Saturday, November 27, 2021
Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும்“பன்னிக்குட்டி”
வனம் திரை விமர்சனம்
Friday, November 26, 2021
Rajavamsam Movie Review
மாநாடு விமர்சனம்
Thursday, November 25, 2021
VIJAY ANTONY & ‘THAMIZH PADAM’ Series fame Director CS AMUDHAN's SHOOT STARTS WITH Formal pooja today.
VIJAY ANTONY & ‘THAMIZH PADAM’ Series fame Director CS AMUDHAN's
SHOOT STARTS WITH Formal pooja today.
Actor Vijay Antony’s forthcoming movies have created big expectations across the trade circle. Precisely, his movies have been consistently winning the hearts of audiences for stories that are relatable to them, and his spellbinding performances. A recent example is 'KODIYIL ORUVAN'. Moreover, he has become a producers’ delight not alone for the fact that his flicks are spinning big profits, but his discipline, punctuality, and dedication that lets the crew wrap up the shoot as planned. Furthermore, he has become the busiest actor in K-Town as he keeps shooting round the clock without any break. It is obvious that the trade circles have already declared the year 2022 as a profitable phase as movies which are streamlined in order are scheduled for release. During this juncture, the shooting of his new project directed by 'Tamizh Padam' series fame CS Amudhan commenced this morning (November 25, 2021) with a Pooja ceremony. The occasion was attended by the cast and crew members of the film.
Filmmaker CS Amudhan who owns a unique caliber of creating a new genre in the Tamil movie industry with his ‘Tamizh Padam’ franchise, and with this film, will enthrall audiences with a different stroke.
The producers' Kamal Bohra, G. Dhananjayan, B. Pradeep & Pankaj Bohra of Infiniti Film Ventures have evidently become the role model for many aspiring and even the reigning producers of contemporary times. They have clearly registered with their action that producers’ task isn’t just about funding a project but ensuring a smooth release with perfect marketing and publicity works.
The talks are going on with a top league actress to play the female lead role, and the official announcement regarding this will be made soon.
This yet-to-be-titled film is produced by Kamal Bohra, G. Dhananjayan, B. Pradeep & Pankaj Bohra of Infiniti Film Ventures. Vijay Antony, whose previous movie 'Kodiyil Oruvan' was a great box office success & is currently working on 'Kolai' & 'Mazhai Pidikatha Manithan' for the same Producers.
Press Meet of Edesia featuring Chef Loki past Masterchef Australia Contestant
Ladies Circle India Known as LC India, is a non-political and non-sectarian Organisation. It
Offers Opportunities for serving the community, for fostering and strengthening friendships
between like-minded young women and helps create a better understanding of the
obligations one owes to society.
Today Ladies Circle India comprises over 1800 members with 132 active Circles spread
across India. We are present in 19 states and 57 cities.
The organization works towards providing education and educational infrastructure for the
underprivileged children under our long-term Project known as Educate to enlighten. Apart
from this we also work on the development, empowerment, and employment of women. As a
part of our women empowerment program, we have opened many skill-based training
centers and vocational training centers where they have learned and mastered a skill to make
a living.
We have also been working and creating an impact in other areas like Go Green, Able the
Disabled, Fight Hunger, Hair for Hope. These are a few of our initiatives and long-term
projects that Ladies circle India is associated with.
We have had CSR tie-ups with corporates like ITC Limited, cognizant outreach, cognizant
foundation, RR Donnelley, P&G Shiksha, and many more where we have worked together and
as of date, we have built 7141 Classrooms with an Infrastructure built to impact 7.86 million
children in India.
Tuesday, November 23, 2021
வாயை திறக்காம சைலண்ட்டா இரு ; புளூ சட்டை மாறனுக்கு மேடையிலேயே அட்வைஸ் பண்ணிய ராதாரவி - Anti Indian Audio Launch
வாயை திறக்காம சைலண்ட்டா இரு ; புளூ சட்டை மாறனுக்கு மேடையிலேயே அட்வைஸ் பண்ணிய ராதாரவி
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.,
இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்..
நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல
இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. நிஜம் தான்.. அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார்.. நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க.. திட்டத்தான் செய்வாங்க.. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.. அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.. அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.
ஒரு படத்தை படமா பாருங்க.. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.. விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க..
நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.
படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.
இயக்குநர் புளூ சட்டை மாறன் பேசும்போது, “.இந்தப்படத்துல ஜெயராஜ்னு நிஜமான ரவுடி ஒருத்தரை முக்கியமான வேடத்துல நடிக்க வச்சிருக்கேன்.. இந்தப்படத்தோட ட்ரெய்லர் வெளியான பின்னாடி அவருக்கு ஏழு படம் புக் ஆகிருக்கு.
விஜய் டிவி புகழ் பாலா ஒருமுறை ஏதேச்சையா என்ன சந்திச்சப்ப வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தப்படத்துல அவருக்கு நல்ல கேரக்டர் ஒன்னு இருந்தது. அதனால அவரை கூப்பிட்டு நடிக்க வச்சேன்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் லேட்டாவே வந்துக்கிட்டு இருந்தாரு.. ஏழு மணிக்கு வரச்சொன்னா எட்டு மணிக்கு வர்றாரேன்னு கடுப்பாகி, தம்பி நீ பின்னால சிம்பு மாதிரி பெரிய ஆளா வருவப்பா அப்படின்னு சொன்னேன்.. ஆனா அவரை ஒன்பது மணிக்குத்தான் வரச்சொல்லி இருக்காங்க.. ஆனா அவரு எட்டு மணிக்கே வந்துருக்கார்னு அப்புறம் தான் தெரிஞ்சது,.
இந்தப்படத்துல ராதாரவி சார் நடிச்சாத்தான் நல்லா இருக்கும்னு அவருகிட்ட மூணு தடவை போய் கதை சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு.. படம் பார்க்கிறதுக்கே லைவா இருக்கணும்கிறதால அவரையும் இயல்பா காட்டணும்னு சில விஷயங்களை செய்ய சொல்லி அவர்கிட்ட சொன்னேன்.. அதுக்கு அவரு, அப்படின்னா முதலிரவு காட்சியையும் அப்படித்தான் லைவா பண்ணுவியான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டார் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்..
