Wednesday, May 4, 2022

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தேர்வு

 



தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின்  தலைவர் மற்றும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும்  ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில் குமார்  தெரிவித்தார்.

 இந்திய பள்ளிகள்  கிரிக்கெட் கூட்டமைப்பின் குழு உறுப்பினர்களால் தமிழகத்தைச் சார்ந்த ஜான் அமலன்  தென்னிந்தியக் பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அது மட்டுமல்லாமல் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

 தொடர்ந்து அவர் பேசுகையில் இது அவரது ஆற்றலுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால்,தமிழ்நாடு மாநிலத்திற்கே  பெருமை சேர்க்கும் விஷயமாகும். 

 இந்த கௌரவத்திற்கான பாதை  என்பது எளிதானது அல்ல.  G.ஜான் அமலன் அவர்களின் திறமை, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிற உயர் செல்வாக்கு மிக்கவர்கள் உட்பட பலரின் போட்டியாளர்களை விட  அதிக திறமை வாய்ந்தவராக உள்ளார். இவரது தேர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களிடையே பெரும் பாராட்டுக்களையும், வரவேற்பை பெற்றுள்ளது.

 தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும்  இந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் G.ஜான் அமலன் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பிரபல அரசியல்வாதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

 

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...