Sunday, August 31, 2025
நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி
Lokah Chapter 1 Chandra - திரைப்பட விமர்சனம்
லோகா Chapter 1: சாந்திரா மலையாள சினிமாவுக்கே புதிய பாதையைத் திறந்த படம். இது தான் மலையாளத்தில் முதல் female-led சூப்பர் ஹீரோ படம். டொமினிக் அருண் இயக்கம், சாந்தி பாலச்சந்திரன் எழுத உதவியிருக்கார். கதை பக்கத்துல புனைகதை, புராணம், “அமரத்துவம்” மாதிரி கருக்கள் எல்லாம் கலந்துருக்காங்க. வேகமா action காட்சிகள் கொடுக்காம, universe-க்கு ஒரு அடிப்படை கட்டமைக்குதான் படம் அதிகம் focus பண்றது.
கதைல சாந்திரா ஒரு மர்மமா, சக்தி வாய்ந்த பெண். அவள் மூணு care-free நண்பர்களோட வாழ்க்கையிலும், ஒரு கடுமையான போலீஸான நாசியப்பாவோட வாழ்க்கையிலும் சிக்கிக்கிறாங்க. “அறிவுரை கேட்டு ஒளிஞ்சு வா”ன்னு சொல்லினாலும், அநீதி நடந்தா அமைதியா இருக்க முடியல. தன்னால கண்ணுக்கு தெரியாம முடியலன்னு நேரடியாக எதிர்த்து நிற்கிறாள். சின்னச் சின்ன பெயர்லேயே symbolism இருக்கு – சன்னி, சாந்திரா மாதிரி – பழைய கதைகளையும் இப்போ present-க்கும் connect பண்ற மாதிரி. படம் தான் ஆரம்பிக்கிற வரிகள் கூட சுவாரஸ்யமா இருக்கு: “ஒவ்வொரு புராணத்துக்கும் உண்மைச் சுவடு இருக்கும்.”
அடிப்படையா பார்ப்போம் என்றா – performance தான் main highlight.
-
கல்யாணி பிரியதர்ஷன் – சாந்திரா வேடத்துல ரொம்ப strong, graceful, vulnerable-ஆ நடித்துருக்கா.
-
நஸ்லென் – எப்போதும் போல natural charm, சின்ன சின்ன காமெடி, instant relatable.
-
சாண்டி (நாசியப்பா) – கடுமை, தீவிரம் வெளிப்படுதுறார்.
-
விஜயராகவன் – சாந்திராவோட தோற்றம்/கதை சொல்ற narration, அதுக்கு ஜோடியாக visuals-ல goosebumps தரும்.
சின்ன cameo roles கூட கதைல நிறைய importance இருக்கு. First part-ல அவ்வளவு முக்கியமா தெரியலேன்னாலும், அடுத்த chapters-ல use ஆகப்போறது clear-ஆ தெரியும். Universe-ஐ build பண்றதுக்கான stepping stones மாதிரி.
Technical பக்கம்:
-
நிமிஷ் ரவி cinematography – grand visuals, intimate moments இரண்டையும் balance பண்ணி capture பண்றார்.
-
ஜேக்ஸ் பீஜாய் music – energy-யும் soul-யும் இரண்டையும் சேர்த்து, ஹீரோயிக் feel perfectly suit ஆகுது.
-
சின்ன சின்ன காமெடி இடங்கிட்டே சில சமயம் சரியா click ஆகாதது, dialogues uneven-ஆ இருக்கு. ஆனாலும் layered storytelling, immersive presentation audience-ஐ பிடிச்சுக்கிட்டே போகுது.
முடிவில சொல்லணும்னா – Lokah Chapter 1: Chandra மலையாள சினிமாவுக்கு ஒரு புதிய வகை சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்ற powerful start. அடுத்த parts-க்கு solid stage set பண்ணி வச்சிருக்கு. Promise, courage, imagination நிறைந்த ஒரு saga ஆரம்பிச்சிருக்கு.
