Friday, January 14, 2022

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.


 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார்.


இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.


திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.


இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது


தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்


தயாரிப்பு - 24 HRS புரொடக்‌ஷன்ஸ்

எழுத்து இயக்கம் - K.திருஞானம்

ஒளிப்பதிவு - விக்ரம் மோகன்

இசை - சித்தார்த் விபின்

கலை - R.ஜெனார்த்தனன்

காஸ்டுயும் டிசைனர் - நிவேதிதா

புரொடக்ஷன் எக்ஸிகியுடிவ் - விஜய்

சண்டை பயிற்சி - "Rugger" ராம்

நடனம் - தீனா

ஸ்டில்ஸ் - பாக்யா

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் - சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் 'தினசரி'

CYNTHIA PRODUCTION  தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க  ஸ்ரீகாந்த் -  சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம்...