கோவிட்-19 ஊரடங்கு தொடங்கும் போது இறுதியாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் 33 வயது பிரம்மச்சாரி ராமச்சந்திரனை மையமாகக் கொண்ட இந்தப் படம், ஒரு அசாதாரண நேரத்தில் உறவுகளின் ஏற்ற தாழ்வுகளை வழிநடத்துகிறது. கதைக்களம் ஓரளவு யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், கையாளுதல் மற்றும் நடிப்புகள் அதற்கு ஒரு நேர்மையான மற்றும் ஈர்க்கக்கூடிய வசீகரத்தை அளிக்கின்றன.
LOVE MARRIAGE - CAST AND
CREW
PRODUCTION - ASSURE
FILMS & RISE EAST
RELEASE - SAKTHI
FILM FACTORY
PRODUCERS - DR. SWETHA SHRI & SREENIDHI SAGAR
CAST
VIKRAM PRABHU
AS RAMACHANDRAN SUSHMITHA BHAT
AS AMBIKA MEENAKSHI DINESH AS RADHA SATHYARAJ AS MLA
RAMESH TILAK AS GURU
GAJARAJ AS RAM’S FATHER ARULDOSS AS RAM’S UNCLE
CREW
DIRECTOR
- SHANMUGA PRIYAN CINEMATOGRAPHER - MADHAN
CHRISTOPHER EDITOR - BARATH
VIKRAMAN
MUSIC – SEAN ROLDAN
LYRICIST- MOHAN RAJAN & SEAN ROLDAN BANNER - ASSURE FILMS & RISE
EAST
PRODUCED BY - DR. SWETHA SHRI & SREENIDHI SAGAR
PRO – YUVRAAJ
Maargan - திரைப்பட விமர்சனம்
மார்கன் என்பது நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு குற்றத் திரில்லர், இது ஒரு புதிரான மற்றும் அசாதாரண மர்மத்தை முன்வைக்கிறது - மர்மமான முறையில் கருகிய கருப்பு தோலுடன் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். விசாரணையின் மையத்தில் ADG துருவ் நடிக்கிறார், விஜய் ஆண்டனி அமைதியான தீவிரத்துடன் நடிக்கிறார், அவரது தனிப்பட்ட கடந்த காலம் வழக்கில் சிக்கி, சஸ்பென்ஸுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான அடித்தளத்தை சேர்க்கிறது.
இயக்குனர் லியோ ஜான் பால் கதையை துல்லியமாக உருவாக்கி, கொலையாளியின் அடையாளத்திற்கு வழிவகுக்கும் துப்புகளை படிப்படியாக வெளிப்படுத்துகிறார். திரைக்கதை ஒரு நிலையான வேகத்தை பராமரிக்கிறது, சஸ்பென்ஸை உணர்ச்சிகரமான தருணங்களுடன் சமநிலைப்படுத்துகிறது. படத்தின் பலங்களில் ஒன்று விஜய் ஆண்டனியே இசையமைத்த அதன் வளிமண்டல இசை, இது பதற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் விசாரணை முழுவதும் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது.
அதிர்ச்சி, சமூக பாரபட்சம் மற்றும் நீதி போன்ற கருப்பொருள்களை ஆழமாக ஆராயும் முயற்சியே மார்கனை தனித்துவமாக்குகிறது. இந்த அடுக்குகள் ஒரு குற்றத்தைத் தீர்ப்பதைத் தாண்டி கதைக்கு ஒரு நோக்க உணர்வைத் தருகின்றன. படத்தில் புத்திசாலித்தனமான சிவப்பு ஹெர்ரிங்ஸ் மற்றும் சதி திருப்பங்களும் உள்ளன, அவை துப்புகளை ஒன்றாக இணைப்பதை ரசிக்கும் மர்ம ஆர்வலர்களை ஈர்க்கும்.
