கலைஞர் டிவியில்
லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும் சீசன் 2” ஆரம்பம்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.