ஆனா நான் சொன்னபடி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரோட வசனத்துல கரெக்சன்லாம் பண்ணினாரு.. ஒரு இயக்குனரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல.. அதனால நீ சொன்ன மாதிரியும் எடுத்துக்க.. நான் கரெக்சன் சொன்ன மாதிரியும் எடுத்துக்க, உனக்கு எது சரியா படுதோ அதை பயன்படுத்திக்க அப்படின்னு சொன்னாரு.. அவரு சொன்ன மாதிரி ரெண்டு விதமாவும் எடுத்துட்டு, படத்தை எடிட் பண்ணும்போது ரெண்டையுமே மிக்ஸ் பண்ணி பயன்படுத்திட்டேன்.. ரொம்பவே நல்லா வந்திருக்கு
சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன்.. சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னாடி, இந்தப்படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள் கூட ரசிகர்களால பெரிசா கவனிக்கப்படுவாங்க” என்றார்
பிக்பாஸ் புகழ் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது, “இந்தப்படத்துல நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் பலரும் மாறன் படத்துலயா நடிக்கிற, அவருக்கு டைரக்சன்லாம் தெரியுமான்னு கேட்டாங்க.. ஆனா ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து பண்ணிருக்காரு.. ஆனா இந்தப்படம் வெளியானதும் நானே ஒரு புளூ சட்டையை போட்டுக்கிட்டு வந்து அவரோட சேனல்லேயே இந்தப்படத்துக்கு விமர்சனம் பண்ணுவேன்.. அதுக்கு மாறன் அனுமதி தரனும்’ என பேசினார்.
இயக்குனரும் நடிகருமான ராமகிருஷ்ணன் பேசும்போது, “இந்தப்படத்தோட சேலம் ஏரியா விநியோக உரிமையை நான் தான் வாங்கிருக்கேன்.. சேரன்கிட்ட உதவி இயக்குனரா வேலை பார்த்த சமயத்துல அவரோட ஆட்டோகிராப் படத்தையே சேலத்துல வெளியிட வாய்ப்பு கிடைச்சது.. ஆனா அந்த சமயத்துல அதை பண்ண முடியாம போச்சு. மிகப்பெரிய லாபத்தை மிஸ் பண்ணினேன்.. ஆனா இந்தப்படத்தை பார்த்ததும் இதை சேலத்துல நாம ரிலீஸ் பண்ணனும்னு முடிவு பண்ணி வாங்கினேன்.. இப்ப மிகப்பெரிய தியேட்டர்லாம் போட்டிபோட்டு படத்தை கேட்டுக்கிட்டு இருக்காங்க.” என்றார்.
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “மாறன் ஒரு மனோ தத்துவ நிபுணர் மாதிரி. படம் ரிலீசானதுமே பாக்கணும் அப்படிங்கிற ஆர்வத்தால நமக்கு ஏற்படுற மன உளைச்சல் அவரோட விமர்சனங்களை பார்த்ததும் அப்படியே குறைஞ்சிரும்.
இந்தப்படத்துக்கு மாறன் தான் இசையமைச்சிருக்காரு.. அதுபத்தி அவரு தன்னடக்கமா தான் பேசினாரு.. ஆனா படத்துக்கு என்ன தேவையோ அதை சரியா பண்ணிருக்காரு.. இந்தப்படம் வெளியானதும் நிறைய படங்களுக்கு அவரை இசையமைக்க கேட்டு வந்தாலும் அதுல ஆச்சர்யப்பட தேவையில்லை. வடிவேலுக்கு அப்புறமா யதார்த்தமா நடிக்கிற காமெடி நடிகர் இல்லாத சூழல் இருக்கு.. ஆனா இந்த விஜய் டிவி பாலா நிச்சயம் காமெடில ஒரு பெரிய ஆளா வருவாரு.. ஷூட்டிங்ஸ்பாட்டுல இவரோட நடிப்பை பார்த்து அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.. ராதாரவி மாதிரி சீனியர் நடிகர்கள் சொல்கிற கரெக்சன்களை ஏத்துக்கிறதுல தப்பே இல்ல. அவரை மாதிரியான அனுபவசாலி நடிகர்களை நாம தொடர்ந்து பயன்படுத்திக்கணும்.
இந்தப்படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.. இந்தப்படத்தால ஏற்கனவே லாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் இதுக்கு முன்னாடி நிகழ்ச்சில சொல்லிருந்தேன்.. ஆனா அப்படி ஏதும் நடக்கலை.. ஏன்னா இந்தப்படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு.
இந்தப்படத்தை வெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப்படத்தை வாங்க தயங்குனாங்க.. தமிழர்களுக்கு எதிரான பேமிலிமேன்-2 மாதிரியான படங்களை ரிலீஸ் பண்றாங்க.. ஆனா தமிழர்களுக்கான படத்தை ரிலீஸ் பண்ண மறுக்கிறாங்க.. அதனால ஒரு பக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம்.. இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப்படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம்.. இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்துருக்கோம்னு சொல்லலாம்” என்று பேசினார்..
Monday, November 22, 2021
சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.
சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ - பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.
‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச் செவ்வானம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர்.
பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இனணந்து தயாரித்துள்ளனர். இயக்குநர், நடிகர் சமுத்திரகனி கூறியதாவது…
பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர், “சித்திரைச் செவ்வானம்” திரைப்பட இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கூறியதாவது…
"இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக்கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்த கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷீட்டிங் போகலாம்’ என்று கேட்டார். அப்படி உருவானது தான் ‘சித்திரைச் செவ்வானம்' திரைப்படம். நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்சன் படம் என்று நினைத்து விடாதீர்கள், நெஞ்சை தொடுவது போன்ற உணர்வு பூர்வமான படம் தான் இது. ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவு தான் கதை. சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை. இந்தப்படத்தின் முக்கியமான மகள் பாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் விஜய் கூறினார். எங்களுக்கும் அவர் பாத்திரத்தில் சரியாக பொருந்துவார் என தோன்றியது. மிக அற்புதமாக மகள் பாத்திரத்தை செய்து அசத்திவிட்டார். படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தை, கேரளாவில் புகழ்பெற்ற நடிகையான ரீமா கலிங்கல் செய்திருக்கிறார். நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறோம். நினைத்ததை விட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது. தற்போது ZEE5 தளத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வெளிவருகிறது. எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய படமாக இப்படம் இருக்கும். அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி' என்றார்.