கதாபாத்திரங்கள், குறிப்பாக எதிரி கதாபாத்திரம், இன்னும் கொஞ்சம் ஆழத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும், வலுவான மைய மர்மம் மற்றும் படத்தின் மெருகூட்டப்பட்ட தொழில்நுட்ப செயல்படுத்தல் காரணமாக கதை இன்னும் கவர்ச்சிகரமானதாகவே உள்ளது. ஒரு பிரச்சனையான கடந்த காலத்தைக் கொண்ட நீச்சல் வீரரை உள்ளடக்கிய துணைக்கதை, படத்தின் அமைப்புக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கூறுகளைச் சேர்க்கிறது, இது முற்றிலும் அவசியமில்லை என்றாலும், படத்தின் அமைப்புக்கு பங்களிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, மார்கன் ஒரு புதிய முன்மாதிரி மற்றும் சிந்தனைமிக்க அணுகுமுறையுடன் ஒரு திறமையான மற்றும் ஈர்க்கக்கூடிய த்ரில்லராக நிற்கிறது. இது வகையை மீண்டும் கண்டுபிடிக்காமல் போகலாம், ஆனால் இது நிச்சயமாக புத்திசாலித்தனமான குற்ற நாடகங்களின் ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான அனுபவத்தை வழங்குகிறது. அதன் சுவாரஸ்யமான கதைக்களம், நன்கு செயல்படுத்தப்பட்ட சஸ்பென்ஸ் மற்றும் வளிமண்டல தொனியுடன், மர்மத்தை அர்த்தத்துடன் சமநிலைப்படுத்தும் ஒரு குற்றத் திரில்லரைத் தேடும் எவருக்கும் மார்கன் ஒரு திடமான பார்வை.
MAARGAN MOVIE CAST AND CREW DETAILS
Cast
Vijay antony - dhruv korak
Ajai deeshan -tamilarivu
Mahanadhi shankar - kaali
Samuthrakani - senior adgp raja, TN Chennai
Ramachandran - முருகவேல்
Brigida- inspector Sruthi
Deepshika - Ramya
Archana - akila
கனிமொழி - வென்னிலா
Vinod sagar- asst commisoner
Nataraj - senior neurologist
Arun raghav - IT HR
Kathir - broker agent
Rajaram -photographer Lakshman karthik
Abhishek - director Rajesh
Niharika - Ramya
Movie Credits
Director: Leo John Paul
Music: Vijay Antony
Cast: Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani, Brigida, Deepshikha, Mahanathi Shankar, vinodh sagar
Production House: Vijay Antony Film Corporation
Producer: Fatima Vijay Antony
Executive: Producer Naveen Kumar
Cinematographer: S.Yuva
Editor: Leo John Paul
Art Director: A.Raja
Technical Head: Janarthanan
Screenplay :Vishnu, Leo john paul
Choreography : Prabhu
Co-Director: Prabu Kuppuswamy
Associate Directors: Premkumar.KA, Jaison, Shwetha Selvaraj, Chandru, Praveen Kumar.D
Assistant Directors: Arun prasad.R, Asvika Kumaravel
Production Manager: Krishnaprabhu
Colorist: Kowshik KS
Costume Stylist: Shimona Stalin
Post Production: Dhivaker Dennis, Harish.Y
Sound Engineer: S Chandrasekar
Mixed & Mastered @ AH Studio
Song Mixed and Mastered by A.M Rahmathulla
Sound Designer: S Vijay Rathinam
VFX @ Vijay Antony Studio, Picstol Studios, PaperPlane TV, Nxgen Studios, RealWorks Studios
VFX Artists: Aadit Maran, Godwin, Sanath, Sathish, Arun , Siva
DI: Promoworks
Mastering: Adithya
Story Team: Leo John Paul, Vishnu, K.Pazhani, P.Bharath kumar
Publicity Designer: Vinci Raj
Second Designer: Ramesh Senthil
Creative Promotions: BeatRoute
PRO: Rekha
Saturday, June 28, 2025
ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!*
2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி
பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!*
Kannappa - திரைப்பட விமர்சனம்
விஷ்ணு மஞ்சு, பிரபாஸ் மற்றும் மோகன்லால் நடிக்கும் கண்ணப்பா திரைப்படம், அசைக்க முடியாத நம்பிக்கையின் எழுச்சியூட்டும் கதையை மீண்டும் சொல்லும் ஒரு நேர்மையான மற்றும் காட்சி ரீதியாக வளமான பக்தி நாடகமாகும். இந்த படம் திண்ணாடு என்ற வீரம் மிக்க பழங்குடி வேட்டைக்காரனின் மாற்றத்தைக் காட்டுகிறது, அவர் ஒரு அமைதியான சிவலிங்கத்தை சந்திப்பது அவரை ஆழ்ந்த பக்தி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வின் பாதையில் இட்டுச் செல்கிறது.
