Saturday, June 28, 2025

2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி

*2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி*

*ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா - சுதாகர் செருகுரி-  SLV சினிமாஸ் - கூட்டணியில் தயாராகும் ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார் 'நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது*

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ' தசரா' படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு 'நேச்சுரல் ஸ்டார் 'நானி-  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால்.. திரையுலகினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 'நேச்சுரல் ஸ்டார்' நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது படக்குழுவினருக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது. 

கடந்த ஒரு வாரமாக இன்றியமையாத குழந்தை பருவ காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர். தற்போது படக் குழுவினர் தங்களது கவனத்தை நானி பக்கம் திருப்பி உள்ளனர். அவரது வருகையை *'தகாத் ஆகயா'" என ஜொலிக்கும் சொற்றொடரை பிரத்யேகமாக அறிவித்தனர். மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்-  கரடு முரடான பார்பெலுடன் நானி கதாபாத்திரத்தின் கால் மட்டும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும், நானி இதற்கு முன் எப்போதும் நடித்திராத அளவிற்கு மூர்க்கமாக தோன்றுகிறார் என்பதையும் உறுதி செய்கிறது.  

ஹைதராபாத்தில் நடைபெறும் நாற்பது நாட்கள் கொண்ட இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கரடு முரடான பின்னணியில் அரங்குகள் கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உருவான 'தசரா ' திரைப்படம் இந்திய அளவில் இருந்தால்...  தற்போது உருவாகும் தி பாரடைஸ் உலகளாவியதாக இருக்கும். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கான போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ்... படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.  குறிப்பாக வசனங்களும், அதிர்ச்சியூட்டும் காட்சிகளும், 'ராக் ஸ்டார்' அனிருத்தின் அதிரடி இசையும் , நானியின் திரை தோற்றமும்.. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அத்துடன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. 

2026 மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று 'தி பாரடைஸ் ' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். 

'சேரிகளின் ராஜா' ரசிகர்களை சந்திக்க வருகிறார்... காத்திருங்கள்! இந்த முறை இவரை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

நடிகர்கள் : நானி 

தொழில்நுட்பக் குழு : 
எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓட்டேலா 
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி 
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ் 
இசை : அனிருத் ரவிச்சந்தர் 
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா 
ஆடியோ : சரிகம மியூசிக் 
மக்கள் தொடர்பு : யுவராஜ் 
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

NITK’s 23rd Convocation highlights record achievements, IPOs by alumni, first-of-its-kind four-stage ceremony

NITK’s 23rd Convocation highlights record achievements, IPOs by alumni, first-of-its-kind four-stage ceremony Chenna...