நடிகை ரீமா கலிங்கல் கூறியதாவது…
'முதலில் மாஸ்டர் சில்வாவும், இயக்குநர் விஜய்யும், 'சித்திரைச் செவ்வானம்' படத்திற்காக என்னை அணுகி, போலீஸ் பாத்திரம் என்று சொன்ன போது, நானும் இதை ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்று தான் நினைத்தேன். அப்பா மகளுக்கான ஆழமான உணர்வை சொல்லும் கதையை சொல்லி, என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் மாஸ்டர். தமிழ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதை காண பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குநராக தன் திரைப்பயணத்தை துவங்கும் ஸ்டண்ட் சில்வா சாருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக வாழ்த்துக்கள். நன்றி' என்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான விஜய் கூறியதாவது…
'டிசம்பர் 3 ஆம் தேதி ZEE5 ஒடிடி தளத்தில் சித்திரை செவ்வானம் வெளியாகிறது. இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான படைப்பு. 2014 ல் எனக்கு தோன்றிய ஒரு சிறு ஐடியாவை ஒரு கதையாக எழுதி வைத்திருந்தேன். 2020 பொதுமுடக்க காலத்தில் நானும் சில்வா மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்த போது, இந்தக் கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களே இயக்குங்கள் என்று சொன்னேன். ஒரு ஆக்சன் இயக்குநர் என்றால் ஆக்ஷனில் மட்டும் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொள்வார்கள், ஆனால் சில்வா மாஸ்டர் மிகவும் எமோஷலானவர், அவருக்குள் ஒரு மென்மையான பக்கம் இருக்கிறது. மிகவும் எளிய சுபாவம் கொண்டவர், நிறைய பேருக்கு உதபுபவர். அவர் இந்தக் கதையை மிகச் சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் இந்தப்படத்தை நீங்கள் இயக்குங்கள் என்று சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்து இப்படத்தை செய்தது, எனது கடமையாகத் தான் நினைக்கிறேன். சில்வா மாஸ்டர் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். இப்படம் உருவானதற்கு முழுக்காரணம் அவர் தான். அடுத்ததாக சமுத்திரகனி சார் அவர் தான் இப்படத்தின் உயிர். நாங்கள் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு, தன்னுடைய சொந்தப்படம் போல் அர்ப்பணிப்புடன் செய்து தந்தார், அவருக்கு நன்றி. முக்கியமான பாத்திரத்தில் சாய்பல்லவி தங்கை பூஜா கண்ணன் நடித்திருக்கிறார். ஒரு பிரபலத்தின் தங்கை என்றில்லாமல், நடிப்புக்காக தனியே பயிற்சி எடுத்துகொண்டு நடிக்க வந்திருக்கிறார். மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல் நாங்கள் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு ரீமா கலிங்கல் மிக முக்கியமான பாத்திரத்தை செய்துள்ளார். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை வெளியிடும் ZEE5 நிறுவனத்திற்கு மிகப்பெரும் நன்றி, அவர்களுடன் இணைவது எங்களுக்கு பெருமிதம்.' என்றார்.
‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
Sunday, November 21, 2021
சந்தானமின் - ‘சபாபதி’ விமர்சனம்
சபாபதி விமர்சனம்
தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஒரு நபரின் இலக்கை தீர்மானித்தன. தொடக்கத்தில் சபாபதியின் வாழ்க்கை நிகழ்வுகள் விதியால் வடிவமைக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்தில், அவர் பேச்சுக் கோளாறால் சிக்கல்களை எதிர்கொண்டார், இது அவரை தயக்கங்கள் மற்றும் சில ஒலிகளை வலுக்கட்டாயமாக திரும்பத் திரும்பச் சொன்னது. சந்தேகத்திற்கு இடமின்றி, ஏற்ற தாழ்வு மனிதனின் வாழ்க்கையை வடிவமைக்கிறது. இதை இயக்குனர் திரையில் கோடிட்டு காட்டினார்.
ஓய்வுக்குப் பிறகு சபாபதியின் தந்தை கணபதி (எம்.எஸ். பாஸ்கர்), அவர் தனது மகனை வேலையில் அமர்த்துவதற்கான நிறுவனங்களைப் பட்டியலிட்டு வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, நேர்காணல் செய்பவர் அவரது திணறல் பிரச்சினைக்காக அவரை அவமானப்படுத்துகிறார், இறுதியில் அவரது அயலவர்களும் நண்பர்களும் கோளாறு பிரச்சினையால் அவரை புண்படுத்துகிறார்கள். ஆதாரங்களுடன், சூட்கேஸில் ஏராளமான பணம் வைத்திருந்த அரசியல்வாதியுடன் சபாபதிக்கு இடையே முன்கூட்டியே ஒரு விளையாட்டை விளையாடுகிறது.
சந்தானம் திரைக்கதைக்கு ஏற்ப மிகப்பெரிய மாற்றத்தை எடுக்கிறார். இப்படத்தில் "சபாபதி" சந்தானம் ஒரு அப்பாவி விசித்திரமான வேடத்தில் நடிக்கிறார், சந்தானம் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்துள்ளார், நகைச்சுவை காட்சிகள் பிரமாதம், ப்ரீத்தி வர்மா சாவித்திரி கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குனர் சீனிவாச ராவ் அற்புதமான ஸ்டஃப்டுகளுடன் நகைச்சுவையான உள்ளடக்கத்தை கொடுத்துள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை படத்தில் மிளிர்கிறது.
