சவுத் இந்தியன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர். செங்கோடன் துரைசாமி மற்றும் திருச்செங்கோடு கே. கே. கணேசன் மற்றும் ராபின் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘இபிகோ 302’ இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில், நடிகை கஸ்தூரி சங்கர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியானது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து வெற்றி பெற்றிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சலங்கை துரை பேசுகையில்,'' எங்கள் நிறுவனம் சார்பில் தயாரான ‘இபிகோ 302’ திரைப்படம் டிசம்பர் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்டின் இறுதி நாளான அன்று 16 படங்கள் வெளியானது. அதில் ஒரு சில படங்கள்தான் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் மக்களின் ஆதரவுடன் ‘இபிகோ 302’ பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு படத்தின் மையக்கருத்து, கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். இது அனைத்தும் ‘இபிகோ 302’ படத்தில் இருப்பதால் மக்கள் பாராட்டுகிறார்கள்.
இன்றைய சூழலில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைவிட, முதல் வெற்றி என்பது அப்படத்தை திரைக்கு கொண்டு வருவது தான். இத்தனை திரைப்படங்களின் போட்டிகளுக்கு மத்தியிலும், கொரோனாவின் தாக்கத்தை கடந்து திரையரங்குகளுக்கு வந்திருப்பதே பெரிய வெற்றி.
முன்னணி நடிகர்களுக்கு தான் திரையரங்க வெளியீட்டில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். வளரும் நடிகர்களுக்கோ அல்லது சின்ன பட்ஜெட் படங்களுக்கோ திரையரங்கம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் விரைவில் வெளியாகிறது என்று சொல்லி, சிறிய பட்ஜெட் படத்தை எல்லாம் தள்ளி வைத்துவிடுகிறார்கள். B & C எனப்படும் சிறிய ஊர்களில் உள்ள திரையரங்குகளில் தான் நம் படம் வெளியாகும் வகையில் தான் திரையரங்குகளை ஒதுக்கீடு செய்கிறார்கள். இதனால் விரும்பிய திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது பெரிய சிரமமாக உள்ளது.
வருடத்தின் கடைசி நாளான 31ம் தேதி வெளியீடு என்றால், 30 ஆம் தேதி இரவு வரை தியேட்டரை உறுதி செய்ய மாட்டார்கள். அதனை உறுதி செய்து, அடுத்த நாள் படம் வெளியாகுமா? ஆகாதா? என்கிற அளவிற்கு பிரச்சனை இருக்கிறது.
நாளை படம் வெளியாகும் என்று நம்பி, மக்களை கவர்வதற்காக பிளக்ஸ் பேனர் அடித்து, போஸ்டர் ஒட்டி, பிறகு தியேட்டர்களில் சொல்லி உறுதிப்படுத்திய பிறகு,
ஒரு தயாரிப்பாளராக படம் வெளியாகது என்பதற்கு, கோடி கணக்கில் முதலீடு செய்து படதை தயாரித்து முடிப்பதைவிட,திடீரென்று ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ.. அல்லது ஐயாயிரம் பத்தாயிரமோ கட்ட முடியாததால் படம் வெளியாகாமல் நின்று விடுமோ..! என்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் சிலர் செய்கின்றார்கள்.
இதை தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என இந்த தருணத்தில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது தெரியாததால், படத்தை வெளியிடும் போது, ஒரு விநியோகஸ்தரின் உதவியையும், வழிகாட்டலையும் நம்பவேண்டியதிருக்கிறது. அவர்கள் போஸ்டர் மற்றும் விளம்பரத்திற்காக கேட்கும் தொகையை தயார் செய்து வைக்கிறோம். அதற்கு மேல் 5000 ரூபாய் கூட நம்மிடம் இல்லாமல் போய்விடும். அதையும் மீறி இந்த படம் வெற்றி அடைந்திருக்கிறது. இது இரண்டாவது பெரிய வெற்றி.
படத்தின் கன்டென்டட்டில் முதல் வெற்றி
திரைக்கு வந்தது ஒரு வெற்றி
அப்புறம் இவ்வளவு தடைகளையும் மீறி வெற்றி பெறுவது மூன்றாவது வெற்றி.
இப்படி பல வெற்றிகளுக்கு காரணம், திரைக்கு வந்து நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுப்பது மட்டுமல்ல விளம்பர கட்டுப்பாடுகள்.
எல்லாரும் தினசரி பேப்பரில் படத்தின் விளம்பரம் வரவேண்டும் என்று நினைக்கின்றோம் . நம் படம் வெளியாகும் என்று தமிழ்நாடு முழுவதும் சொல்லி வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த படத்தின் விளம்பரம் பேப்பரில் வரவில்லை என்றால், தியேட்டரில் வெளியாகவில்லையோ என நினைத்து, மக்கள் திரையரங்கிற்கு செல்வதில்லை.அதன் பிறகு படக்குழுவினர் சொல்லித்தான் போறாங்க. அப்புறம் யூடியூப் மற்றும் சோசியல் மீடியாவில் பார்த்துட்டு, இளையத்தலைமுறையினர் எல்லாம் வந்துடுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் இதில் உண்மை இல்லை. பத்திரிகை விளம்பரம், போஸ்டர்ஸ்.. இதைப் பார்த்து தான் மக்கள் திரையரங்குகிற்கு வருகைத்தருகிறார்கள். இதை தான் முறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,
அதுமட்டுமில்லாமல் படம் வெளியாகியிருக்கும் சமயத்தில்,ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வரும் போது, எந்த காட்சி எத்தனை மணி என்ற விவரங்களை இணையத்தளம் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டிய சூழல் இருக்கிறது. இதை மாற்றி, எந்த காட்சி, எந்த படம் எத்தனை மணி என்பதை வெளியில் அனைவரின் கண்களில் படும்படி காட்சிப்படுத்தவேண்டும். இப்படி இருந்தால் படத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை.
‘இபிகோ302’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியிலேயே அடுத்த படத்தை வெளியிட தயாராகிவிட்டோம். "கடத்தல் "என்ற அந்த படத்தில் M R தாமோதர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நிழல்கள் ரவி, சிங்கம்புலி, சுதா விதிஷா, ரியா, அம்மாவாக சுதா, கலக்கல் காமெடிக்கு சிங்கம் புலி, மற்றும் பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம்,
நிழல்கள் ரவி க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி,மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன்
என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள். அருமையான திரைக்கதை. காமெடி ,ஆக்சன் கலந்த கமர்சியல் படம். இந்த படத்திற்கு கொடுத்த ஆதரவை "கடத்தல்" படத்துக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வெளியிடுவதற்கு எங்கள் நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது.'' என்றார்.
ஒளிப்பதிவு - MV. பன்னீர்செல்வம்&ராஜ்செல்வா
இசை - தனசீலன்
பாடல்கள் - பாவலர் எழில் வாணன்,இலக்கியன்,
சக்தி பெருமாள்
எடிட்டிங் - AL. ரமேஷ்
சண்டை பயிற்சி - சந்துரு
நடனம் - ரோஷன் ரமணா
தயாரிப்பு மேற்பார்வை - மல்லியம்பட்டி மாதவன்
மக்கள் தொடர்பு - மணவை புவன்
நிழற்படம் - தஞ்சை ரமேஷ்
டிஸைன்ஸ் - விக்னேஷ் செல்வன்