*18 Mall பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்ட Launch ஐ பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், அதன் இயக்குனர் பிரியதர்ஷினி குமார் மற்றும் மேலாண் இயக்குனர் ஜான் கிறிஸ் டெரன்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.*
கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூரில் 18 மால் புதிய வாழ்க்கை முறையின் அடையாளச் சின்னமாக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
பிரபல உணவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஒரு துடிப்பான புதிய அத்தியாயத்தை, 18 மால் வழியே பிரமாண்டமாக திறக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது நவீன வாழ்க்கை முறையை விரும்புவோருக்கு ஒரு சங்கமமாக அமைந்துள்ளது. 18 மால் என்பது வெறும் வர்த்தக பகுதி மட்டுமல்ல, இது ஒரு கண்டுபிடிப்பு. சந்திப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மாற்றத்திற்கான இடமாகும்.
18 மால்-இன் இயக்குனர் பிரியதர்ஷினி குமார் குறிப்பிடும்போது, 18 மால் ஒரு வழக்கமான சென்டர் அல்ல-இது பிராண்டுகள் மற்றும் அனுபவங்களுக்கான ஒரு தொகுக்கப்பட்ட கேன்வாஸ் என்றார். ஒவ்வொரு வருகையும் புதிய மற்றும் மறக்க முடியாத நினைவை வழங்கும் இடமாக வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
18 மாலின் கருத்தாக்கத்தின் மையத்தில் அதன் தனித்துவமான ஒரு பிராண்ட், ஒரு உணவு தத்துவம் உள்ளது. இதன் ஒவ்வொரு கடையும் வாழ்க்கை முறை, உணவு முறை, ஆகியவற்றிற்கு ஒரு பிராண்ட் மற்றும் கருத்தாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. பார்வையாளர்களை ஈடுபடுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் ஆழமான, உண்மையான அனுபவங்களை இது வழங்குகிறது.
குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் தனிநபர்கள் பொழுதுபோக்கவும், ரசிக்கவும் ஒரு இடமாக 18 மால் உருவாக்கபட்டுள்ளதாக அதன் மேலாண் இயக்குனர் ஜான் கிறிஸ் டெரன்ஸ் தெரிவித்தார்.
கஃபேக்கள், பொழுதுபோக்கு மண்டலங்கள் மற்றும் திறந்தவெளி ஓய்வறைகளுடன், 18 மால் கிழக்கு கடற்கரையின் புதிய விருப்பமான ஹேங்கவுட்டாக மாறி உள்ளது.