விஷ்ணு மஞ்சு திண்ணாடுவின் பாத்திரத்திற்கு இதயத்தையும் தீவிரத்தையும் கொண்டு வருகிறார். அவரது நடிப்பு நேர்மையானது, கதாபாத்திரத்தின் மூல ஆற்றலையும் உணர்ச்சிப் பரிணாமத்தையும் உறுதியுடன் படம்பிடிக்கிறது. ருத்ராவாக மறக்கமுடியாத தோற்றத்தில் பிரபாஸ், கதைக்கு ஒரு தனித்துவமான வசீகரத்தை சேர்க்கிறார். அவரது கருணை, நகைச்சுவை மற்றும் ஞானத்தின் கலவை படத்தை வளப்படுத்துகிறது. மோகன்லால் மற்றும் மோகன் பாபு சுருக்கமாகத் தோன்றினாலும், அவர்களின் இருப்பு கதைக்கு எடை மற்றும் ஈர்ப்பை சேர்க்கிறது.
ஷெல்டன் சாவின் ஈர்க்கக்கூடிய ஒளிப்பதிவுக்கு நன்றி, படம் காட்சி ரீதியாக வசீகரிக்கிறது. வன நிலப்பரப்புகள், ஆன்மீக தருணங்கள் மற்றும் அதிரடி காட்சிகள் அனைத்தும் அழகாக வழங்கப்பட்டுள்ளன. ஸ்டீபன் தேவஸியின் இசையமைப்பானது படத்தின் பக்தி தொனியை ஆதரிக்கிறது, சில பாடல்கள் வேகத்தை சற்று குறைத்தாலும் கூட. படத்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது, இரண்டாம் பாதியில் கதை வேகம் பெற்று, நெகிழ்ச்சியான, உணர்ச்சி ரீதியாக திருப்திகரமான உச்சக்கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது.
இயக்குனர் முகேஷ் குமார் சிங் கதையை நேர்மையுடனும், அதன் ஆன்மீக வேர்களுக்கு மரியாதையுடனும் கூறுகிறார். சில உணர்ச்சி மற்றும் ஆன்மீக கூறுகளை இன்னும் ஆழமாக ஆராய்ந்திருக்கலாம் என்றாலும், படம் அதன் பக்தி மையத்தை பராமரிப்பதில் வெற்றி பெறுகிறது மற்றும் ஆழமாக எதிரொலிக்கும் தருணங்களை வழங்குகிறது.
கண்ணப்பா இறுதியில் நம்பிக்கை, தியாகம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு இதயப்பூர்வமான அஞ்சலி. இது பக்தியின் சாரத்தை அணுகக்கூடிய மற்றும் தொடும் வகையில் கொண்டாடுகிறது. வேகம் மற்றும் கதாபாத்திர வளர்ச்சியில் சில சிறிய சிக்கல்கள் இருந்தபோதிலும், படம் ஒரு அர்த்தமுள்ள சினிமா அனுபவத்தை வழங்குவதில் வெற்றி பெறுகிறது.
விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபாஸின் வலுவான நடிப்புகள், சக்திவாய்ந்த காட்சியமைப்புகள் மற்றும் ஆன்மீக மரபில் வேரூன்றிய ஒரு கதையுடன், கண்ணப்பா அதன் கருப்பொருளின் காலத்தால் அழியாத மரபை மதிக்கும் ஒரு தகுதியான குடும்ப பொழுதுபோக்காக தனித்து நிற்கிறார்.
Kannappa CAST & CREW
Starring: Vishnu Manchu, Mohan Babu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Sarat Kumar, Kajal Aggarwal, Arpit Ranka, Brahmanandam, Saptagiri, Mukesh Rishi, Madhubala, Aishwarya Bhaskaran, Brahmaji, Devaraj, Raghu Babu, Siva Balaji, Sampath Ram, Lavi Pajni, Surekha Vani, Preity Mukundhan, Kaushal And Adhurs Raghu.
Story & Screenplay: Vishnu Manchu
Producer: Dr. M. Mohan Babu
Banner: Twenty Four Frames Factory & AVA Entertainment
Director: Mukhesh Kumar Singh
Cinematographer: Sheldon Chau
Music Director: Stephen Devassy
Editor: Anthony Gonsalvez
Production Designer: Chinna
Executive Producer: Vinay Maheshwari & R. Vijay Kumar
Stunts Master: Kecha Khamphakdee
Choreography: Prabhudeva, Brinda & Ganesh
PRO: Haswath Saravanan & Sai Satish
DI & Sound Mixing: Annapurna Studios
Music Label: T-Series
Friday, June 27, 2025
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா இல்லையா என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டு போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகதான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். அவருக்கு ஆல் தி பெஸ்ட்! தமிழில் முக்கிய படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாது இயக்கவும் செய்வார் அருண். ’கற்றது தமிழ்’ ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்த ஒரே ஹீரோ சித்தார்த். அவரை மிகவும் அகங்காரமானவர், எதிராளியின் மனதைப் பார்க்காமல் பேசி விடுபவர் என்ற பிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், அவர் வளர்ந்த குழந்தை. அவர் படத்துக்கு வாழ்த்துக்கள். ’எட்டுத் தோட்டாக்கள்’ எனக்கு மிகப்பிடித்த படம். அவருக்கும் வாழ்த்துக்கள். தேவயாணி, சரத்குமார் இருவரும் நடிப்பில் மிரட்டுபவர்கள். படத்திற்கு வாழ்த்துக்கள்”
நடிகை சரஸ் மேனன், “இந்த அற்புதமான வாய்ப்புக் கொடுத்த அருண் விஸ்வா, சாந்தி டாக்கீஸூக்கு நன்றி. சித்தார்த் சாரை உதவி இயக்குநராக இருக்கும் போதிருந்தே தெரியும். அவரது வளர்ச்சி இன்ஸ்பையரிங்கான விஷயம். மீதா, தலைவாசல் விஜய், இயக்குநர் ஸ்ரீகணேஷ் என எல்லோரிடமும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா, “மனித உணர்வுகளை அழகாகத் திரையில் கொண்டு வரும் கலைஞர் ஸ்ரீகணேஷ். இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவான ஒன்று. சித்தார்த் சார் மற்றும் சரத் சார் இருவரும் இந்த 3BHK வீட்டைக் கட்டி முடிக்க பெரிய பலம். சிறுவயதில் நான் சரத் சாருக்குதான் ரசிகன் ஆனேன். தேவயாணி மேம், சைத்ரா, மித்து ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். எனது சகோதரர் கார்த்திக் நேத்தா இந்தப் படத்தின் மூலம் 100ஆவது படத்தை அடைந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி”.
