Tuesday, January 31, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது*

*அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது*

லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும்  புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் ,
கீர்த்திபாண்டியன்,
திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளர் தமிழழகன்  ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா  இசையமைக்கிறார்

இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது.

அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

லெமன் லீப் கிரியேசன்ஸ் பொரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி.
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

இயக்கம் - ஜெய்குமார்.

திரைக்கதை & வசனம்- தமிழ் பிரபா & ஜெய்குமார்
இசை- கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு- தமிழழகன்
கலை-  ரகு
எடிட்டிங்-  செல்வா ஆர்.கே
ஆடைகள் - ஏகாம்பரம்
ஸ்டில்ஸ்-  ராஜா

Sunday, January 29, 2023

ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்*

*ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்*

“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு*


இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

வரும் பிப்ரவரி-3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகன் யோகிபாபு பேசும்போது, :
இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.
இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்த படத்திற்காக இயக்குனர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.
சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.. நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.

இயக்குனர் ஷான் பேசும்போது,
 “இந்த படத்தின் கதையை எழுதியவுடன் நிறைய பேரிடம் சொல்லவில்லை. ஆனால் அப்படி கேட்டவர்கள் பலரும் இந்த கதையை தயாரிக்க வேண்டும் என்றால் நீலம் புரொடக்சன்ஸ் மட்டுமே சரியான இடமாக இருக்கும் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தான் இயக்குனர் பா.ரஞ்சித் தனது உதவி இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில் பரியேறும் பெருமாள் என்கிற திரைப்படத்தை தயாரித்து வந்தார்.
அப்போதிருந்து அவரை சந்திக்க முயற்சித்து பல வருட காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக அவரிடம் எனது கதையை கொண்டு சேர்த்தேன். கதையைப் படித்தவர் முதலில் எனது உதவி இயக்குனர்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். அதனால் வேறு தயாரிப்பாளர்களிடமும் கூட இதை கூறுமாறு என்னிடம் சொன்னார். தேவைப்பட்டால் என்னுடைய உதவி இயக்குனர் என்று கூட நீ சொல்லிக்கொள் என அனுமதியும் அளித்தார்.
அதைக்கேட்டு எனக்கு அவரிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்கள் மீது பொறாமையாக இருந்தது. இவரிடமே உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கலாமோ என்று கூட நினைத்தேன். அவரிடம் அப்போதைக்கு சரி என்று சொன்னாலும் இந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தான் இந்தக்கதையை பண்ண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒருவழியாக என்னுடையை கதையை தயாரிக்க முன் வந்தார் இயக்குனர் பா. ரஞ்சித்.
இந்த படத்தில் நடிப்பதற்காக யாரை அணுகலாம் என நினைத்தபோது, பரியேறும் பெருமாள் படத்தில் யோகிபாபுவின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்யலாம் என பா.ரஞ்சித்திடம் கூறினேன். யோகிபாபுவை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை அவர் என்னிடமே ஒப்படைத்து விட்டார். அந்த சமயத்தில் தென்காசியில் கர்ணன் படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவை நேரில் சந்தித்து இந்த கதையை கூற முயற்சித்தேன். யோகிபாபுவிடம் நான் கதை சொல்ளவேண்டும் என உதவி செய்யும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ், அவருக்காக காட்சிகளை படமாக்காமல் தள்ளிவைத்து யோகிபாபுவின் பொன்னான 3 மணி நேரத்தை எனக்காக ஒதுக்கி தந்தார்.
அதேசமயம் இந்த கதையை யோகிபாபுவிடம் கூறும்போது நீங்கள் தான் கதையின் நாயகன் என சொன்னதும் முதலில் அவர் தயங்கினார்.. என்னுடைய நல்ல நேரமோ என்னவோ அவரது உதவியாளர், இவர் வைத்திருப்பது சீரியசான கதை என்று சொன்னதுமே ஆர்வமாகி உடனே கதை கேட்டு நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க நாங்கள் சரியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருந்த ஸ்ரீமதி எங்கள் கண்களில் பட்டார். அவரது தந்தையிடம் சென்று படத்தில் நடிக்க அனுமதி கேட்டோம். முதலில் மறுத்தவர் பின்னர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது மகளை நடிக்க சம்மதித்தார்.
சென்சாரில் இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த கதையை சரியாக கையாண்டு உள்ளீர்கள் என பாராட்டினார்கள். ஒரு தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தை பொருத்தவரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான விஷயங்கள் படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அப்படி இருந்தால் சென்சாருக்கு முன்பாக அவரே அதையெல்லாம் நீக்கிவிடுவார்.
படம் முடிந்துவிட்டாலும் படத்தை பார்க்காமலேயே அதன்மீது யோகிபாபு வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவர் இந்த நிகழ்வில் தனது பிஸியான நேரத்தையும் ஒதுக்கி கலந்து கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பதற்கான காரணம்..
இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்வார் என நான் சொன்னபோது முதலில் பா.ரஞ்சித் தயங்கினார். ஆனால் நிலைமை மாறி அதிசயராஜுக்கு இனி வாய்ப்புகள் இருந்தால் நானே சொல்லி விடுகிறேன் என பா.ரஞ்சித்தே கூறும் அளவிற்கு அற்புதமான ஒளிப்பதிவை இந்த படத்தில் கொடுத்துள்ளார் அதிசயராஜ்.” என்றார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித் பேசும்போது,
“இந்த படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குனர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேசமாட்டேன், அவர் இந்த கதை பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன். பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார்.
இந்த கதையை படிக்க சொன்னபோது பலரும் இந்த படம் குறித்து நெகட்டிவ் ஆகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டேன். இந்த படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை கூறினாலும் அதை கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கும்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது..
இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான். அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது. அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது” என்று கூறினார்.

