Wednesday, July 30, 2025

பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தசெங்கல்பட்டு மாவட்டத்தில் 15 கிராம பெண்களுக்குமுதல் சேமிப்புச் சான்றிதழ்களை வழங்கியஒமேகா போரம் பார் சோஷியல் இ

பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த
செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 கிராம பெண்களுக்குமுதல் சேமிப்புச் சான்றிதழ்களை வழங்கியஒமேகா போரம் பார் சோஷியல் இம்பாக்ட் அமைப்பு

சென்னை, ஜூலை 30- ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக தொண்டு அமைப்பான ஒமேகா போரம் பார் சோஷியல் இம்பாக்ட் அமைப்பு பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நிலையான சமூக மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 30 பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார மாற்றத்தைக் ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு ‘மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்’களை வழங்கி உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில், தாங்கள் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்தியதற்காகவும், 
நிதி சம்பந்தமாக தங்கள் தலைமைத்துவத்தை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காகவும் பல்வேறு பெண்கள் கவுரவித்து பாராட்டப்பட்டனர். அவர்கள் திருப்பிச் செலுத்திய கடன் தொகையானது தபால் துறையில் நிலையான வைப்புத்தொகையாக மாற்றப்பட்டது, இதனால் அவர்களுக்கு நீண்டகால சேமிப்பு மற்றும் முறையான வங்கிச் சேவைக்கான வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் பெண்களில் பலருக்கு, இது அவர்களின் முதல் தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஆகும். அதேசமயம் இது கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு அமைதியான ஆனால் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகும். மேலும் இந்த அமைப்பு, மருத்துவ பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு, ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவ முகாம்களில் உதவுவது மற்றும் அரசு சேவைகளுக்கான பரிந்துரைகளில் வழிகாட்டுவது போன்றவற்றை மேற்கொள்வதற்காக ஒரு கிராமத்திற்கு ஒரு பெண்ணுக்கு பயிற்சி அளித்துள்ளது.
 
இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர், அவர்களில் 30 பேருக்கு சேமிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து காணொளி காட்சி வாயிலாக விரிவாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர், இந்த திட்டத்தில் பலன் பெற்றுள்ள பெண்கள் பேசுகையில், கடன் மற்றும் சமூக ஆதரவு எவ்வாறு தங்கள் வாழ்க்கையை மாற்றியது என்பது குறித்து கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஒமேகா போரம் பார் சோஷியல் இம்பாக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சுனந்தா ரங்கராஜன் பேசுகையில், அரசுசாரா தொண்டு நிறுவனமாக கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து சமூகத்திற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த மைல்கல் சாதனை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவு பெண்கள் இடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்கள் தற்போது நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள், நிதிகளை நிர்வகிக்கிறார்கள் மற்றும் சமூகத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதுதான் சமூகத்தின் அர்த்தமுள்ள, நீண்ட கால முதலீட்டின் சக்தி என்றார். 

இது குறித்து நிலையான சமூக மேம்பாட்டு சங்கத்தின் செயல் இயக்குனர் லோகநாதன் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக புறக்கணிக்கப்பட்டு வந்த பழங்குடி பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதன் பலனே இன்று நாம் கண்டது. இது வெறும் நிதி சார்ந்தது மட்டுமல்ல, இது அவர்களின் வருங்கால வளர்ச்சிக்கான துவக்கமாகும். ஒரு பழங்குடிப் பெண் தனது சமூகத்தைக் காப்பாற்றவும், வழிநடத்தவும், பராமரிக்கவும் கற்றுக் கொள்ளும்போது, அவர் வலிமையின் தூணாக மாறுகிறார். இந்தப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது வெறும் சமூகப் பணி மட்டுமல்ல, அது தேசத்தின் வளர்ச்சியில் மிகப்பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 161 பெண்கள் ஆடு மற்றும் மாடு வளர்ப்பு போன்ற பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்காக இந்த இரு அமைப்புகளின் மூலம் வட்டியில்லா கடன் தொகையை பெற்றுள்ளனர். நிதி சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சியுடன் இணைந்து, இந்த முயற்சி அவர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவியது. இதன் காரணமாக அந்தப் பெண்கள், நிதி பயன்பாடு, சுகாதார விழிப்புணர்வுடன் இந்த சமூகத்தின் முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தசெங்கல்பட்டு மாவட்டத்தில் 15 கிராம பெண்களுக்குமுதல் சேமிப்புச் சான்றிதழ்களை வழங்கியஒமேகா போரம் பார் சோஷியல் இ

பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 கிராம பெண்களுக்குமுதல் சேமிப்புச் சான்றிதழ்களை வழங்க...