நடிகர் சரத்குமார், “இந்தப் படத்தைக் கொடுத்த ஸ்ரீக்கு நன்றி. சித்தார்த் தைரியமான, அற்புதமான நபர். நாளை ‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 28 வருடங்களை நிறைவு செய்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைவருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. வீட்டில் ஒரு செண்டிமெண்ட் அட்டாச் செய்து கதை சொல்லி இருக்கிறார்கள். யதார்த்தமான கதையை அதன் யதார்த்தம் மீறாமல் ஸ்ரீகணேஷ் சொல்லி இருக்கிறார். வாழ்க்கை சவாலானதுதான். அதில் ஜெயித்துக் காட்ட வேண்டும். சமீபத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த நாள் நான் படப்பிடிப்பில் சென்று நடித்தேன். அந்த மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் வெற்றிக் கிடைக்காது. ஏனெனில் நானும் பத்திரிக்கையாளராக இருந்துதான் நடிகன் ஆனேன். சென்னையில் மட்டும் 11 வீடுகள் மாறியிருப்போம். இந்தப் படத்தில் நடிக்கும் போது நாங்கள் அனைவரும் குடும்பமாக மாறி விட்டோம். அருண் விஸ்வா எனது சகோதரர். படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். கனவெல்லாம் நிஜமாகும்” என்றார்.
நடிகை மீதா, “இந்தப் படம் எங்களுடைய குடும்பக் கதை மட்டுமல்ல! நம் அனைவருடைய குடும்பக் கதையும்தான். இந்த அழகான வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீ மற்றும் சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் அழகாக இருக்கு. சித்தார்த் சார் ரொம்ப சப்போர்ட்டிவ். சரத் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். தேவயாணி மேம் எனக்கு அம்மா போலதான். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்”.
நடிகை சைத்ரா, “முதல் வேலை, முதல் வண்டி இதெல்லாம் நமக்கு எவ்வளவு ஸ்பெஷலோ அதுபோல நான் நடித்த முதல் தமிழ் படம் ‘3BHK’ ரொம்பவே ஸ்பெஷல். வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீகணேஷ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. சரத்குமார், தேவயாணியின் ‘சூர்யவம்சம்’ பலமுறை பார்த்திருக்கிறேன். மீதாவிடம் நிறைய பேசியிருக்கிறேன். சித்தார்த் போன்ற ஒரு அண்ணன், நண்பன், மகன் எல்லோர் வாழ்விலும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு எல்லோரிடமும் அன்பாக இருந்தார். எல்லோரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்”.
இயக்குநர் மடோன் அஸ்வின், “’நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்தே ஸ்ரீகணேஷ் 15 வருட பழக்கம். மனித உணர்வுகளை அழகாக கொண்டு வருவது ஸ்ரீக்கு கைவந்த கலை. நிச்சயம் படம் ஹிட்டாகும். அருண் விஸ்வா பழகுவதற்கு எளிதான தயாரிப்பாளர். அம்ரித் இசை அற்புதம். வாழ்த்துக்கள்”.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நாங்கள் எல்லோருமே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்து நண்பர்கள். அப்போதெல்லாம் ஸ்ரீகணேஷ் சிட்டுக்குருவிக்கெல்லாம் பாவம் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென பார்த்தால் ‘எட்டுத் தோட்டாக்கள்’ எடுத்து மிரள வைத்தான். மிகவும் மென்மையான நபர். மியூசிக், எடிட்டிங் எல்லாம் நன்றாக வந்துள்ளது. அருண் விஸ்வாவுக்கும் வாழ்த்துக்கள். ஒரு படம் பார்வையாளர்களுடன் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது என்பதுதான் அதன் வெற்றி. அந்த வகையில் இந்தப் படமும் ஹிட்டாகும்”.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “ஸ்ரீகணேஷ் திறமையாளன். அதிக புத்தகம் வாசிப்பான். சித்தார்த், சரத் சார், தேவயாணி மேம் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ரவிக்குமார், ”ராம் சார் சொன்னது போல அருண் விஸ்வா எனக்கும் நம்பிக்கை. அருணின் நம்பிக்கை, ஸ்ரீகணேஷின் மென்மை, சித்தார்த் சாரின் கருணை இதெல்லாம்தான் ‘3BHK’. உணர்வு பூர்வமாக இந்தப் படம் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை”.