ராபர்ட் மாஸ்டரிடம் ஹீரோக்கள் உஷாராக இருக்கவேண்டும்” ; ஸ்ட்ரைக்கர் விழாவில் இயக்குனர் பேரரசு கலகல பேச்சு

ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. எஸ்.ஏ பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பாடல்களுக்கான இசையை விஜய் சித்தார்த்தும் பின்னணி இசையை விடி பாரதி மற்றும் விடி மோனிஷ் ஆகியோரும் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை மனீஷ் மூர்த்தி கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ் கார்த்திக், விஜய் டிவி புகழ் நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குனர் எஸ்.ஏ பிரபு பேசும்போது, “இந்த படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை பிடித்து போனதால் படத்தின் கதாநாயகன் ஜஸ்டின் தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடினார். யூடியூப்பில் பார்த்த அஸ்வின் என்கிற குறும்படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசையால் ஈர்க்கப்பட்டு அவரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்தோம். என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நண்பராக தொடர்ந்து வரும் ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். பெரிய பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யலாமே என முதலில் தயாரிப்பாளர் தயங்கினாலும் ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலை பார்த்துவிட்டு அனைத்து பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் எனக்கு நீண்ட நாட்களாக நெருங்கிய பழக்கம் உள்ளவர் என்பதால் இந்த கதை குறித்து அவ்வப்போது அவரிடம் விவாதித்து அவரது ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால், டோரா பட இயக்குனர் தாஸ் தான் அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலை எனக்காக கொடுத்தார்: என்று கூறினார்.

பாடலாசிரியர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசும்போது, “கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசந்த கால நதியினிலே பாடல் போல, இந்த படத்தில் ஒரு பாடலை அந்தாதியில் எழுதியுள்ளேன். இதற்கு முன்னதாக பாசமலர், பொன்னூஞ்சல், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் எழுதியுள்ளேன். நீ வருவாய் என தொடரின் டைட்டில் பாடலை எழுதியது நான் தான். ஆனால் எதிலுமே என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இந்த படத்தில் தான் முதல் முறையாக எனக்கு பாடலாசிரியர் என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை எனது வாய்ப்புக்கான மேடையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்: என்று கூறினார்.

படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய் பேசும்போது, “என்னுடைய பயணத்தை ஒரு விஜே ஆகத்தான் ஆரம்பித்தேன். காஞ்சனா, மெட்ராஸ் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர் தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்திடம் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அவரை பாராட்டினாலும் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல மனிதர். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர்களில் விடி மோனிஷ் இந்த நேரத்தில் எங்களுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “படத்தின் நாயகன் ஜஸ்டினும் நானும் நீண்ட நாள் நண்பர்கள். ஆனால் என்னை இந்த படத்தில் நடிக்க அவர் கூப்பிடவே இல்லை.. இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லரை பார்க்கும்போது ஜஸ்டின் நிச்சயமாக முன்னணி ஹீரோவாக உயர்வார் என தெரிகிறது” என்று கூறினார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “பிரபலமான கதாநாயகர்கள் எல்லாம் பத்து படங்கள் நடித்து ஒரு இடத்தை பிடித்த பிறகுதான் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல அனுப்பி வைப்பார்கள். ஆனால் தனது முதல் படத்திலேயே ஒரு இயக்குனரை தயாரிப்பாளரிடம் கதை சொல்ல அனுப்பிய நடிகர் ஜஸ்டின் நிச்சயமாக ஒரு முன்னணி ஹீரோவாக வருவார். ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய ஹரிசங்கருக்கு வாழ்த்துக்கள். நானும் பாடல் எழுதிய புதிதில் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பல பேர் கேட்டார்கள். ஆனால் அடிப்படையில் நான் கவிஞன்.. அப்புறம் தான் கதாசிரியர்..