Saturday, November 20, 2021
கடைசீல பிரியாணி - விமர்சனம்
சிக்குப் பாண்டியாக விஜய் ராம். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் காஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். ஜோன் கரியாவாக ஹக்கிம் ஷாஜஹான். நாயாட்டு, கூடே போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர். இந்த இருவரைத் தவிர படத்தில் பல புதிய முகங்கள். பெரிய பாண்டியாக வரும் வசந்த் செல்வம் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். தனக்கு இருக்கும் அந்த வெறி ஏன் தம்பிகளிடம் இல்லை என மூர்க்கத்தோடு அணுகும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். அவர் போடும் ஸ்கெட்சுகளும் வேற லெவல். மிகவும் கேசுவலான வில்லனாக வந்து அசத்துகிறார் ஹக்கிம். இவ்வளவு கூலாக ஒரு எதிர்மறை கதாபாத்திரம் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அதிலும் சீரியஸான காட்சிகளில் அவரின் குரூர நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. அதிலும் அந்த டீசர்ட் ஜோக், செம ரகளை! படத்தின் கதை சொல்லும் நாயகனாக வருகிறார் விஜய் சேதுபதி.
நடிகர்கள்:-
வசந்த் செல்வம்,
ஹக்கிம் ஷா,
விஜய் ராம்
இசை:- ஜூடா பால், நேய்ல் செபாஸ்டியன்
இயக்கம்:- நிஷாந்த் கலிதிண்டி
மக்கள் தொடர்பு:- நிகில் முருகன்
Thanks
Jango Tamil Movie Review
சதீஷ் குமாருடன் வெளியான "ஜாங்கோ" படத்தில் ஒரு முன்னணி பாத்திரத்தில் இருந்தார், அவர் ஒரு மருத்துவராகவும், மிர்னாலினி ரவி தொலைக்காட்சி சேனலின் ஆர்வமுள்ள நிருபராகவும் நடித்தார். தம்பதியரின் உறவு, முதல் பாதி வரை குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஒரு தீப்பந்தம் பூமியை நோக்கி பயணிக்கிறது, அது வெளியேறும் மற்றும் இந்த சூழ்நிலையில் மக்கள் பயமுறுத்துகிறார்கள். கதை நேர சுழற்சியுடன் பயணிக்கிறது, வெளிப்படையாக ஹீரோ நேர சுழற்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். இந்த டைம் லூப் மூலம் சதீஷ் (கௌதம்) பின்விளைவுகளை எதிர்கொள்கிறார்.
ஜாங்கோ திரைப்படம், வேண்டுமென்றே தவறாகவும் நம்பத்தகாததாகவும் இருந்தது, இது ஏலியன் சாதனம் பூமியை அடைந்தது மற்றும் விஞ்ஞானி மற்ற சாதனத்தை செயலிழக்கச் செய்தார். ஜாங்கோ ஒரு புதிய கருத்தாக்கத்துடன் முயற்சித்தார். துரதிருஷ்டவசமாக, ஒவ்வொரு வரிசையிலும் உணர வேண்டும்.
படத்தை இயக்கியவர் மனோ கார்த்திகேயன், அவர் பார்வையாளர்களின் நிலைத்தன்மையை ஆராய்ந்தார். அறிமுக நடிகரான சதீஷ் நடிப்பு படிப்படியாக இருந்தது மற்றும் மற்ற கலைஞர்களான மிர்னாலினி ரவி, கருணாகரன் மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் ஸ்கிரிப்டை நோக்கி முன்னேறினர். கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாங்கோ படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்
சதீஷ்,
மிர்ணாளினி ரவி,
கருணாகரன்,
ரமேஷ் திலக்
இசை:- ஜிப்ரான்
இயக்குனர்:- மனோ கார்த்திகேயன்
மக்கள் தொடர்பு:- நிகில் முருகன்
Thanks
Prabhu Deva's Pon Manickavel Movie Review
"Pon Manickavel" Movie - Produced by Hitesh Japak for Nemichand Japak Films and directed by A.C. Mukhil, 'Pon Manickavel', starring Prabhu Deva, Niveda Pethuraj, director Mahendran, Suresh Menon, and Mukesh Tiwari, has been released on Disney+ Hotstar OTT. Prabhu Deva, an honest police officer, has resigned from his job and is farming. A judge is beheaded and killed in a house located on the east coast of Chennai. The police are seeking PrabhuDeva's help for the murder case. Prabhu Deva rejoins the service Prabhu Deva is killed at the same time with a bomb in front of his eyes Did a police officer eventually find the killers? The rest of the story of 'Pon Manickavel' is what caused the murder. Prabhu Deva, who plays the role of a police officer, has handled most of the scenes with body language that is not too fussy. Nivetha Pethuraj, who is a commercial hero in action scenes and is Prabhu deva's wife, has done the job well. Director Mahendran is in small scenes but the scenes are supporting the movement. The roles of Suresh Menon and Sudhansu Pandey, who play villains, reflect the vile little intellect of big men. Director Mahendran is supporting the story move. Cinematographer KG Venkatesh has traveled according to the story. D.Imman is the type of music that hears uthira song and via gold song. There is no change in background music. Director A.C. Mukhil Chellapan can be generously praised for insisting that those who commit sexual offenses against women should be punished severely and that it is right for a police officer to work for the people rather than for his department. The police character has shown the law and order properly. We have seen the stories of so many honest police officers in Tamil cinema. In that respect, the film Ponmanicavel is the story of an honest officer who is dutiful. The director has directed and released the 90th story in 2021.
Actors:-
Prabhu Deva,
Nivetha Pethuraj,
Director Mahendran, Suresh Menon
Music – D.Imman
Director – A.C. Mukhil
PRO – Yuvraj
Thanks
Thursday, November 18, 2021
நடிகர் சசிகுமார் நடிப்பில் ‘தொரட்டி’ பட இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படம்
தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார்.
Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் G.M.டேவிட் ராஜ் கூறினார்.