KPY Bala is going to be a sheer winner in Kollywood, a true ‘content-driven star - Director Balaji Sakthivel
Saturday, August 30, 2025
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
*KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !!*
*துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது*
*ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!*
*சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, கார்த்திக் கட்டமனேனி, டி.ஜி. விஸ்வ பிரசாத், கீர்த்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி வழங்கும், பான் இந்தியா படைப்பு “மிராய்” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியானது !*
யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!
யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசியவர்கள்
தயாரிப்பாளர் மகேஷ்:
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
ஒளிப்பதிவாளர் சூரஜ்:
நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்:
கடவுளுக்கு நன்றி. நல்ல மனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.
மாஸ்டர் ரகு:
நான் மாஸ்டராக கார்டு வாங்கிய பிறகு செய்த முதல் படம் இது. எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். சூரஜ் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். தேவ் மிகப்பெரிய உழைப்பாளி. என்னோடு உழைத்த டான்சர்களுக்கும் நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி:
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சாம் சார் மற்றும் மகேஷ் சாருக்கு நன்றி. படம் மிக அற்புதமாக வந்துள்ளது. கண்டிப்பாக நீங்கள் திரையில் ரசிப்பீர்கள். சமுத்திரக்கனி அண்ணாவின் நிமிர்ந்து நில் படத்தில் நானும் சாமும் வேலை பார்த்துள்ளோம். இப்போது நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்வதில் பெருமை. இப்படத்தில் அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
எழுத்தாளர் ராம்ஸ் முருகன்:
இது என் நண்பனின் படம் என்பதில் பெருமை. சமுத்திரக்கனி சார், அமீர் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மகேஷ் அவரைப் பார்த்தால் அவர் தயாரிப்பாளர் போலவே தெரியவில்லை, நண்பராகவே இருந்து வருகிறார். இப்படத்தை மிகுந்த உழைப்பில் உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
TrendLoud சார்பில் ஜிதேஷ்:
தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. அவர் மிக பாசிடிவானவர். சகிஷ்னா சேவியர் ஒரு படத்தில் 6 பாடல்கள் கிடைப்பது அரிது என்றார், அந்த ஆறு பாடல்களும் TrendLoud க்கு கிடைத்தது சந்தோஷம். எல்லா பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் அருமையாக வந்துள்ளது. தேவ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள்.
VJ நிக்கி:
நான் நிறைய மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். பத்திரிக்கையாளனாக இருந்துள்ளேன். அங்கிருந்து இன்று இங்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். மிகப்பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஒரு நாள் கால் வந்து, “நீதான் ஹீரோ, ஆபீஸ் வா” என்றார்கள். நான் பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் செகண்ட் லீட் என்று சொல்லி ஷூட்டிங் கூப்பிட்டுப் போய் விட்டார்கள். அங்கு ஆகாஷ் பிரேம், திவாகர், யுவராஜ் எல்லோரிடமும் நீ தான் செகண்ட் லீட் என்று சொல்லி இருந்தார்கள். நான் படம் நடிக்கிறேன் என்பதை என் அப்பாவே நம்பவில்லை. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. படம் சூப்பராக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் ஹார்ட் பீட் கிரி:
இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. “You Only Live Once” என்பதுதான் யோலோ. தலைப்பே சிறப்பாக உள்ளது. நண்பர்களாகப் பெரிய ஆளுமைகள் வாழ்த்த வந்துள்ளதில் மகிழ்ச்சி. சாம் சார் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
Generous Entertainment சார்பில் கோகுல்:
இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார். புது முகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்த குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும். தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார். இப்போது தான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் ஆகாஷ் பிரேம்:
படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவி இயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி. அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார், மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார். ஒரு வருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம். இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒரு பாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் படவா கோபி:
2009 லேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் நான் முதலில் காமெடி தான் செய்வதாக இருந்தேன், ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்க வைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார். ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன். இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது – ஒரு இளமை கொண்டாட்டம். அனைவரும் பார்த்து ரசிக்கவும். நன்றி.
