Tuesday, August 5, 2025

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!

ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா”  படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!

~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல்,  இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~


இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான  ZEE5,  வரும் சுதந்திர  தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க,  அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா"  ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும்.  இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், அஸ்கர் அலி, மாதவ் சுரேஷ் கோபி மற்றும் பைஜு சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள  இந்தப் படம், சட்டத்தின் குறைபாடுகள், தார்மீக தெளிவின்மை மற்றும் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நீதியை வடிவமைக்கும் அரசியல் அடித்தளங்களை ஆராய்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா, விவாதத்தைத் தூண்டும் மற்றும் இதயங்களைத் தொடும் ஒரு துணிச்சலான, கதையைச் சொல்கிறது.

கேரள நீதித்துறை அமைப்பின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிபுணரான ஜானகி வித்யாதரன் (அனுபமா பரமேஸ்வரன்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, தனது சொந்த ஊருக்குப் பண்டிகைக் கால பயணம் செல்வது ஒரு இருள் மிகு  கனவாக மாறுவதைப் பின்தொடர்கிறது. நீதியைத் தேடத் தீர்மானித்த அவள், கூர்மையான மற்றும் சாந்தமான வழக்கறிஞரான டேவிட் ஆபெல் டோனோவன் (சுரேஷ் கோபி) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட முன்வரும்போது, ஒரு சிக்கலான சட்டப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள். சட்ட வாதங்களுக்கும் பாதிக்கப்பட்ட உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஜானகியின் போராட்டம், இந்திய நீதித்துறை அமைப்பின் ஆழமான தார்மீக மற்றும் நெறிமுறை சங்கடங்களை அம்பலப்படுத்துகிறது. சட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய உலகில், சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகள் மங்கலாகி, ஒரு கேள்வியை விட்டுச்செல்கின்றன. ஜானகிக்கு உண்மையில் என்ன நடந்தது, நீதி என்றால் உண்மையில் என்ன? என்பது தான் இந்தப்படத்தின் மையம். 

ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவர் மற்றும் தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறுகையில்…,
 “இந்த சுதந்திர தினத்தன்று எங்கள் பார்வையாளர்களுக்கு ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  படத்தை  வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த படம் அதன் சக்திவாய்ந்த கருப்பொருளுக்காக மட்டுமல்லாமல், அது உருவாக்கப்பட்ட நேர்மையுடனும் தனித்து நிற்கிறது. பிரவின் நாராயணன் போன்ற ஒரு தீவிர திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் தலைமையிலான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. இது பரபரப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற டிராமா திரைப்படமாகும், இது பொழுதுபோக்கு மட்டுமல்ல - இது சிந்தனையைத் தூண்டுகிறது, விதிமுறைகளைச் சவால் செய்கிறது மற்றும் பலர் எதிர்கொள்ளத் தயங்கும் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிறது. கேரளாவில் வேரூன்றிய இந்தக் கதை, இப்போது முழு தேசத்துடனும் பேசும் என்பது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்படுவதன் மூலம், கொச்சி, கொல்கத்தா அல்லது கான்பூரில் உள்ள ஒவ்வொரு பார்வையாளரும் ஜானகியின் நீதிக்கான போராட்டத்தை அணுகவும், அனுபவிக்கவும் முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஒரு சக்திவாய்ந்த கதை எல்லைகள் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை ZEE5 நம்புகிறது, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படமும் அந்த மாதிரியான படம்தான்."

 தயாரிப்பாளர் ஜே. பணீந்திர குமார் கூறுகையில்..., 
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  படத்தைத் தயாரித்தது எனது திரைத்துறை வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள அனுபவங்களில் ஒன்றாகும். இந்தக் கதை வெறும் சட்டப் போராட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல - இது உண்மை, தைரியம் மற்றும் குற்றத்திற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணின் அமைதியான வலிமையைப் பற்றியது. ZEE5 உடனான எங்கள் கூட்டணி, இந்த சக்திவாய்ந்த கதையை, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை அவர்களின் சொந்த மொழிகளில் சென்றடையச் செய்துள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உங்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு படம், மேலும் இது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” 

இணைத் தயாரிப்பாளர் சேதுராமன் நாயர் கன்கோல் மேலும் கூறுகையில்… , 
“ஆரம்பத்திலிருந்தே, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  நேர்மை, பச்சாதாபம் நிறைந்த  மற்றும் கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒரு நம்பமுடியாத படைப்பாற்றல் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதும், இப்போது ZEE5 உடன் கூட்டணி சேர்வதும், நம்பமுடியாத அளவிற்குப் பலனளிப்பதாக உள்ளது. இந்த வெளியீட்டைச் சிறப்புறச் செய்வது என்னவென்றால், வடக்கு முதல் தெற்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்வையாளர்கள் இப்போது ஜானகியின் பயணத்தை,  தங்கள் சொந்த மொழியில் பார்க்க முடியும். இந்தப் படம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தியைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம்.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பிரவீன் நாராயணன் கூறுகையில், 
“முதல் வரைவிலிருந்து இறுதிப் படப்பிடிப்பு வரை, ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா  ஒரு அன்பின் உழைப்பாகும், இது ஒரு உயிர் பிழைத்தவரின் குரலைப் பெருக்கி, நமது அமைப்பில் உள்ள விரிசல்களில் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு தொலைநோக்குப் பார்வையால் இயக்கப்பட்டுள்ளது. ஒரு அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றிய சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர், நான் எதிர்பார்த்த விதத்தில் கதையை உயிர்ப்பித்தனர். ZEE5 உடனான எங்கள் ஒத்துழைப்பு, தைரியம், நேர்மை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் பிரதிபலிப்பான இந்தக் கதையை, இப்போது பார்வையாளர்களை அவர்களின் விரல் நுனியில் சென்றடையச் செய்கிறது. இது ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு வாய்ப்பாகும். இந்த சுதந்திர தினத்தன்று எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இதைப் பார்த்து, படத்தின் துடிப்பை அதன் தயாரிப்பின் போது நாங்கள் செய்ததைப் போலவே, வலுவாக உணர வேண்டும் என்று நான் ஆவலாக உள்ளேன்.”

நடிகர் சுரேஷ் கோபி கூறுகையில்.., 
“ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா   திரைப்படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகுந்த உணர்ச்சிப்பூர்வமானது, பார்வையாளர்கள் இந்தக் கதையை அன்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எங்கள் கதைசொல்லலில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இப்போது ZEE5 இல் உலகம் முழுக்க அதை அனுபவிப்பதைக் காண ஆவலாக  இருக்கிறேன்.  டிஜிட்டல் வெளியீடு மூலம் ஜானகியின் குரல், அவரது போராட்டம், அவரது வலி மற்றும் அவரது தைரியம் ஆகியவை இறுதியாக இந்தியா முழுவதும் வீடுகளை எட்டும் . “டேவிட் ஏபெல் டோனோவனின் கதாபாத்திரம் இன்றைய  உலகில் நேர்மை மற்றும் தார்மீக சிக்கலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து பிறந்தது. ஒரு உயிர் பிழைத்தவரின் சார்பாக நீதிக்காக நீதிமன்றத்தில் போராடுவது எனக்குச் சவால் விடுத்த ஒரு பாத்திரம், ஆனால் அது என்னை நிலைநிறுத்தியது. படம் ஒளிபரப்பப்படும்போது பார்வையாளர்கள் அதன் ஆன்மாவுடன் இணைந்திருப்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன், மேலும் அவர்கள் ஜானகியின் குரலையும் கேட்பார்கள் என நம்புகிறேன். 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறிகையில்.., 
“ஜானகி பாத்திரத்தைச் சித்தரித்தது எனது திரை வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பயணங்களில் ஒன்றாகும். அவர் எண்ணற்ற கேட்கப்படாத குரல்களின் சின்னம், மேலும் அவரது கதையை நேர்மையுடனும் பச்சாதாபத்துடனும் உயிர்ப்பிப்பதில் எனக்கு ஒரு மகத்தான பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். திரையரங்க வெளியீட்டின் போது எங்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும் மிகப்பெரியதாக இருந்தது, இப்போது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ZEE5 இல் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைக் காண்பார்கள்  என்பதில் நான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது ஆன்மாவுடன் பேசும் ஒரு கதை - வலிமை, மீள்தன்மை மற்றும் உலகம் உங்களை மௌனமாக்க முயற்சிக்கும் போது கூட எழுந்து நிற்பது பற்றிய அவசியத்தைச் சொல்லும் கதை. ஜானகியின் தைரியம் பார்க்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.”

இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின்  டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள்.

India's BIGGEST Fashion & Lifestyle Exhibition Returns to Chennai on 5th& 6th August at Hyatt Regency, Anna Salai*

*India's BIGGEST Fashion & Lifestyle Exhibition Returns to Chennai on 5th& 6th August at Hyatt Regency, Anna Salai* ...