அதேபோல எம்எஸ்வி, இளையராஜா இவர்களுடைய காலகட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான பாடலாசிரியர்கள், பாடகர்கள் மட்டுமே இருந்து வந்தார்கள். ஏ.ஆர் ரகுமான் வந்தபிறகு அந்த நிலை மாறி இன்று பல படங்களில் புதுவிதமான பாடலாசிரியர்களும் பாடகர்களும் இடம் பெற்று வருகிறார்கள். இதுதான் ஆரோக்கியமான விஷயம்.  இந்த படத்தில் ஒரு பாடலில் ராபர்ட் மாஸ்டரின் நடிப்பை பார்த்தபோது இவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது.

கலைஞர் கருணாநிதி காலத்தில் தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின. அஜித்தின் காட்பாதர் படம் கூட வரலாறு என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில் தான் டைட்டில் வைக்கிறார்கள்.. நான் கூட இந்தப் படத்தின் ஸ்ட்ரைக்கர் என்கிற டைட்டிலை பார்த்ததுமே போராளி என்கிற படமாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். அதனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழகம் தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது.. அதை வாழ வைக்க வேண்டும்.

அதேபோல இன்று பலரும் இளைஞர்களுக்கு பிடிக்கும் படம் என்று சொல்லி படம் எடுக்க வருகிறார்கள்.. அந்த படங்கள் எல்லாம் ஒரு உயரத்திற்கு மேலே போகாது.. குடும்பத்தினர், குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும். பிரபு என்கிற பெயர் கொண்ட நபர்கள் தமிழ் சினிமாவில் எப்போதுமே வெற்றியாளர்களாகவே வலம் வருகிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் எஸ்ஏ பிரபுவும் அப்படி ஒரு வெற்றி இயக்குனராக உருவெடுப்பார்” என்று வாழ்த்தினார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “அங்கீகாரத்திற்கு ஏங்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்துள்ளது நல்ல விஷயம். இந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஏ பிரபு, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயத்தில் அவரிடம் ஒரு படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும் பொறுப்பையே நம்பி ஒப்படைத்தார்கள்.. அந்த அளவுக்கு திறமையான நபர். பொதுவாக ஹீரோவுக்கு கதை பிடித்து போனபின் அதன் பிறகு அதில் மாற்றம் செய்தால் அது சரியாக இருக்காது. ஆனாலும் இயக்குனர் பிரபு என்னிடம் இந்த கதை பற்றி இறுதி நேரத்தில் சொன்னபோது அதில் முக்கியமான ஒரு சில ஆலோசனைகளை கூறினேன். ஆனாலும் தயங்காமல் அதை ஏற்றுக்கொண்டு சில மாற்றங்களை செய்து படமாக்கி உள்ளார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் மூன்று வித ஜானர்களில் வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ளார். நிச்சயம் மிகப்பெரிய இசையமைப்பாளராக அவர் வருவார்” என்று கூறினார்.

