Friday, April 1, 2022

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்*

*ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்*

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து செல்பி திரைப்படத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை வர்ஷா பொல்லம்மா, இயக்குனர் மதிமாறன், நடிகர் டி ஜி குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் டி.சபரீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். 

படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Dragon - திரைப்பட விமர்சனம்

"டிராகன்" என்பது மனித இயல்பை ஆழமாகவும் நேர்மையாகவும் ஆராயும் ஒரு ஈர்க்கக்கூடிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் படம். இயக்குனர் அஸ்வத்...