சர்வதேச அரங்கில் சென்னைஸ் அமிர்தா மாணவி ஸ்ரேயா அனீஷ் வெற்றி! சென்னைஸ் அமிர்தா chairman திரு R பூமிநாதன் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா !!
2025 ஹோட்டெலெக்ஸ் சீனா சர்வதேச சீன சமையல் சாம்பியன்ஷிப் போட்டியை World Association of Chefs Societies உடன் இணைந்து நடத்தியது. இதில் சென்னைஸ் அமிர்தா கல்லூரி மாணவி செல்வி ஸ்ரேயா அனீஷ் தங்கப் பதக்கத்துடன் Overseas Award வென்று ₹2.50 லட்சம் பரிசு பெற்றார்!
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் MBA (ஹோட்டல் மேனேஜ்மென்ட்) மாணவியான செல்வி ஸ்ரேயா அனீஷ், சீனாவின் செங்டூ நகரில் ஜூலை 24 முதல் 26 வரை நடைபெற்ற 2025 ஹோட்டெலெக்ஸ் சீனா இன்டர்நேஷனல் சைனீஸ்-CUISINE சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் வெளிநாட்டு சாம்பியன் விருது வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
WORLD ASSOCIATION OF CHEFS SOCIETIES (Worldchefs) அங்கீகரித்த இந்த புகழ்பெற்ற போட்டியில், பழம் மற்றும் காய்கனி சிற்பம் (Fruit & Vegetable Carving) பிரிவில் போட்டியிட்ட ஸ்ரேயா அனீஷ், காரட், பூசணிக்காய் மற்றும் மஸ்க் மெலன் ஆகியவற்றைப் பயன்படுத்தி CARP மீன் வடிவமைப்பை, ஜப்பான், வடத் தாய்லாந்து மற்றும் வியட்நாம் காய் கனி சிற்ப நுட்பங்களை இணைத்து உருவாக்கினார்.
சீனா, தாய்லாந்து, வட கொரியா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 175 காய்கனி சிற்ப நிபுணர்களுடன் போட்டியிட்டு, 100ல் 92 மதிப்பெண்களுடன் பெற்று, போட்டியாளர்களுள் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று போட்டியில் முதன்மை சாம்பியனாக வெற்றி பெற்றார்.
வெற்றியின் தொடர்ச்சியாக தங்க பதக்கத்துடன் சிறந்த வெளிநாட்டு சாம்பியன் விருதையும், அதனுடன் RMB 20,000 (சுமார். ₹2.50 லட்சம்) பணப் பரிசையும் வென்றார். இந்த மதிப்புமிக்க விருது World Association of Chefs Societies-ன் துணைத் தலைவர் டாக்டர் ரிக் ஸ்டீபன் அவர்களால் வழங்கப்பட்டது.
ஸ்ரேயா அனீஷ் -ன் சாதனைகள் – ஒரு பார்வை:
ஸ்ரேயா அனீஷ், சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் BSC in Hotel Management பயிலும்போது பல்வேறு சர்வதேச சமையல் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற IKA Culinary Olympics-ல், இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார் . கடந்த 124 ஆண்டுகளில் கலினரி ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறை. மேலும், ஷார்ஜா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சர்வதேச வெற்றியை கொண்டாடும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு விழா சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கேம்பஸ் (மவுண்ட் ரோடு ) நடைபெற்றது.
சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனத்தின் chairman திரு R பூமிநாதன் அவர்கள் பேசுகையில், எங்கள் மாணவி ஸ்ரேயா அனீஷ் -ன் சாதனை, இந்தியாவையும், எங்கள் கல்வி நிறுவனத்தையும் உலக அரங்கில் பெருமைப்பட வைத்துள்ளது என்றார். இந்த சாதனை, ஸ்ரேயா அவர்களின் திறமை, மற்றும் உழைப்பிற்கு ஒரு சிறந்த சான்றாகும். அவரின் உழைப்பு மற்றும் திறமையை பாராட்டும் விதமாக செல்வி ஷ்ரேயா அனீஷின் MBA கல்வி கட்டணம் முழுவதையும் சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனமே ஏற்று கொள்ளும் என்று தெரிவித்தார் .
இந்த வெற்றிக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த சென்னைஸ் அமிர்தாவின் காய்கனி சிற்பக்கலை பயிற்சியாளர் Chef கார்த்திக் அவர்களை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் திரு R பூமிநாதன் -Chairman, திருமதி கவிதா நந்தகுமார் – CEO, திரு சுரேன் – DEAN ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்,