Wednesday, December 7, 2022

சதுரங்க விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற GM R. பிரக்ஞானந்தாவிற்குப் பாராட்டி பரிசளிக்கும் விழா!


 சதுரங்க விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற GM             R. பிரக்ஞானந்தாவிற்குப் பாராட்டி பரிசளிக்கும் விழா!


டிசம்பர் 7, 2022 அன்று முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றதற்காக செஸ் இளவரசர் ஜி.எம்ஆர். பிரக்ஞானந்தாவை வாழ்த்துவதற்காகபிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சமீபத்தில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் வழங்கும் - 2022 விழாவில்ஜனாதிபதி. திரௌபதி முர்முவிடமிருந்து நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதைப் பெற்றமைக்காக நடைபெற்றது.


விழாவிற்குப்  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர்

மாண்புமிகு . சிவமெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். மேலும் இவர் சதுரங்கப் போட்டியின் அடையாளமாகத் திகழும்

வீரருக்குப் பள்ளியின் மூலம்

வழங்கப்படும் ரூபாய் 7 இலட்சம் பரிசுத்தொகையினையும்

பொற்கரங்களால் வழங்கி பாராட்டி பெருமைப்படுத்தினார்.

 சர்வதேச அளவில் அளப்பரிய சாதனை படைத்த மாணவனைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் - சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் 'தினசரி'

CYNTHIA PRODUCTION  தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க  ஸ்ரீகாந்த் -  சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம்...