நடிகர் ஆர்.எஸ் கார்த்திக் பேசும்போது, “இங்கே புதியவர்களை சப்போர்ட் பண்ண ஆட்கள் இல்லை.. 15 இயக்குனர்கள் 15 நடிகர்கள் என தமிழ் சினிமா தேங்கி நிற்கிறது. தென்னந்தோப்பு, மாந்தோப்பு வைத்திருப்பவர்கள் அதை மட்டுமே நம்பியிராமல் இடையில் ஊடு பயிர் சாகுபடி செய்வார்கள்.. அதுபோல புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது, “என்னுடைய சித்தப்பா இதுவரைக்கும் என்னை எந்த விழாவிற்கும் அழைத்ததில்லை.. அப்படி அவர் அழைத்து தான் நான் இந்த விழாவுக்கு வந்தேன். ஆனால் இந்த நிகழ்வை பார்க்கும்போது எனக்கு வெண்ணிலா கபடி குழு படத்தின் விழா போல தோன்றுகிறது. அந்த அளவிற்கு புதியவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் தயாரிப்பாளர் ஹென்றி டேவிட் பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பிடித்தது. நிச்சயமாக அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இது உருவாகியுள்ளது. புதியவரான ஹரிசங்கர் பாடல்கள் எழுதுகிறார் என இயக்குனர் கூறியபோது நம்பிக்கை இல்லாமல் முதலில் தயங்கினேன். ஆனால் முதல் பாடலை பார்த்ததுமே அவர் மீது நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களாக கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழலில் படத்தின் நாயகி வித்யா பிரதீப், சிறப்பு அழைப்பாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் வீடியோ மூலமாக படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலகுரலில் பேசக்கூடிய விஜய் டிவி புகழ் நவீன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோரின் குரலில் படக்குழுவினரை வாழ்த்தியதை விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ரசித்து வரவேற்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; ஹென்றி டேவிட், ஜஸ்டின் விஜய்.R  

இயக்கம் ; S.A.பிரபு

ஒளிப்பதிவு ; மனீஷ் மூர்த்தி

இசை (பாடல்கள்) ; விஜய் சித்தார்த்

இசை (பின்னணி) ; விடி பாரதி மற்றும் விடி மோனிஷ்

படத்தொகுப்பு ; நாகூரான் ராமச்சந்திரன்

பாடல்கள் ; ஹரிசங்கர் ரவீந்திரன்

ஆடை வடிவமைப்பு ; அகிலன் ராம்

கலை ; ஆனந்த் மணி

நிர்வாக தயாரிப்பாளர் ; ராஜேஷ் கிருஷ்ணா

மக்கள் தொடர்பு ; ரியாஸ் K அஹமது

Friday, January 27, 2023

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா*

*தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா*

*தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில்  தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இதன் போது திருமதி சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார். 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,“ நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம்  இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார். 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் படைப்புத் திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்,“ எல் ஜி எம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் தருணத்தில், படக்குழுவினருடன் உடனிருப்பதில் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி நல்லதொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றிய மாயஜால வித்தையை நேரடியாக கண்டதால், படத்தைக் காண பேரவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்த ஒய் ஜி மகேந்திரா இயக்கி நடிக்கும் 'சாருகேசி' திரைப்படம்


 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்த ஒய் ஜி மகேந்திரா இயக்கி நடிக்கும் 'சாருகேசி' திரைப்படம்


என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி 


ரஜினிகாந்த் தான் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்: ஒய் ஜி மகேந்திரா


நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார். 


அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில், "1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேன். இது எல்லாமே காலத்தின் செயல். நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யுஏஏ நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இது மிகவும் கட்டுக்கோப்பான குழுவாகும். இதில் படித்தவர்கள், பல துறை வல்லுநர்கள் இருந்தனர்," என்றார். 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்து இருந்தால் இந்த நாடகம் இன்னொரு வியட்நாம் வீடாக இருந்து இருக்கும், என்று அவர் மேலும் கூறினார்.  


"இந்த ட்ராமாவை பொருத்தவரை கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், அவர்களது குணத்திற்கு உண்டான வசனங்களை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒய் ஜி மகேந்திரா போன்ற ஒரு நடிகரை சினிமா சரியாக பயன்படுத்தவில்லை," என்று ரஜினிகாந்த் கூறினார். 


இந்த நாடகம் படமாக எடுக்கப்படும்போது மிகப்பெரிய வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வசந்த் திரைக்கதை எழுதவுள்ளார், அது இன்னும் சிறப்பானதாக இருக்கும், என்று அவர் தெரிவித்தார்.  


"என் திருமணம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் ஒய் ஜி மகேந்திரா தான். மது, அசைவ உணவு பழக்கம் போன்றவை ஒருகாலத்தில் என்னோடு ஒட்டி இருந்தன. வெஜிடேரியன்ஸை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும். என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா தான்," என்று சூப்பர் ஸ்டார் கூறினார். புகை, மது போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டு விடுமாறு அனைவரையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்

 


ஒய் ஜி மகேந்திரா பேசுகையில், "ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரே நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரே கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியும்," என்று கூறினார்.  


சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும். இந்த நாடகத்தை ஒய் ஜி மகேந்திரா இயக்கியுள்ளார். 


அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது. இந்த நாடகத்தை திரைப்படமாக எஸ் ஏ ஆர் பி பிக்சர் ப்ரொடக்ஷன்ஸ் (ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி ப்ரொடக்ஷன்) தயாரிக்கவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த் எஸ் சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார். ஒய் ஜி மகேந்திரா முதன்மை வேடத்தில் நடித்து இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 


Thursday, January 26, 2023

Upcoming Actor Sreepathy joins hands with AutoPuli Film factory for his next film*

*Upcoming Actor Sreepathy joins hands with AutoPuli Film factory for his next film*

" En Iniya Thanimaiye" directed by Sagu Pandian, music directed by James Vasanth.

Sreepathy is an upcoming Tamil actor who is the protagonist lead in this film. Reesha is playing the female lead. 

Sreepathy is also playing Titular characters in Tamil films that are planned for release in 2023, PENDULUM directed by Satish Saran, music directed by Simon King alongside actress Asuran fame Ammu Abirami and Komal Sharma
and ANGAARAGAN directed by Mohan Dachu, music directed by KU Karthick alongside Sathyaraj sir and Malayalam actress Niya.

Director Sagu Pandian debuts himself as the director with the film "En Iniya Thanimaiye".
The film is expected to be a thriller with a heart heavy social message to the society. The shooting of the film is completed and is expected to release in summers of 2023. 
Siva Baskaran who has worked in the sets of Thangar Bachan’s films is the DOP of the film. 

James Vasanthan has scored 2 songs for the film. A fantastic love beat sung by Sita Ramam (Malayalam) "Oru Karayarike" fame Shibi Srinivasan and a heart melting mother sentiment song sung by Vaikom Vijayalakshmi. Audio rights of this film has been bagged by Trend Tamil Music. The first song is expected to release on Jan 26 2023 on Trend Tamil Music You tube channel .
 
Director: Sagu Pandian
Music Director: James Vasanthan
DOP: Siva Baskaran
Editor: Thiru Selvam
Choreographer: Vasu Navadeepan
Assistant Directors: Sathriyan Satyaraj ,Arul Nithyanandham, Sabareeshwaran K, Gurunath Sekar
PRO: A John
Project Designer: L Vivek (Primerose Entertainment)
Producer: S. P.MALATHI
Executive Producer: Auto Puli Murugan

YRF’s Pathaan obliterates all records by collecting 55 crore nett in India, mints biggest ever Day 1 for a Hindi film


YRF’s Pathaan obliterates all records by collecting 55 crore nett in India, mints biggest ever Day 1 for a Hindi film and that too on a non-Holiday! 

YRF’s Pathaan has wiped out all previous records as it collected 55 crore nett in india and recorded the biggest ever Day 1 for a Hindi film. The total collections of Pathaan on Day One is 57 crore nett (Hindi - 55 crore and dubbed versions 2 crore).

Pathaan has set 10 new records with its incredible Day One figure at the box office! Here are the list of achievements & records: 

1. Widest Hindi Release of All Time In India.

2. Highest Grossing 1st Day For A Hindi Film.

3. Highest Grossing  First Day For A Non Holiday Release.

4. 3rd YRF Film To Cross ₹ 50 Cr+ Net Box Office Collections On The 1st Day after WAR [₹ 53.35 Cr] and THUGS OF HINDOSTAN [₹ 52.25 Cr].

5. 3rd YRF SPY UNIVERSE FILM To Set An Opening Day Record After “EK THA TIGER” & “WAR”

6. Highest Grossing First Day for Shah Rukh Khan.

7. Highest Grossing First Day for Deepika Padukone.

8. Highest Grossing First Day for John Abraham.

9. Highest Grossing First Day for Yash Raj Films.

10. Highest Grossing First Day for Siddharth Anand.

Akshaye Widhani, CEO of Yash Raj Films, says, “It is a historic day for Indian cinema and we are humbled to see the love and appreciation that is flowing for Pathaan globally. For Pathaan to shatter records in this fashion on a non holiday, just proves that the theatrical business is here to stay, provided we make films that entice people to come to the cinemas to witness a never seen before experience that entertains them thoroughly.“

He adds, “We, at YRF, are thrilled with the start that the film has got across India and we are hopeful that Pathaan brings joy to cine-goers globally in the days to come! Pathaan is the fourth film of our YRF Spy Universe and we are thrilled that we have been able to elevate the cinematic experience of audiences with each film from this franchise. We humbly share this moment with all the stake-holders of the film who have given their blood, sweat and tears to give people a movie-going experience like never before.”