மாநாடு பட விழா மேடையிலேயே கண்கலங்கிய சிம்பு
மாநாடு பட விழா மேடையிலேயே கண்கலங்கிய சிம்பு
“பிரச்சனைகளை நான் பாத்துக்குறேன்.. என்னை நீங்க பாத்துக்குங்க” ; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
யுவன் சங்கர் ராஜா நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்வேன்” ; மேடையிலேயே அறிவித்த சிம்பு
வெங்கட்பிரபுவுக்கு மாநாடு மேடையில் சவால் விட்ட பாரதிராஜா
“சிம்பு கொடுத்த வேலையை நூறு சதவீதம் திருப்தியாக செய்துள்ளேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
இளையராஜாவுக்கு ஒரு காதலுக்கு மரியாதை.. யுவனுக்கு ஒரு மாநாடு
“சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு’ ; சிம்புவை மேடையில் வெட்கப்பட வைத்த பாரதிராஜா
இயக்குனர்களில் எம்.எஸ்.தோனி தான் வெங்கட் பிரபு ; ஒய்ஜி மகேந்திரன் புகழாரம்
“சிம்புவின் டான்ஸ் பார்க்க நேரில் சென்றார் ரஜினி” ; சத்யஜோதி தியாகராஜன் சொன்ன ருசிகர தகவல்
“எஸ்ஜே சூர்யா ஒரு நவீன நம்பியார்” ; மாநாடு மேடையில் பட்டம் சூட்டிய தயாரிப்பாளர் சிவா
“கிங் ஆப் பேக்ரவுண்ட் ஸ்கோர்னா அது யுவன் தான்” ; எஸ்ஜே சூர்யா
“மங்காத்தாவுக்கு ஒண்ணு ; மாநாட்டுக்கு நிறைய” ; உண்மையை உடைத்த எஸ்ஜே சூர்யா
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.
கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப்படம் பண்ணலாம் என சிம்புவிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவ்வளவு பெரிய படத்தை நம்மால் பண்ண முடியுமா என ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிம்பு என்னிடம் ஒப்படைத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறேன் என்கிற திருப்தி கிடைத்தது. உக்கம்சந்த், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆதரவுடன் எந்தவித தடங்கலும் இல்லாமல் படத்தை முடித்து விட்டோம்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்..நாதன் இந்திப்படம் போல காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை படம் ஒரு கம்பேக் படமாக இருந்ததோ, அதேபோல யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த மாநாடு படம் இருக்கும். எஸ்ஜே.சூர்யா கூட, இது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட்.. ஹிந்தி ரீமேக் நல்லா போகும் என்றார். தெலுங்கிலும் கூட அவரே டப்பிங் பேசியுள்ளார்” என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “சிம்புவை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்வார்கள்.. ஆனால் அவரை பற்றி சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது எல்லாமே பொய். அவரிடம் சில சேஷ்டைகள் உண்டு.. ஆனால் அவை எல்லாமே எனக்கு பிடிக்கும்.. இந்த வயதில் அப்படி சேஷ்டைகளுடன் இருந்தால் தான் அவர் சிம்பு. நான் படமெடுத்த காலத்தையும் இப்போது வெங்கட் பிரபு படமெடுக்கும் விதத்தையும் பார்த்து பிரமித்து போய் நிற்கிறேன். அதேசமயம், வெங்கட்பிரபு நீதான் பெரியவனா..? உனக்கு போட்டியாக நானும் மீண்டும் படமெடுப்பேன்” என ஜாலியாக சவால் விடுத்தார்.
நடிகர் ஒய்.’ஜி.மகேந்திரன் பேசும்போது, “இன்று திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இரண்டே இரண்டு பேர் தான் சினிமாவுக்காகவே பிறந்தவர்கள். ஒருவர் கமல்.. இன்னொருவர் சிம்பு... அந்த அளவு சினிமா பற்றியே நினைக்க கூடிய ஒருவர் தான் சிம்பு.. இந்தப்படத்துல சிம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுறாரான்னு என்கிட்டே கேட்டாங்க.. ஆமா பிரச்சனை பண்றார்.. சொன்ன டைமுக்கு சரியா வந்து கோ-ஆபரேட் பண்றாரு.. அதான் பிரச்சனைன்னு சொன்னேன்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சுமைதாங்கி அப்படின்னா, வெங்கட் பிரபு இயக்குனர்களில் எம்.எஸ்.தோனின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா பிரச்சனைகளையும் கூலாக கையாளுவார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரெக்கார்டு பிரேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது. எனக்கு இன்றைக்கே ரிலீஸ் தேதியாக இருக்க கூடாதா என ஏக்கமாக இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, “நாங்கள் பணக்காரன் படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னபையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, வாங்க நாமளும் பார்த்துட்டு வரலாம் என கூறினார். அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க.. பின்னாடி பெரிய ஆளா வருவான் என அப்போதே கணித்து பாராட்டினார். நானும் அப்போது இருந்து சிம்புவின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.. அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்” என கூறினார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் மேற்பார்வை பொறுப்பை சுரேஷ் காமாட்சி சில நாட்கள் என்னிடம் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒய்வு எடுக்கும்போது நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்து தூங்குவதை பார்த்து, சிம்பு தனது நாற்காலியை கொடுத்து என்னை வசதியாக தூங்க வழி செய்து கொடுத்தார். பெரியவர்களை மதிக்கும் குணம் அவரிடம் நிறையவே இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “எல்லோருக்கும் பிடித்த நடிகர் சிம்பு.. பிடிக்காது என்று சொல்வதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு ரசிகனாக நான் சொல்வதெல்லாம், நீங்க எப்ப வேணா வாங்க, எப்படி வேணா வாங்க,.. ஆனா அடிக்கடி வாங்க.. அதேமாதிரி இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவை நவீன நம்பியார் என இனிமேல் சொல்லலாம். எப்படி நம்பியார் இல்லாமல் படங்களே இல்லை என முன்பு ஒரு நிலை இருந்ததோ அதேபோன்ற ஒரு காலகட்டத்தை எஸ்ஜே.சூர்யா இப்போது கொண்டுவந்து விட்டார்” என்றார்.