இயக்குநர் அரவிந்த், “இது வீடு பற்றிய படம் இல்லை. பலருடைய கனவை நோக்கி ஓடக்கூடிய நம்பிக்கை தரும். படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் படம் கனெக்ட் ஆகும்”.
இயக்குநர் சக்திவேல், “இந்த வருடம் வந்திருக்கும் நல்ல படங்கள் பட்டியலில் இந்தப் படமும் நிச்சயம் இருக்கும். வாழ்த்துக்கள்”.
நடிகை தேவயாணி, “ஃபீல் குட், பாசிட்டிவான படம் இது. சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா அற்புதமான தயாரிப்பாளர். அவர்களிடம் இருந்து கதை வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ரீகணேஷ் தான் நினைத்ததை நடிகர்களிடம் இருந்து மென்மையான வாங்கி விடக் கூடிய இயக்குநர். படம் அழகாக வந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து சரத் சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இப்போதும் ‘சூர்யவம்சம்’ படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தில் இருந்து எனது தம்பியுடன் சேர்ந்து பார்த்திருக்கிறேன். எனர்ஜி, திறமையானவர். எல்லா துறைகளிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அவருக்கு சினிமாவில் எப்போதும் தனியிடம் உண்டு. மீதா, சைத்ரா இருவரும் ஸ்வீட் ஹார்ட்ஸ். அம்ரித்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் உணர்வு. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
இசையமைப்பாளர் அம்ரித், “இந்தப் படம் அற்புதமான கனவு. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. திங்க் மியூசிக் எனக்கு குடும்பம் போல, வருங்காலத்தில் இன்னும் அதிகம் இணைந்து பணிபுரிவோம் என்று நம்புகிறோம். சித்தார்த், சரத் சார், தேவயாணி, மீதா மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் மாரிசெல்வராஜ், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். ஸ்ரீகணேஷின் கரியரில் இந்தப் படம் நிச்சயம் தி பெஸ்ட்டாக இருக்கும். ஒரு ஹீரோவின் வீட்டிற்குள் முதல் முறை நான் போயிருக்கிறேன் என்றால் அது சித்தார்த் சார்தான். அவரின் வெளிவராத பாடல்கள் எல்லாம் நிறைய கேட்டிருக்கிறேன். ராம் சார் நினைவு வைத்திருக்கும் கதாநாயகி பெயர் தேவயாணி. ’ஐயா’ படத்துக்குப் பிறகு சரத் சாரின் மனது நடித்திருக்கும் படம் இது. அம்ரித் இசை நன்றாக இருக்கிறது. என் வாழ்வில் ராம் சார் ஒரே தூண். அதுபோல அருண் விஸ்வாவும் எனக்கு நிறைய செய்திருக்கிறார். நான் இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட இரண்டாவது நபர் அருண். ’பரியேறும் பெருமாள்’ கதையை பல அலுவலகங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் அருண். அதை எல்லாம் என்னால் மறக்க முடியாது. நிச்சயம் நானும் அருணும் சீக்கிரம் படம் செய்ய வேண்டும். நன்றி”.
நடிகர் ரவி மோகன், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். மிகப்பெரிய உணர்வாக இந்த படம் எனக்கு அமைந்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். பாலு மகேந்திரா அவர்களின் ‘வீடு’ எந்தளவுக்கு பேசுபொருளாக அமைந்ததோ அதுபோல இந்தப் படமும் உங்களுக்கு அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம். சித்தார்த் எப்போதும் தப்பான படங்கள் செய்ததில்லை. இனியும் அப்படித்தான் இருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள். மீதா, சைத்ரா இருவருக்கும் வாழ்த்துக்கள். நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. சரத் சார், தேவயாணி மேம் சிறந்த நடிகர்கள். நல்ல கதைகளையும் படங்களையும் பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கான படமாக இது இருக்கும்”.