நடிகை தேவிகா:
நான் தமிழில் செய்யும் முதல் படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி. சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்த போது, சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் மிக அருமையாக வந்துள்ளது. செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் K.V. துரை:
நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குநர் சதீஷ்:
படக்குழு அனைவருமே இளமைத் துள்ளலுடன் இருக்கிறார்கள். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார். தேவ் எனக்குத் தம்பி மாதிரி. அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வர வேண்டும். வாழ்த்துகள்.
இயக்குநர் ARK சரவணன்:
டிரெய்லர் நன்றாக உள்ளது. அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர், அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காக தான் வந்துள்ளேன். அவரிடம் தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துக்கள்.
நடிகர் தேவ்:
இந்த வாய்ப்பு வரக் காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி. அவர் தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார். கதை கேட்டேன், ரொம்ப பிடித்தது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம் தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார். மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார். சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. என்னை இப்படிப் பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா, அம்மா, மாமா மூவரும் இல்லை. அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது. செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
Friday, August 29, 2025
Kuttram Pudhithu - திரைப்பட விமர்சனம்
இயக்குனர் நோவா ஆர்ம்ஸ்ட்ராங் இயக்கிய குற்றம் புதிது ஒரு தைரியமான அதிரடி–அமானுஷ்ய திரில்லர். இதில் மர்மம், பதட்டம், மனித உணர்வுகள் எல்லாம் கலந்திருக்கிறது. தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி ஆகியோரின் நடிப்பு இந்த படத்துக்கு பெரிய பலம். வாழ்க்கை–மரணம், உண்மை–மாயை ஆகியவற்றுக்கு நடுவே இருக்கும் மெல்லிய கோட்டை படத்தில் அழகாக ஆராய்ந்திருக்கிறார்.
கதை ஒரு அமைதியான நகரத்தில் தொடங்குகிறது. மதிப்புமிக்க ஒருவரின் கொலை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அந்த இறந்தவர் மீண்டும் உயிரோடு வந்துவிட்டாரோ என்ற அதிர்ச்சி திருப்பம் கதையில் வருகிறது. அந்த அமானுஷ்ய சம்பவம் கதையை வேறொரு திசையில் இழுக்கிறது. நீதி, பாவத்தின் சுமை, மீட்பு ஆகிய தீம்கள் படத்தில் ஆழமாக பேசப்படுகின்றன.
தருண் விஜய் போலீஸ் அதிகாரியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சந்தேகம் கொண்டும், உள்ளுக்குள் பயம் கொண்டும் அவர் காட்டும் நடிப்பு படத்துக்கு நம்பகத்தன்மை தருகிறது. சேஷ்விதா கனிமொழி தனது கதாபாத்திரத்தில் மர்மமும் உணர்ச்சியும் கலந்த சிறந்த நடிப்பை வழங்குகிறார். நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ் போன்ற அனுபவசாலிகள் படத்திற்கு சிறந்த வலிமை சேர்க்க, பிரியதர்ஷினி ராஜ்குமார் சில காட்சிகளில் உணர்ச்சி பூர்வமான தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறார்.
படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக உள்ளன. ஜேசன் வில்லியம்ஸ் எடுத்த ஒளிப்பதிவு இருண்ட காட்சிகளும், சஸ்பென்ஸ் உணர்வும் நிரம்பியுள்ளது. கமலா கண்ணன்’ன் எடிட்டிங் கதை ஓட்டத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. கரன் பி. க்ருபா கொடுத்த பின்னணி இசை பார்வையாளர்களை இறுதி வரை பதட்டத்தில் வைத்திருக்கும். தலைப்புப் பாடல் கூட முடிவில் ஒரு பேய்மறைச்சலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சில இடங்களில் கதை மெதுவாக செல்கிறது என்றாலும், குற்றம் புதிது முழுக்க முழுக்க ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சஸ்பென்ஸ், அமானுஷ்யம், உணர்ச்சி – மூன்றையும் கலந்து, பயம், குற்ற உணர்வு, மீட்பு பற்றிய ஆழமான சிந்தனையை எழுப்பும் படம் இது. அதிரடி திரில்லர் படங்களையும், உணர்ச்சி நிறைந்த கதைகளையும் விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.
*ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!*
Vasan Eye Care Offers Free Diabetic Retinopathy Treatment Under CMCHIS Scheme
RUC Sports Film Festival to debut in Chennai, launching the Rise Up Championship Foundation
Thursday, August 28, 2025
Sotta Sotta Nanaiyuthu - திரைப்பட விமர்சனம்
நவீத் எஸ். ஃபரீத் இயக்கிய சொட்ட சொட்ட நனையுது ஒரு சிரிப்பும், காதலும், ஒரு நல்ல மெசேஜும் சேர்ந்து வரும் காமெடி-டிராமா.
நிஷாந்த் ருசோ, கே.பி.வை. ராஜா, வர்ஷினி வெங்கட், ஷாலினி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், இன்றைய உலகத்தில் காதல், குடும்பம், தன்னம்பிக்கை ஆகியவற்றை லைட்டான முறையில் சொல்லுகிறது.
கதையின் மையத்தில் ராஜா (நிஷாந்த் ருசோ) இருக்கிறார் — பணம் நிறைய இருந்தாலும், இளமையிலேயே முடி உதிர்வதால் தன்னம்பிக்கை குறைவாக வாழும் இளைஞன். இதே சமயம் குடும்பம் அவனை கல்யாணம் பண்ண சொல்கிறது. அதிலிருந்து வரும் காதல் மூவர்க்கோணம் தான் கதையின் மையம் — அவனை உண்மையிலேயே புரிந்துகொள்ளும் ப்ரியா (வர்ஷினி வெங்கட்) மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழும் நவீன சுருதி (ஷாலினி). இந்தப் பயணத்தில், ராஜா தன்னுடைய குறைகளை ஏற்றுக்கொள்வதும், உண்மையான காதலை கண்டுபிடிப்பதும் தான் முக்கியம்.
நடிப்புகள்தான் படத்துக்கு உயிரூட்டுகிறது. நிஷாந்த் ருசோ, நகைச்சுவையுடனும், உணர்ச்சியுடனும் ராஜாவை இயல்பாக நடித்து இருக்கிறார். வர்ஷினி வெங்கட் ப்ரியாவாக அழகான மென்மையைக் கொடுத்திருக்கிறார். ஷாலினி சுருதியாக உற்சாகத்தையும், உயிரோட்டத்தையும் தருகிறார். கே.பி.வை. ராஜா, எப்போதும் போல, சிரிப்பை உறுதி செய்கிறார்.
இயக்குனர் நவீத் எஸ். ஃபரீத் கதையை எப்போதும் பளிச் பளிசென நகரச் செய்கிறார். ரெஞ்சித் உண்ணியின் பாடல்களும் பிஜிஎமும் காமெடியையும் உணர்ச்சியையும் நன்றாக கூட்டுகிறது. ரயீஸ் எடுத்த காட்சிகள் சென்னையை கலர்புல்லா காட்டுகிறது. எடிட்டர் ராம் சதீஷ் வேகம் குறையாமல் படம் செல்லுமாறு நன்றாக செதுக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தை வித்தியாசமாக்குவது — லைட்டான கதையில் ஒரு நல்ல மெசேஜை சேர்த்திருப்பதுதான். வாழ்க்கையில் குறைகள் இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, எதிர்பாராத இடங்களில் காதலை கண்டுபிடிக்கலாம் என்பதையே படம் நிதானமாகச் சொல்கிறது.
மொத்தத்தில், சொட்ட சொட்ட நனையுது ஒரு சிரிப்பு, காதல், நல்ல பாசிட்டிவ் உணர்ச்சி—all-in-one படம். குடும்பத்தோடு கூட சிரித்துப் பார்க்கக் கூடிய, நல்ல ஃபீல் குடுக்கும் காமெடி.
Veera Vanakkam - திரைப்பட விமர்சனம்
அனில் வி. நாகேந்திரன் இயக்கிய வீர வணக்கம் ஒரு சிந்திக்க வைக்கும் அரசியல் சமூக படம். வரலாற்றுப் பின்னணியையும், உணர்ச்சிகளையும் இணைத்து சொல்லப்பட்ட இந்தக் கதை, தமிழ்சினிமாவில் வித்தியாசமான பயணமாக திகழ்கிறது.
சமுத்திரகனி, பாரத், சுரபி லட்சுமி, ரமேஷ் பிஷாரொடி, சித்திக் உள்ளிட்ட வலுவான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், தமிழ்க் கிராமங்கள் சந்தித்த போராட்டங்களையும், அவற்றின் உறுதியையும் வெளிப்படுத்துகிறது. அதோடு, புரட்சிகர தலைவர்களான பி. கிருஷ்ண பிள்ளை மற்றும் பெரியாருக்கான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
கதை, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு கிராமத்தின் பயணத்தைச் சொல்லுகிறது. தன்னம்பிக்கையுடன், மரியாதைக்காக போராடும் அந்தக் கிராமத்தின் கதை மனதை உருக்கும். சமுத்திரகனி, கம்யூனிஸ்ட் தலைவராக வலுவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உடல் மொழியும் உரையாடலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறது. பாரத் தனது தீவிரத்தோடும், சுரபி லட்சுமி தனது விருதுகள் பெற்ற இயல்பான நடிப்போடும் ஒவ்வொரு காட்சியையும் உயர்த்துகிறார்கள். அவர்களுடைய உணர்ச்சி பூர்வமான காட்சிகள்தான் படத்தின் ஆன்மா. ரிதேஷ், சித்திக் போன்ற துணை நடிகர்களும் கதையை இன்னும் நிஜமாக்குகிறார்கள்.
படத்தின் காட்சிப்பதிவு மிக அழகாக உள்ளது. ஒரு பக்கம் கிராமத்தின் இயற்கை அழகு, மறுபக்கம் சாதிய அடக்குமுறையின் கொடுமை—இரண்டையும் சமநிலையில் காட்சிப்படுத்துகிறது. இசை方面, எம்.கே. அர்ஜுனன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் உணர்ச்சியை உயர்த்துகிறார்கள். சிம்மக் குரலோன் போன்ற பாடல்கள் புரட்சித் தீயை ஊட்ட, நாட்டுப்புற இசை தமிழரின் கலாச்சாரத்தை உணர வைக்கிறது.
வீர வணக்கம் படத்தை வித்தியாசமாக்குவது, சமூகச் செய்தியும் ஈர்க்கும் கதை சொல்லலும் இணைந்திருப்பதுதான். சமத்துவம், நீதி, புரட்சி போன்ற கருத்துகளை வலியுறுத்தியிருக்கிறது. சற்று மந்தமான இடங்கள் இருந்தாலும், படம் முழுக்க கவனத்தைப் பிடித்துக் கொள்கிறது.
மொத்தத்தில், வீர வணக்கம் ஒரு சாதாரண படம் அல்ல. அது ஒரு புரட்சிக்கும், உறுதியுக்கும், மனித நேயத்திற்குமான மரியாதை. துணிவானதும், உணர்ச்சியோடும், சமகாலத்துக்கு பொருத்தமோடும் நிறைந்த இந்தப் படம், பார்வையாளர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
Naruvee - திரைப்பட விமர்சனம்
சுபராக் எம் இயக்கத்தில், ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில், ஹரிஷ் சினிமாஸ் சார்பில் வெளியான இந்த படம், தமிழ்சினிமாவுக்கு ஒரு புதிய பாணியில் வந்திருக்கிறது. பயமுறுத்தும் ஹாரர் காட்சிகளோடு சமூகப் பொலிவு கலந்த ஒரு கதை.