நடிகர் எஸ்.ஜே/சூர்யா பேசும்போது, “நான் அன்பே ஆருயிரே படத்தில் நடிச்சப்ப சில நேரம் சிம்புவை டைரக்ட் பண்ண சொல்லி நடிச்சிட்டு இருப்பேன்.. அந்த அளவு நாங்க திக் பிரண்ட்ஸ்.. எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும் ஒரு கனெக்சன் என்னன்னா அவர் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன்.. அவர் பிரச்சனைகள்ல சிக்கி கஷ்டப்பட்டா நானும் கஷ்டப்படுவேன். இப்ப அவர் நல்லா இருக்கார்.. நானும் நல்ல இருக்கேன்..
சில சில காரணங்களால இடையில கொஞ்சம் கேப் விட்டுட்டார். ராமனே பதினாலு வருஷம் காட்டுக்கு போய் வந்தாரு.. சிம்புவுக்கும் அந்த மாதிரி தான் இது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்துக்கு எந்த கஷ்டமும் வந்துட கூடாதுன்னு எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டார்..
ஒரே நேரத்துல பத்து படம் பண்ணுனா எவ்வளவு கவனம் இருக்குமோ அதை இந்த ஒரே படத்துல வெங்கட் பிரபு செஞ்சிருக்கார். அந்த அளவுக்கு பவர்புல்லான ஸ்கிரிப்ட் இது. இனி அடுத்து அவர் படம் பண்ணுனா அது பான் இந்தியா படமா தான் டைரக்ட் பண்ணனும்.
இந்தப்படம் டப்பிங் பண்ணும்போது ஏகப்பட்ட மாடுலேஷன்ல பேசியே எனக்கு கழுத்து வலி, முதுகு வலி எல்லாம் வந்துச்சு. போதாக்குறைக்கு நானே தெலுங்குல டப்பிங் பேசுறேன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன்.. டப்பிங் முடிச்சுட்டு படத்தை பார்த்தப்ப தான் தோணுச்சு.. தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர்ற அன்னைக்கு தான்டா தீபாவளி அப்படின்னு ட்வீட் போட்டேன்.
யுவனோட பின்னணி இசை பத்தி சொல்லனும்னா என்னோட பொம்மை படத்திற்கு அவர் மியூசிக் போட்டிருந்ததை பார்த்துட்டு கிங் ஆப் பேக்ரவுண்ட் ஸ்கோர்ன்னு அவருக்கு மெசேஜ் போட்டேன்.. வாசுகி பாஸ்கர் கூட ஒரு தடவ சொல்லும்போது, மங்காத்தா படத்துல யுவன் அற்புதமான தீம் மியூசிக் போட்டிருந்தாலும், அதையே பல இடங்கள்ல காபி பேஸ்ட் பண்ணிட்டார். ஆனா இந்த மாநாடு படத்துல ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனி ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கார் அப்படின்னு சொன்னாங்க.. அப்படி ஒரு கலைஞனா அவரை விதவிதமா பண்ற அளவுக்கு இந்தப்படம் ஈர்த்திருக்கு. ” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “நானும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து பிரியாணி படம் பண்ணிய சமயத்துலே இந்த கதையை அவர் என்னிடம் சொல்லிருக்கார்.. சொல்லப்போனா இந்தப்படத்தோட கதையில இருந்து கிளைக்கதையா தான் பிரியாணி உருவானது. சிம்பு சார் இந்தப்படத்துல நான் வந்துட்டேனு ஒரு வசனம் பேசுறார். அவர் இப்படி சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்.. வெற்றி மட்டும் அவருக்கு ரிப்பீட் ஆகிட்டே இருக்கட்டும்” என்றார்.
யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “வெங்கட் பிரபு இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே எதற்கு எப்படி இசையமைக்க போகிறோம் என்கிற ஆர்வத்துடன் கொஞ்சம் புதிராகவும் இருந்தது.. காரணம் டைம் லூப்பில் திரும்ப திரும்ப பல காட்சிகள் ரிப்பீட் ஆகும். ஆனால் முழுப்படத்தையும் பார்த்தபோது ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்தது. இதில் நீங்க வழக்கமாக பார்க்கும் சிம்புவை பார்க்க முடியாது.” என்றார்.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, “நான் சென்னை-28 படம் பண்ணின சமயத்துல மதுரை ரிலீஸ்ல சிக்கல் ஏற்பட்டபோது சிம்புதான் அதை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பல முறை பேசியும் மாநாடு படத்துல தான் அது நடந்துருக்கு. இந்தப்படத்தோட ஒன்லைன் மட்டும் தான் சிம்புகிட்ட சொன்னேன்.. ஆனால் அதுல வர்ற ஹீரோவோட அப்துல் காலிக் அப்படிங்கிற பேரு அவருக்கு ரொம்பவே புடிச்சு போச்சு. என் படத்துக்கு யுவன் ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவார்னு சொன்னாங்க.. ஆனா சிம்பு படத்துக்கு தான் யுவன் ரொம்ப ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவாரு” என்றார்.
நாயகன் சிம்பு பேசும்போது, “என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு. வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம்.. என்கிட்ட அவனது அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு.. ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு,.. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம்.
இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்கு புரியும்.. ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம். யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை தான் இருக்கு..
இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் பிச்சு உதறி இருக்காரு. நான் விரல்ல வித்தை பண்ணுவேன்னு சொல்வாங்க.. ஆனால் என்னோட நடிச்ச ஒய்ஜி மகேந்திரன் சார் விரல்லயே நடிச்சிருக்கார்.. இந்தப்படம் முடியுற வரைக்கும் பிரேம்ஜிகிட்ட அப்பப்ப, பிரேம் ஓவரா நடிக்காதன்னு சொல்லகிட்டே இருந்தேன்..இந்தப்படத்துல சண்டைக்காட்சிகள்ல நடிக்கிற அடிபட்டுச்சு..
என்றவர் திடீரென கண் கலங்கினார்..
“என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசிய சிம்பு, அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சை நிறைவு செய்தார்.
Actor Arya’s The Show People in association with Think Studios Presents Filmmaker Shakti Soundar Rajan director Arya starrer titled “CAPTAIN”
Filmmaker Shakti Soundar Rajan director
Arya starrer titled “CAPTAIN”
Following the grand success of Teddy, the actor Arya-filmmaker Shakti Soundar Rajan duo has collaborated yet again for a new-fangled movie. As the K-Town knows, the shoot commenced recently in Chennai and is proceeding at a brisk pace. Now the makers have unveiled the film’s title ‘CAPTAIN’.
