Saturday, July 26, 2025

கண்களை இமைக்கக்கூட நேரம் இருக்காது ! 'பிளாக்மெயில்' ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, முழுமையான பொழுதுபோக்கு படைப்பு!" – நடிகை பிந்து மாதவி

"கண்களை இமைக்கக்கூட நேரம் இருக்காது ! 'பிளாக்மெயில்' ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, முழுமையான பொழுதுபோக்கு படைப்பு!" – நடிகை பிந்து மாதவி

எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்  பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகமெங்கும் திரையிடப்பட உள்ள இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பிந்து மாதவி மனம் திறந்து பேசுகிறார்.

"ஒவ்வொரு கலைஞனும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பார்," என்கிறார் பிந்து மாதவி.
"பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு. மாரன் பிளாக்மெயில் கதையை விவரித்த நேரத்தில், அது என்னுடன் உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இது எனக்காகவே காத்திருந்த ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்தேன் , உணர்வும் ஆழமும் கலந்து அவர் உருவாக்கிய என் கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது. முக்கியமான பல கதாபாத்திரங்களுடன் இணைந்து எனது காட்சிகள் வந்திருக்கின்றன. ஜி.வி. பிரகாஷ்குமார் போன்ற அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் அருமை. தேஜு அஸ்வினி, ஸ்ரிகாந்த் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நீங்கள் கண்களை இமைக்கவே மாட்டீர்கள்! இது ஒரு அதிரடித் திரில்லர், உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம். இவை அனைத்துக்கும் காரணம் மு. மாரனின் பதற்றமூட்டும் கதைச்சொல்லல்!"

பிளாக்மெயில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் – மு. மாரனின் படைப்பு.
இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தெய்வகனி அமல்ராஜ், மற்றும் ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரியின் சார்பாக ஜெயக்கொடி அமல்ராஜ் பெருமையுடன் வழங்குகிறார்கள்.
படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் சாம் சிஎஸ், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய், படத் தொகுப்பு சான் லோகேஷ்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்: எஸ்.ஜே. ராம் (அரங்க அமைப்பு), ராஜசேகர் (சண்டைப் பயிற்சி), பாபா பாஸ்கர் & சாய் பாரதி (நடனம்), சாம் சிஎஸ், ஏகநாத் மற்றும் கார்த்திக் நேதா (பாடல் வரிகள்), சுரேஷ் சந்திரா - அப்துல் நஸார் (PRO).

சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா !

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!    ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி  விழா !!   ...