Pathaan has become a must watch theatrical entertainer which is being celebrated across the nation. Pathaan, is part of Aditya Chopra’s ambitious spy universe and has the biggest superstars of the country Shah Rukh Khan, Deepika Padukone and John Abraham in it. The film has been directed by Siddharth Anand.

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!*

*உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!*

*#உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.#*

#500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாயக் கூட்டமைப்பிடம் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை கேட்டால், அவர்கள் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். 

#ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும்..

#எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது..

சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் - நடிகர் கார்த்தி

சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி.

இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவனை பின்பற்றுபவர்களுக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன் அறக்கட்டளை தொடங்கிய புதிதில் விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் செய்யலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் என்னை நிறைய விழாக்களுக்கு அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த போது, விவசாயம் சார்ந்த பெர்னான்ட்ஷா மற்றும் ஆண்டனி தாஸ் இவர்கள் 30, 40 வருடங்களாக விவசாயம் செய்கின்றவர்களை அழைத்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வரும்போது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவர்கள் தானே நம்முடைய நாயகர்கள்? இவர்களை ஏன் நாம் அடையாளப்படுத்தவில்லை? இவர்கள் ஏன் சமூகத்திற்கு தெரியவில்லை? எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது.

உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பரிசுக்காகவும், நாம் அழைத்து பாராட்டுவதற்கும் செய்யவில்லை. இது அத்தியாவசியம், சமூகத்திற்கு முக்கியம், நம் எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று தங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள் கணக்கிடமுடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா? என்று தெரியாது. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.

இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தால், ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று கூறுவது போல ஒரு குறிப்பிட்ட விதையை இழந்துவிட்டால் அதை திரும்ப உருவாக்க முடியாது. அப்படிப்பட்ட விதையை 19 வயதில் இருந்து ஒருவர் பாதுகாத்து வருகிறார். இந்த வயதில் வெளிநாடு சென்றோமா, சம்பாதித்து வீடு வாங்கினோமா என்று இல்லாமல், தன் வாழ்க்கை மொத்தமும் சமூகத்திற்காக செலவழிக்கிறார். ஆனால், அந்த சமூகம் நன்றாக இருக்கிறது என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. யாரோ ஒருவர் பெட்ரோல் போட்டு அனுப்பி வைப்பார்கள் என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. சுற்றிலும் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள், இதை அகரத்திலும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். டிரெண்டிங்கான விஷயங்களை அனைவரும் எடுத்து செய்யும்போது, தினேஷ் உலர்ந்து போன விஷயமான விவசாயத்தை எடுத்து செய்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிறைய பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. பெண்கள் விவசாயத்தில் எதுவும் செய்யமுடியாது. பின்தங்கிதான் இருப்பார்கள் என்று இருக்கும் நிலையில், பெண்கள் கூட்டம் சாதித்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அதிலும் வறண்ட ஒரு பூமியை கடன் வாங்கி குத்தகைக்கு எடுத்து, கிணறு வெட்டி, விவசாயம் செய்து சாதித்த பின், அந்த ஊரே அவர்களை அண்ணார்ந்து பார்க்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. மிகப் பெரிய சாதனை. அவர்களை ஊக்குவிப்பதற்காகத்தான் இங்கு அழைத்து வந்து பாராட்டினோம். இவர்களைப் போல் உள்ள பலரையும் இந்த பாராட்டு ஊக்குவிக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். 
சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இந்த விழாவை நடத்தி வருகிறோம்.