Sharing the news, director Shakti Soundar Rajan says, “The term ‘CAPTAIN’ is significant and relevant in many aspects of reality. From a sports team to any societal avenue, the term holds substantial prominence. It’s not a position but a character that plays a pivotal tool in accomplishing a mission by leading a team. Significantly, this factor will remain germane to the character that Arya plays in the movie.” The filmmaker, who has delivered consistent hits down the line adds, “Titles have always played a strong part attributing over pulling crowds towards a film. Especially, during this flourishing realm of OTT platforms, which have permanently bridged the gap between countries, boundaries, and linguistic factors, titles are playing an important role in appealing to the interest of universal audiences. More than all, the movie has 100% element that will justify the reason behind having ‘Captain’ as the title.”
Speaking about actor Arya’s performance in the film, Shakti Soundar Rajan adds, “What can I say about an actor, whose dedication and passion for every role and movie is an open book. A Captain is someone, who believes in the process with strong faith, sheer allegiance to the role, which obviously yields the finest results. It has been illustrious with every film he does and Captain will expand his fan base across all regions.”
The first leg shooting of Captain will be completed soon, and the crew will be leaving for North Indian territories by mid-December for the second schedule, where a major chunk of this movie will be filmed. The others in the star cast include Simran, Aishwarya Lakshmi, Thyagarajan, Kavya Shetty, Harish Uthaman, Gokul, Bharath Raj, and a few more prominent actors.
Captain has a musical score by D Imman, cinematography by S. Yuva, lyrics by Karky, editing by Pradeep E Raghav. The others in the technical crew include R. Sakti Saravanan is the stunt choreographer, S.S. Moorthy is the art director, and V. Arun Raj is the CG Head.
The film is written and directed by Shakti Soundar Rajan and is produced by Arya’s The Show People in collaboration with Think Studios
Tuesday, November 16, 2021
STUDIO GREEN K.E. GNANAVEL RAJA PRESENTS A HARIKUMAR DIRECTORIAL PRABHU DEVA STARRER “THEAL” MOVIE AUDIO AND TRAILER LAUNCH EVENT
A HARIKUMAR DIRECTORIAL
PRABHU DEVA STARRER “THEAL” MOVIE AUDIO AND TRAILER LAUNCH EVENT
The audio and trailer launch of Prabhu Deva starrer “Theal” was held this evening in Chennai, which witnessed the presence of eminent personalities from the movie industry. The film is directed by Harikumar and is produced by Studio Green K.E. Gnanavel Raja. Prabhu Deva and Eeswari Rao have played the lead roles as mother and son. C Sathya has composed music for this film.
Here are some of the excerpts from the occasion.
Actor Prabhu Deva said, “Director Harikumar has done a fabulous job, and his efforts are beyond usual limits. Art director has come up such a brilliant work that audience will really feel difficult in analyzing whether the locations are original or set work. I thank Dhananjayan sir for heartiest wishes. The dubbing process for the movie was really interesting as I completed the process by half a day. Music director Sathya sir reminds me of my chemistry teacher in school. He has done a great work and we will be working together in many movies. K.E. Gnanavel Raja sir’s journey as a producer has been tremendous and the movies he has created and released are blueprint for many aspiring producers. Hari and I have been close friends for years. We worked as assistant choreographer and now he is all set to prove his brilliance again. This was a really different experience for me as this movie doesn’t have any dance moments for me, and I am a left-handed character, which made me feel this is a first-time movie for me. He would always keep a check on my limit and would instantly inform me if I am moving back to my routine performance. Eeswari madam is one of the prominent artists in the Tamil movie industry. Samyuktha is a bubbly performer and her acting is going to be a special highlight. I thank Anbariv for their support, and their contribution has been a big part of enhancing the movie. Theal will be an intense movie and will be definitely liked by all.”
Actress Samyuktha said, “The day before a particular song that was screened now, I had an accident. The shooting had to get canceled. While driving the bike in Mysore I had to go through this issue. Later, Prabhu Deva sir requested me to take a rest and despite his busy schedule, he accepted to shoot the song after a month. Till now, I have done 8 movies but didn’t get an opportunity to dance. This is the second time opportunity to work with Prabhu Deva sir as I missed the first one. I took up a resolution not to dance onscreen until I get an opportunity to work with Prabhu Deva sir. Hope I will get an opportunity to dance with him in the near future. It was super fun working with the entire team. Special thanks to the director and producer for casting me in this movie.”
Music Director Sathya said, “It’s a blessing and gift to be scoring music for Prabhu Deva sir’s movie. Harikumar sir wanted me to be a part of this movie because BGM has a vital role in this movie. There is a particular scene in the movie, where Prabhu Deva sir hugs his mother, and I felt it heart-touching. I personally told this to Hari Kumar sir. Hari Kumar sir always believes in slow and steady process. Prabhu Deva sir’s performance will be critically acclaimed. The other actors have indeed delivered an incredible performance. Theal will be a special movie for audiences as they can relate to it personally.”
Director Hari Kumar, “K.E. Gnanavel Raja sir is the main reason why I am here. I thank him for banking his hopes on me and this project. The significance of Theal (Scorpion) and its relevance with the movie will be prevalent here. Usually this creature gives birth to 40 offspring at a time, and will carry all of them of its back to keep them safety. On the other hand, it will kill itself if a drop of alcohol is spit on it. Moreover, it is scientifically proved that individuals bitten by scorpion will not get heartache. There will be whole lots of elements in this movie signifying this nature. Music director Sathya and the 4 lyricists have been incredible in enhancing the emotional aspect of the movie. Prabhu Deva sir gave a lot of suggestions in shaping the lyrics. The mother-son relationship in this movie will be more relatable to all. Art director Senthil has done fabulous work with Koyambedu market sequences. The reason behind many prominent actors being a part of this movie is because of their desire to share the screen space with Prabhu Sir and another reason is this movie was produced by K.E. Gnanavel Raja sir. Eeswari madam has been a huge support to this film. She has delivered an excellent performance as a mother. Samyuktha has come up with spellbinding work. It’s nice to see everyone after the pandemic season and I thank the producers for this beautiful arrangement.”