கதை நடைபெறும் இடம் அழகானதுடன் மர்மமூட்டும் நீலகிரி காடு. அங்குள்ள பழமையான கதையம்சம் ஒன்று சொல்கிறது:
"ஆண்கள் உள்ளே சென்றால், உயிருடன் திரும்பி வரமாட்டார்கள்."
இந்தக் கதையின் மையத்தில், ஆராய்ச்சிக்காக அந்தக் காட்டுக்குள் செல்லும் ஐந்து பேர் மற்றும் ஒரு ஜோடி இருக்கிறார்கள். அங்கே நடந்த சம்பவங்கள்தான் படத்தின் நரம்பை பிடிக்கும் காட்சிகள். மக்கள் சொல்லும் கதைகள் நிஜமா? அதனுடன் கலக்கும் சஸ்பென்ஸ், மனித உணர்வுகள்—இதுதான் படத்தின் சாரம்.
ஆனால், படம் வெறும் ஹாரர் சினிமா மட்டும் இல்ல. கதை சொல்லும் போது பழங்குடி தோட்டத் தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்கப் போராடும் வாழ்க்கையை நெருக்கமாக காட்டுகிறது. அதனால், படம் பயமுறுத்துவதோடு, மனதில் யோசிக்க வைக்கும் செய்தியையும் தருகிறது.
மருத்துவராக இருக்கும் இளம் நடிகர் ஹரிஷ், தனது முதல் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இயல்பான நடிப்பு, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அவருடன் விண்ஸ், வி.ஜே. பாப்பு, பாதினி குமார், ஜீவா ரவி, பிரவீனா ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.
நீலகிரி காடு படத்தில் ஒரு தனி கதாபாத்திரமாகவே தெரிகிறது. அதன் அழகும், அதே நேரத்தில் அச்சமூட்டும் சூழலும், சஸ்பென்ஸை இன்னும் அதிகமாக்குகிறது. சுபராக் எம் இயக்கம் படிப்படியாக திகிலையும் ஆர்வத்தையும் கூட்டுகிறது.
FIR புகழ் அஸ்வத் இசை அமைத்திருக்கிறார். அவர் கொடுத்த பிஜிஎம், ஒவ்வொரு காட்சியையும் இன்னும் ஆழமாக உணர வைக்கிறது—பயம் தரும் இடங்களிலும், உணர்ச்சி நிறைந்த தருணங்களிலும்.
மொத்தத்தில், இது வெறும் ஹாரர் படம் இல்ல. பொழுதுபோக்கும், சமூகச் செய்தியும் ஒன்றாக கலந்த ஒரு பயணம். கல்வி, சமத்துவம் பற்றி சிந்திக்க வைக்கும் விதத்தில், திகிலும், உணர்ச்சியும் கலந்த ஒரு நல்ல சினிமா அனுபவம்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!*
Wednesday, August 27, 2025
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!*
Mohan g’s next Draupathi -2 first look !!!
குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!
ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் குழுமத்தின் முயற்சியில் பாங்காங்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்விற்கு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்கிறது
ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் குழுமத்தின் முயற்சியில் பாங்காங்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்விற்கு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்கிறது.
இதன் முன்னோட்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மை செயலாளர் திரு. சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்., ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் - இன் சி.இ.ஓ. திரு. விக்ரம் கோட்டா, IRTS குழும பொதுமேலாளர் திரு. ராஜலிங்கம் பாசு, UNSDC இன் பகுப்பாய்வு இயக்குனர் திரு. பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாங்காக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் (UNCC) நடைபெறும் 5 வது சர்வதேச இளைஞர் மன்றத்தில், உலகளாவிய எதிர்காலத்திற்காக இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில், வரும் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்ய தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள், ஜி.ஆர்.டி - இன் வழிகாட்டுதலில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த கௌரமுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்த அதிமுக்கிய மைல்கல் ஐ.நா. வின் பொருளாதார மற்றும் சமூக சபையுடன் (ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்து கொண்ட அமைப்பான, நிலையான மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்த ஐ.நா.வின் மாணவர் கல்வி பயணத்தின் (SEEUN) ஒரு பகுதியாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (எஸ். டி. ஜி) அடைவதற்கான நுண்ணறிவுகளையும், உத்திகளையும் பகிர்ந்து கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள சர்வதேச தலைவர்கள், அரசப் பிரதிநிதிகள், இளம் கண்டு பிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களை இந்த மன்றம் கூட்டும்.
