*'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' திரைப்படம் தமிழ் சினிமாவில் உருவானால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்!*
மார்வெலின் 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தின் கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமான, நல்ல மனமுடைய அதேசமயம் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
* மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் (ரீட் ரிச்சர்ட்ஸ்)- நேர்மையான தலைவர்
இந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா பொருத்தமானவர். ஏனெனில், புத்திசாலித்தனமான திரை இருப்பு, எதிர்காலத்தை புரிந்து வைத்திருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் பொருந்திப் போவார்.
* ஜெயம் ரவி- இவரது அமைதியான அதே சமயம் ஹீரோயிக் வைப், ரீட் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.
* இன்விசிபிள் வுமன் (சூ ஸ்டோர்ம்)- வசீகரமான வலுவான பெண்
நயன்தாரா- வசீகரத்தையும் அதே சமயம் வலிமையையும் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா திரையில் கொண்டு வருவார்.
கீர்த்தி சுரேஷ்- தனது உணர்வுப்பூர்வமான, ஆழமான நடிப்பிற்காக பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ், சூ ஸ்டோர்மாக நடிக்க சரியான தேர்வு.
* ஹியூமன் டார்ச் (ஜானி ஸ்டோர்ம்) - இளமை, எனர்ஜி மற்றும் ஃபன் லவ்விங்
சிவகார்த்திகேயன்- இயல்பான வசீகரம் மற்றும் நகைச்சுவை பொருந்திய குணம் ஜானி கதாபாத்திரத்திற்கு மாற்றாக இருப்பார்.
அதர்வா முரளி- இளமை, எனர்ஜி, விளையாட்டுத்தனம் என ஜானி கதாபாத்திரத்தில் பொருந்திப் போவார்.
* தி திங் (பென் கிரிம்)- கடினமான அதே சமயம் இளகிய மனம் கொண்டவர்
விக்ரம்- தீவிரமான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இந்த சாய்ஸூக்கு விக்ரம் மிகச்சரியானவர்.
ஆர்யா- உடல்ரீதியாக தன்னை வலுப்படுத்தி, வசீகரமாக ஆன் ஸ்கிரீனில் தோற்றமளிக்கும் ஆர்யா இளகிய மனதுடன் கூடிய பென்ஸ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்.
நாம் விரும்பும் நடிகர்கள் மேற்கண்ட கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' தயாராக சில காலம் எடுக்கும். எனவே, இன்று வெளியாகி இருக்கும் பெட்ரோ பாஸ்கல் மற்றும் வனேசா கிர்பியின் 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தைத் திரையில் கண்டு ரசிப்போம்.