Tuesday, July 29, 2025

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!*

*இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!*

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம். 

இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும்.

'அவதார்: ஃபயர் & ஆஷ்' படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார். 

மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி வாரியர் நெய்திரி (ஸோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகசத்தை  பார்வையாளர்கள் பெற இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா மற்றும் அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தை 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடுகிறது.

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* "உஃப் யே சியாபா"

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொழி,வசனம் இல்லாமல் வெளியாகும் திரைப்படம்*  "உஃப் யே சியாபா"   லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்...