சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 34வது பட்டமளிப்புவிழாவில் இயக்குநர் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சத்யபாமா வளாகத்தில் நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில் அட்லீக்கு வேந்தர்டாக்டர் மரியசீனா ஜான்சன் மற்றும் டாக்டர் மேரி ஜான்சன் ஆகியோரிடமிருந்து கௌரவ டாக்டர்பட்டம் வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் அட்லி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அதே பல்கலைக்கழகத்தில் தான் அவர் படித்து, முதலில் இயக்குனராக வேண்டும் என்று கனவு கண்டார்.
கௌரவ முனைவர் பட்டம் சான்றிதழ் பெற்ற பிறகு, அட்லி கூறியதாவது, "நான் ஒரு காலத்தில் பெரிய கனவுகளுடன் ஒரு மாணவனாக நுழைந்த அதே பல்கலைக்கழகத்தால் கௌரவிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இங்குதான் நான் நம்பிக்கையின் சக்தியைக் கற்றுக்கொண்டேன்." அவர் தனது குடும்பத்தினருக்கு உணர்ச்சிவசப்பட்டு, "நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளராகும் வரை என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அதன் பின் நான் யார் என்பதை வடிவமைத்தவர் என் மனைவி பிரியா அட்லீ. என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியவர் என் மகன்" என்று பகிர்ந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவிற்கு இடையே பத்திரிகையாளர்களிடம் அட்லீ, அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனேவுடன் தனது படத்தைப் பற்றிப் பேசுகையில், "இது மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகும் படம்,. இதில் அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் நாங்கள் கொண்டு வருகிறோம்.. பட்ஜெட்டைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும், எனது வேலை படத்தை இயக்குவது. தற்போது இந்த திட்டத்திற்கான பெரிய கனவுகளை நான் காண்கிறேன். இது நம் அனைவரையும் பெருமைப்படுத்த போகிறது." என்று அவர் மேலும் கூறினார்.
34 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 4221 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 810 முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கும், 79 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் வழங்கினார்.
சாதனை மாணவர்கள் 54 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 5031 மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டது.
வேலை வாய்ப்பு :-
சத்தியபாமா தொடர்ந்து கேம்பஸ் தேர்வில் அதிகபட்ச மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருகிறது.
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2024- 2025 கல்வி ஆண்டில் சுமார் 400 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில் மொத்த மாணவர்களில் 92.74% மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த மாணவர்கள் ஆண்டுக்கு அதிகபட்ச ஊதியம் 41,20,000, குறைந்தபட்ச ஊதியமாக 5,70,000 தேர்வு செய்யப்பட்டனர்.
.jpg)