இயக்குநர் ஸ்ரீகணேஷ், “ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. அதிகம் யோசிக்காமல் மனதார செய்ய வேண்டும் என்று இயக்கிய படம்தான் இது. இந்த கதையை படித்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தவர் அருண் விஸ்வாதான். அவருக்கு நன்றி. அடுத்து வந்தது சித்தார்த் சார்தான். நல்ல கதையை தேடுபவர் அவர். சரத் சார், தேவயாணி மேம் வந்ததும் கதை முழுமையாகியது. மீதாவுக்கும் நன்றி. வெற்றிப் படம் கொடுத்து விட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருப்பது பெரிய விஷயம். சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சதீஷ், தலைவாசல் விஜய் சார், விவேக் பிரசன்னா, ஆவுடையப்பன் எல்லோருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இதயப்பூர்வமாக அம்ரித் வேலை பார்த்தார். எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் ‘3BHK வீடு’ கதை எமோஷனலாக இருக்கும். அதில் இருந்துதான் இந்த படத்திற்கான ஆரம்பம் கிடைத்தது. இப்படியான ஒரு படம் எடுக்கக் காரணமும் என் குடும்பம்தான். என் நண்பர்களுக்கும் நன்றி”.
தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “அம்மா பெயரில் இருந்து ஆரம்பித்த இந்த தயாரிப்பு கம்பெனியில் இருந்து வரும் படங்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். மடோன் அஸ்வின் தான் ஸ்ரீகணேஷை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராக இந்தப் படம் தயாரித்ததில் திருப்தி. ராம் சார் கொடுக்கும் அங்கீகாரம் மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சித்தார்த் சார், சரத் சார், தேவயாணி மேம், மீதா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அம்ரித் இன்னும் பல உயரங்கள் தொடுவார். உங்கள் பெற்றோர், குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி!”.
நடிகர் சித்தார்த், “சினிமாவுக்கு வந்த பிறகு இது எனது நாற்பதாவது படம். நாற்பது படம் நடித்து விட்டாயா என எனது அப்பா ஆச்சரியமாகக் கேட்டபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தும் தயாரிப்பும் எனக்கு தாய் தந்தை. நான் நடித்த நாற்பது படங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். நாற்பதாவது படத்தை என்னை நம்பிக் கொடுத்த ஸ்ரீ, அருணுக்கு நன்றி. இந்தப் படம் இன்னும் ஸ்பெஷலாக அமைய காரணம் சரத் சார் & தேவயாணி மேம். தேவயாணி, மீதா, சைத்ரா இந்த மூன்று கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம், பொறுப்புதான் பிரபுவையும் வாசுதேவனையும் நகர்த்தி செல்லும். சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். எனது மனைவிக்காகதான் சமீபத்தில் வீடு வாங்கினேன். இந்தப் படத்தில் நடித்தபோதே வீடு வாங்கியது நல்ல சகுனம். பிடிவாதம் கொண்ட தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வளர்ந்த குழந்தைதான் ஸ்ரீகணேஷ். அம்ரித் இசையில் இன்னும் பெரிய உயரம் அடைவார். மீதா, சைத்ரா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். என் வீட்டில் ரவியும் இன்னொரு மகன் தான். படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெயமோகன் பேச்சு*
*“என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெ...
-
நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - " P 2 - இருவர் " தான் இசை விழாவில் இசையமைப்பாளர் தேவா !! "...
-
கே.ராஜன் வெளியிட்ட டீசர்! கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " ப...