Thursday, June 26, 2025

சின்னதா ஒரு படம் " படத்தின்ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

“ சின்னதா ஒரு படம் "  படத்தின்
ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.

"சின்னதா ஒரு படம்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! 

நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே 'சின்னதா ஒரு படம்'. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் "சின்னதா ஒரு படம்" ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும். 


*படத்தின் நடிகர்கள்:* விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி
லட்சுமி பிரியா சந்திரமௌலி, வெங்கடேஷ் ஹரிநாதன், புதுமுகங்களான வாசுதேவன் மற்றும் நட்சத்திரா முக்கிய வேடங்களில்.

*முக்கிய துணை வேடங்களில்:* சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன்.

அனுபவம் நிறைந்த பிரபல விளம்பர திரைப்பட இயக்குநரும், ஸ்டார் விஜய்யின் முன்னாள் மூத்த விளம்பர இயக்குநருமான ஜானி டிசோசா.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் பல பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*தொழில்நுட்ப குழு:*

தயாரிப்பாளர்: டாக்டர் எம். திருநாவுக்கரசு M.D 

தயாரிப்பு நிறுவனம் : திருச்சித்திரம். 

வெளியீட்டாளர்: APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு எம்ஜி ஸ்டுடியோஸ். 

எழுத்து & இயக்கம் :- ஜானி டிசோசா.எஸ் 

ஒளிப்பதிவு: ரத்னகுமார் R.A. 

படத்தொகுப்பு :- ஜானி டி'சோசா எஸ் 

இசை: ஹரிஷ் வெங்கட் & பிரஷாந்த். 
பின்னணி இசை: சச்சிதானந்த் சங்கரநாராயணன். 

கலை: முத்துராஜ் டி 

மக்கள் தொடர்பு :- திரு

"சின்னதா ஒரு படம்" இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ளது. இத்திரைப்படம் ஜூலை  இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மால...