*நடிகை சஞ்சிதா ஷெட்டி, ராக்கி ஷா, தாரா கேர்கர் உள்ளிட்டோருக்கு ஜான் அமலன் பரிந்துரையின் பேரில், டாக்டர்.லீமா ரோஸ் மார்டின் தலைமையில், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக் கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது*
கோவை விஜய் எலான்ஸா நட்சத்திர விடுதியில் இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தொழில்துறை தலைமைத்துவத்திற்காக திருமதி. ராக்கி ஷாவிற்கும், இளம் தலைமைத்துவ சேவைக்காக நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அதேபோல, சமூக நலத்துக்கான டாக்டர் பட்டம் திருமதி. தாரா கேர்க்கருக்கு வழங்கப்பட்டது. தொழில் முனைவோருக்கான பிரிவில் ரொட்டெரியன் அபர்ணா சுங்கு, சமூக நலத்திற்கான பிரிவில் திரு. ஹர்ப்ரீத் சிங் ஆனந்த், சந்தை மேலாண்மை பிரிவில் திருமதி. ஸ்மிருதி மற்றும் தொழில் மேலாண்மையில் திரு. விஜய் ஜி.டி. ஆகியோருக்கு கௌரவப் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
கவுரவ டாக்டர் பட்டங்களை இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தலைவர் ஜான் அமலன் பரிந்துரையின் பேரில், டாக்டர்.லீமா ரோஸ் மார்டின் தலைமையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் வழங்கியது.
இதன் மூலம், வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மட்டுமே என்பதை கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும் நிரூபித்து காட்டியுள்ளனர்.