Producer G Dhananjayan said, “I have already watched this film and it’s going to be an important film in the career of director Harikumar sir. Personally, I felt this is the best-ever movie of Prabhu Deva sir for his performance is colossal. Everyone has watched Prabhu Deva sir’s dance performance and action-packed spell, but Theal will establish him as a performance artist in an emotional premise. This will be more like a benchmark of how ‘Nanda’ was for Suriya. He has done an extraordinary work in the sentimental scenes. Every actor and technician in the movie has done a remarkable piece of contribution, and I extend my advance congratulations for the success. Dialogues are going to be an important highlight. Samyuktha has always been far-famed for her dance, but it’s a surprise to see her in a different dimension, and her performance is going to be lauded to a greater degree. This will be a milestone for producer K.E. Gnanavel Raja sir’s Studio Green Films.”
Producer K.E. Gnanavel Raja, Studio Green Films said, “Studio Green Films has always made movies that are commercially successful and content-driven. Theal will be one such movie. This movie will be a different experience for the entire team. Right from childhood, I have been an ardent fan of Prabhu Deva sir after Superstar Rajinikanth sir. His younger brother Nagendra Prasad and I are school classmates and we used to watch all the movies together. One day, I went to his house and got to see the rehearsal that Prabhu Deva sir was doing, which made me literally spellbound. I got an opportunity to meet him personally during the Malaysia program. Prabhu Deva Master is a perfectionist. As a producer, I was really enthralled with his dedication and never had a single issue from his end. This movie will be a different experience for all as director Harikumar has done a unique treatment. Prabhu Deva sir and other actors will not have more dialogues but will be more performance-oriented like how Sivakarthikeyan sir didn’t have dialogues in the Doctor movie. In fact, Yogi Babu sir and heroine have more dialogues. Eeswari madam has done great work, and this movie will make audiences make miss their mother after watching this movie. Theal will be a unique experience for the family audiences.”
Monday, November 15, 2021
கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சவீதா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.என்.வீரையன் அவர்களின் சேவையைப் பாராட்டி வாழ்த்தும் விதமாக, நிறுவனர் தினவிழா 15.11.2021 அன்று கொண்டாடப்பட்டது. சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கனரக சரக்கு போக்குவரத்து துறையில் நாட்டிலேயே முன்னோடியாக செயல்பட்டு வரும் பிரபல NTC குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர்.க.சந்திரமோகன் அவர்கள், தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் தனது நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய கனரக சரக்கு போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொறியியல் துறைகளில் முன்னணி நிறுவனமாக உருவாக்கியுள்ளார். மேற்க்கூறிய துறைகளில் பலவித புதுமைகளை புகுத்தி சாதனைகளைப் படைத்துள்ள முனைவர்.க.சந்திரமோகன், சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும், ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளை கவுரவிக்கும் வகையில், சவீதா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவில், ....... அவர்கள், முனைவர்.க.சந்திரமோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார்.
நடிகர் மஹத் ராகவேந்திரா நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், “ONSKY Technology PVT. LTD” நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திரு.முத்து சம்பந்தம் வழங்கும் திரைப்படம் "2030" !
திரைத்துறையில் எனது புதிய பயனத்தை துவக்கியபோது, இந்த துறையில் போராடும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்பதே, எனது முதல் குறிக்கோளாக இருந்தது. திரைத்துறையில் புத்தம் புதிய சிந்தனைகளும், புதுமையான பார்வைகளும் எப்போதும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும். அந்த வகையில் ஒரு புதுமையான திரைக்கதையை தேடிக்கொண்டிருந்த போது, இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்களின், முழுதாக முடிக்கப்பட்ட 2030 திரைக்கதை பார்வைக்கு வந்தது. இத்திரைக்கதை எண்ணற்ற ஆச்சர்யங்களை கொண்டிருந்தது. தமிழுக்கு முற்றிலும் புதிதான ப்ளாஷ் பார்வேர்ட் ( Flash forward ) முறையில், கதை சொல்லும் வகையில், அதிலும் டைம் டிராவல் சம்பந்தப்படாமல் இந்த வகையில் கதை சொல்லும் முதல் படைபாக இருந்தது. எல்லாவற்றையும் விட உலகம் முழுவதையும் தாக்கியிருக்கும், பெருந்தொற்று காலத்தையும், பொதுமுடக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு . இதன் கதை கார்ப்பரேட் மருத்துவதுறையின் பின்னணியில் உள்ள சதிகளையும், அதனுடன் ஒரு பழிவாங்கலையும் முதன்மையாக கொண்டு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை 2020 ல் துவங்கி 2030 ல் முடிவடையும். இந்த சுவாரஸ்யங்கள் அனைத்தையும் தாண்டி, ப்ளாஷ்பேக்கில் சிக்கிக்கொள்ளாத தனித்துவமான ஒரு திரைக்கதையாக எனக்கு பெரும் திருப்தியை இந்த திரைக்கதை அளித்துள்ளது. நடிகர் மஹத் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நட்டத்திரமாக மாற்றும். புதுமுக நடிகை ஸ்வாதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவர் ஒரு விளையாட்டு வீரர், தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர். மேலும் நடன கலைகளில் சிறந்து விளங்க கூடியவர். அவரது இந்த திறமைகள் அவரை ஒரு நட்சத்திர நாயகியாக முன்னிறுத்தும். இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி வருகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.
இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிதான அனுபவத்தை தரும் என்றார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், படம் உருவாகிவரும் விதத்தில், பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் திரு.முத்து சம்பந்தம்.
Thursday, November 11, 2021
Boom Motors launches production with promise to transition India to clean mobility
ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*
*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா-...
-
நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை " கடமை" என்ற பெயரில் படமாகிறது! _________ புது இயக்குனர் அறிமுகமாகிறார...
-
நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - " P 2 - இருவர் " தான் இசை விழாவில் இசையமைப்பாளர் தேவா !! "...