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிகழ்வில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்ய,தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலம், கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள், தகுதி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இது தமிழ்நாட்டின் முற்போக்கான கல்விக் கொள்கைகளுக்கும், சமத்துவம், அணுகல் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றில் அதன் நம்பிக்கைக்கு ஒரு பிரகாசமான சான்றாகவும் அமைந்தது. ஜி.ஆர்.டி. ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் - இன் இந்த முயற்சி, வெறும் பயணத்தைப் பற்றியது அல்லாமல் மாற்றத்தைப் பற்றியது. இதில் பல மாணவர்கள் முதல் முறையாக தங்கள் சொந்த மாவட்டங்களை விட்டு வெளியேறுகிறார்கள், தரமான கல்வி, பருவநிலை நடவடிக்கை, பாலின சமத்துவம், புதுமை மற்றும் தலைமைத்துவம், உலகளாவிய குடியுரிமை போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் இளைஞர்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்த உலக அரங்கிற்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க உள்ளனர்.
அவர்களின் பங்கேற்பு இதே போன்ற சூழ்நிலைகளில் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளை பெரியதாக கனவு காண ஊக்குவிக்கும்.
ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் ஆதரவு இல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவ பிரதிநிதிக்குழுவின், இந்த வாழ்க்கையை மாற்றும் பயணம் சாத்தியமில்லை.
பலர் இதை ஒரு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வின் (CSR) முன்முயற்சியாகப் பார்க்கக்கூடும் என்றாலும், ஜி.ஆர்.டி. யைப் பொறுத்தவரை, இது மிகவும் இதயப்பூர்வமானது.
தமிழ்நாட்டில் அதன் வேர்கள் மற்றும் வணிகங்களை மட்டுமல்ல, சமூகங்களையும் கட்டியெழுப்பும் பாரம்பரியத்துடன், ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் தங்களை வடிவமைத்த மண்ணுக்கு திருப்பித் தருவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த குழந்தைகளை ஆதரிப்பது எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதற்கும், சலுகைகளுக்கும் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், நிலையான சமூக தாக்கத்தை உருவாக்குவதற்கும் அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.
இந்த மாணவர்கள் மில்லியன் கணக்கானவர்களின் கனவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஒரு உள்நாட்டு அடையாளமாக அவர்கள் கண்ணியம், பெருமை மற்றும் நம்பிக்கையுடன் உலக அரங்கை அடைவதை உறுதி செய்வது தங்களது தார்மீகப் பொறுப்பு மற்றும் மரியாதை என்று உணர்ந்தோம் என ஜி. ஆர். டி ஹோட்டல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் கோட்டா கூறினார்.
1.YS yalini 16 Namakkal district government model school, keerambur
2.Dharanisri.M AGE 13 GOVERNMENT MODEL HIGHER Secondary School Vallam Thanjavur
3.Nisanthini age 15 Government Higher Secondary School latheri Vellore
4.Kamlesh age 15 Government Boys higher secondary School komarapalayam Namakkal
5. V. Ragul age 13 Government Higher Secondary School kandigai Chengalpattu
6.Ashwak Age: 16
School: Municipal Boys Higher Secondary School
Fort, Salem-1.
சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!
“சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..! கலைஞர் தொலைக்காட்சியில் ஞாய...
-
கே.ராஜன் வெளியிட்ட டீசர்! கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " ப...
-
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...