Friday, September 30, 2022

தி சான்ட்மேன்: ஆக்ட் III ' எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

*'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்*

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான 'தி சான்ட்மேன்: ஆக்ட்'எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்.

கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்'  எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன் ( World End Inn) ல் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.

இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தயாரிப்பாளர்கள் இந்த தொடரை வெவ்வேறு தளங்களில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள். '' என்றார்.

நடிகை ஸ்ருதிஹாசன் இதற்கு முன்னதாக 'ட்ரெட் ஸ்டோன்' மற்றும் 'ஃப்ரோசன் 2' ஆகிய ஹாலிவுட் தொலை காட்சி தொடர்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக தற்போது ஹாலிவுட்டில் தயாராகி இருக்கும் ஆடியோ நாடக படைப்பில் இணைந்திருக்கிறார். இவருடன் இந்த தொடரில் ஹாலிவுட் பிரபலங்களான ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ்,  மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தி சான்ட்மேன்: ஆக்ட்டின் இரண்டாம் பாகத்தின் இடைநிறுத்தம் செய்யப்பட்ட இடத்திலிருந்து, அதன் இணை நிர்வாக தயாரிப்பாளரான டிர்க் மாக்ஸால் மீண்டும் இந்த தி சான்ட்மேன்: ஆக்ட்டின் மூன்றாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இந்த தி சான்ட்மேன்: ஆக்ட் மூன்றாம் பாக ஆடியோ நாடகத்தின் பின்னால் நீல் கியாமன் ஒத்துழைப்பு அளித்ததுடன், இதன் இணை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றிருக்கிறார்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'சலார்' படத்தில் பிரபாசுடனும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'என் பி கே 107' எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal*

*FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal* FICCI FLO Chennai, the women’s wing of the Feder...