கலைஞர் டிவியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”
இளம் திறமையாளர்களுக்காக கலைஞர்தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி"லிட்டில் சூப்பர் ஹீரோஸ்".
வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் அசாத்தியதிறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாகஉருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம், பலதரப்பட்ட மற்றும் வித்தியாசமான திறமைகள்உலகறியப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக இருக்கும் கருணாகரன் தொகுத்து வழங்குகிறார்.