Friday, January 7, 2022

மட்டி 'திரைப்படம் அமேசன் பிரைமில் ! வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது


 அண்மையில் வெளியான 'மட்டி  'திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


ஊடகங்கள் நேர்நிலை விமர்சனங்கள்  வெளியிட்டு வியப்பு தெரிவித்திருந்தன.புதிய படக் குழுவாக இருந்தாலும் அவர்களது பெரிய முயற்சியைப் பாராட்டி எழுதி இருந்தன.

மண் சாலை கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான அந்த மட்டி தங்கள் சினிமா பாதையில் ஒரு ஆரம்பப் புள்ளி தான் என்கிறார் படத்தின் இயக்குநர் பிரகபல்.

அவர் மேலும் பேசும்போது,

"மட்டி திரைப்படம் எந்த நட்சத்திர பலமும் இல்லாமல் உழைப்பின் பலத்தை மட்டும் நம்பி உருவாகியிருந்தது.அதை உருவாக்கும் போது பல வரையறைகள் இருந்தன. பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தன. அதற்கு உட்பட்டுத் தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது.அதற்கு அஜித் சார் போன்று ரேஸி ஆர்வமும்  ஈடுபாடும் உள்ள ஒரு நடிகர் கிடைத்திருந்தால் அதன் உயரம் மேலும் பலநிலைகள் கூடியிருக்கும். மட்டியின் இரண்டாம் பாகத்தை அஜித் சார் போன்ற  பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து 10 மொழிகளில் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். மட்டி எங்களுக்கு ஒரு ஆரம்பம்தான். இதைவிட பிரமாண்டமாக,  அழுத்தமுள்ள கதையில், ஆர்ப்பாட்டமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்பட முயற்சியாக 'மட்டி 'இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதன் கதையும் காட்சியமைப்புகளும் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகும் அளவிற்கு அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில்  இருக்கும். இந்தியாவில் உருவாகும் ஹாலிவுட் படம் போல் அதை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழில் அஜித் சார்  போல் பல மொழிகளிலுள்ள நட்த்திரங்களைச் சந்தித்து பேசும் திட்டத்தில் இருக்கிறோம்"

என்றவர் 'மட்டி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில்     இந்தியாவில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
உலகின் 90 நாடுகளில்  இந்தப் படம் வெளியாக உள்ளது ' என்கிற தகவலையும் கூறினார். அமேசான் பிரைமில் பார்க்க 

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில்,  ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளி...