Friday, July 22, 2022

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது 

கோலிவுட் முதல் பாலிவுட் வரை  பல முன்னணி   பல படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. 

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம்  நடன இயக்குநராக திரைத்துறையில்  அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது. 

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர். அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு!!*

*சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு...