Wednesday, November 19, 2025

கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்

KALAIGNAR TV – GOWRI SERIAL
கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்காவுக்கு எதிராக சூழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் ஆவுடையப்பன் குடும்பம் துர்காவை கொல்ல திட்டமிடுகிறது.
 
இந்த இக்கட்டான சூழலில், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் கடப்பா கனகா. முன்பு, துர்கா சிகிச்சையில் இருக்கும் போது, துர்காவாக ஆவுடையப்பனின் குடும்பத்தை ஆட்டி படைத்த கனகா, மீண்டும் வந்திருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதால் தொடர் இனி பரபரப்பாக நகரும்.

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்!

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்! 20 26 ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் ரொம...