எங்களை எப்படி தேடிப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. இன்று லண்டன் மற்றும் துபாயில் கடை போட்டிருக்கிறேன் என்று கோத்தகிரியில் இருந்து வந்தவர் கூறினார். விவசாயம் செய்ததால் ஊரில் எனக்கு மரியாதை இருக்காது. ஆனால், இன்று என்னிடம் ஆட்டோகிராப் வாங்கும் அளவிற்கு நட்சத்திரமாகி இருக்கிறேன். எங்கு சென்றாலும் கைத்தட்டல்கள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டிய விழா என்பது புரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? இதற்கு முன்பு சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று குழந்தைகளைக் கேட்டால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வருகிறது என்பார்கள். ஆனால், இன்று ஸ்விகி, சொமேட்டோவில் ஆர்டர் செய்தால் வரும் என்கிறார்கள். ஒரு காரை எப்படி தயாரிக்கிறார்கள், ஐஸ்கிரீம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்கிறோம். ஆனால், உணவை எப்படி தயாரிக்கிறார்கள்? என்று சொல்லிக் கொடுக்கிறோமா? பள்ளிகளில் அதற்கான பார்வையிடல் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்கிறேன். நான் உமையாளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் விவசாய நிலத்தைச் சுற்றி காண்பித்தேன். பல பள்ளிகள் இன்று அழைத்துச் செல்கிறது. சில பள்ளிகளில் விவசாயத்திற்கென ஒரு வகுப்பை தனியாகவே ஒதுக்குகிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலா கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு காரை தயாரித்து பாகங்களை சேர்க்க 1 மணி நேரம் போதும். ஆனால், ஒரு நெல் விளைவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாது. உதாரணத்திற்கு தக்காளியை எடுத்துக் கொண்டால், நாற்று நடுவதற்கு 25 நாட்கள் ஆகும். அதுவரை நாற்றுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்று நட்ட பிறகு பூ பூர்த்து காய்க்கும் வரை தண்ணீர் சரியாக விட வேண்டும். பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை அதிகமாகவும் வரக் கூடாது, குறைவாகவும் வரக் கூடாது. இதையெல்லாம் தாண்டி தக்காளி சந்தைக்கு வருகிறது. இங்கு வெங்காயம், தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான். ஆனால், என்றோ ஒரு நாள் தக்காளி விலை ஏறிவிட்டால், அன்று அதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும். உடனே, பெங்களூருவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்துவிடுவார்கள். கிலோ ரூ.100/-க்கு இருந்த விலை ரூ.5/-க்கு வந்துவிடும். அப்போது விவசாயிக்கு எவ்வளவு ரூபாய் போகும் என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா? நான் யோசிக்கவில்லை என்று எண்ணும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. இதேதான் அத்தியாவசிய பொருளான பாலுக்கும் வருகிறது.

மாடு வாங்கி பால் கறப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 கிலோ தீவனம் ரூ.50/-. காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுக்க மாடுக்கு எத்தனை வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. இப்படி முழு நேர வேலைக்கு வருமானம் சொற்பமாகவே இருக்கிறது. அரசாங்கம் ஒரு லிட்டருக்கு ரூ.27/- என்று நிர்ணயித்திருக்கிறது. தண்ணீர் பாட்டில் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பால் விலையில் ரூ.2/- கூடினாலே கோபப்படுகிறோம். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் விவசாயிக்கு எவ்வளவு போகிறது என்று யோசியுங்கள் என்ற அந்து சார் கூறுவார். நாம் என்ன வினை புரிகிறோமோ? அதையே தான் அரசாங்கமும் செய்யும். இங்கு விலைவாசி ஏறும் போது எதற்காக ஏற்றப்படுகிறது? அந்த பணம் யாருக்குச் சென்றடைகிறது? பால் வாங்கும் இடத்தில் 2 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டிவந்தால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நமக்கு நல்ல பால் கிடைக்கும். நகர்புறங்களில் நல்ல பால் கிடைப்பதில்லை. கலப்படங்கள் சாதாரணமாக நடக்கின்றது. நல்ல பால் வேண்டுமென்றால் நாம் தான் தேடிச் சென்று வாங்க வேண்டும். இந்த சிறிய மாற்றம் எல்லோருக்குள்ளும் வர வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது நேரடியாக விவசாயியிடமிருந்து வாங்குவது தொடங்கிவிட்டது. 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாயக் கூட்டமைப்பிடம் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை கேட்டால், அவர்கள் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். நமக்கும் நஞ்சில்லாத உணவு கிடைக்கும்.
எங்கு சென்றாலும் நம்மாழ்வார் ஐயாவை பார்த்திருக்கிறோம், அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அவர் பெயரைத் தான் சொல்கிறார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நிச்சயமாக நமது கடமை. இப்போது உணவு உற்பத்தி 2 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுகிறார்கள். ஆடி மாதம் பெய்ய வேண்டிய மழை தள்ளிப் போகிறது. இத்தனை வருட காலமாக இந்த பருவத்தில் விதைத்தால் இந்த பருவத்தில் அறுவடை செய்யலாம் என்ற அறிவு இப்போது வீணாகப் போகிறது. அனைத்தும் காலமாற்றத்தினால் மாறிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், பாண்டிராஜ் சார் கூறியது போல, விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும். நாங்கள் படத்தில் கூறிய வசனம் போல, மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான். அவரவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது.
இந்த வருடத்தை சிறுதானியத்திற்கான முக்கிய வருடமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறுதானியம் ஏன் அவசியமாக இருக்கிறது? என்றால், அது மானாவாரி பயிர், அதற்கு தண்ணீர் காட்டத் தேவையில்லை, உரம் போட தேவையில்லை, ஹைபிரிட் கிடையாது. அழகாக கையில் கிடைத்துவிடும். இருந்தும் ஏன் பலர் இதை செய்யவில்லையென்றால், அதற்கான செயலாக்கத் திட்டம் சரியாக இல்லை. சிறு கிராமங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் சிறுதானியம் கிடைக்கிறது. ஆனால், அப்படி வருகின்ற சிறுதானியங்கள் அனைத்தும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக கம்பு முறுக்கு, ராகி பிஸ்கட் என்று போய் விடுகிறது. ஆனால், உணவாக உண்ணும்போது தான் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. கடைகளில் கிடைக்கக் கூடிய அனைத்தும் வெள்ளையாக பாலிஷ் செய்து வருகிறது. கம்பு, ராகி அனைத்தும் ஒரே நிறமாக இருக்கிறது. பாலிஷ் செய்தாலே அனைத்து சத்துகளும் போய்விடும். அரை வேக்காட்டில் சாப்பிடுவது மிக மிக அவசியம். அதற்காக செயலாக்கக் கூடம் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருக்கிறது.

விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை பாதுகாத்து வைக்கக் கூடிய இடத்தில் சேமித்து வைத்து, விலை ஏறும்போது விற்பதற்கு அரசாங்கம் செயலாக்கக் கூடத்தை வைத்திருக்கிறது. அதுபோல சிறுதானியத்திற்கும் செயலாக்கக் கூடத்தை அதிக எண்ணிக்கையில் நிறுவ வேண்டும். விவசாயிக்கு எளிய வகையில் தேக்கி வைக்க அங்காடிக்கு அருகிலேயே நிறுவ வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் குறைந்த விலையில் சிறுதானியம் கிடைக்கும். அரிசி கிலோ ரூ.60/-க்கு கிடைக்கிறது. ஆனால், சிறுதானியம் ரூ.90/- முதல் ரூ.130/- வரை விற்கிறது. அனைவரும் வாங்கி சாப்பிட முடியும்.

மேலும், விவசாயிகள் அவர்களின் விளைப் பொருட்களை அவர்களே கொண்டு சென்றுதான் சந்தையில் விற்க வேண்டும். அதுவும் 2 மணி நேரத்திற்குள் விற்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும், காட்டைப் பார்க்க வேண்டும், பிற வேலைகளைப் பார்க்க வேண்டும். அவருக்கு பையன் இருந்தால் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லையென்றால், எல்லாவற்றையும் செய்வதற்கு ஆட்கள் கிடையாது. உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.

இதுபோன்று, இன்னும் பல திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். இந்நிலையில், நீரும் நாமும் என்பது எனக்குப் பிடித்த விஷயம். இதை நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் இதை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். இத்திட்டத்திற்கு பல நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

அதேசமயம், அந்து சார் கூறியது போல சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற வருடமே முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாமதமாகி விட்டது. இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம். இதற்கு அண்ணா பல்கலைக் கழகமும் உடன் இருக்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய சந்தோஷம். ஏனென்றால், பொறியியலாளர்களால் தான் சுலபமாகவும், எளிமையாக உருவாக்க முடியும்.

இங்கு வந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

Wednesday, January 25, 2023

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஜோ' திரைப்படத்தின் டப்பிங் எளிய பூஜையுடன் தொடங்கியது*

*விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். D. அருளானந்து வழங்கும் S. ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஜோ' திரைப்படத்தின் டப்பிங்  எளிய பூஜையுடன் தொடங்கியது*

நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்க கூடிய 'ஜோ' திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரியோராஜின் வியத்தகு தோற்ற மாற்றம் மற்றும் ஸ்கிரீன் ப்ரசன்ஸ், இயக்குநர் ஹரிஹரன் ராமின் திறமை, சித்து குமாரின் பின்னணி இசை, கண்ணைக் கவரும் விஷூவல் என இவை அனைத்தும் படத்தின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடைந்தது. குறுகிய காலத்திற்குள் படம் முடிவடைந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேற்று (ஜனவரி 23, 2023)-ல் எளிமையான பூஜையுடன் படக்குழு டப்பிங்கைத் தொடங்கியுள்ளது. 

ஃபீல் குட் லவ் கதையாக உருவாகியுள்ள 'ஜோ' திரைப்படத்தை டாக்டர். D. அருளானந்தின் விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்து இருக்கிறது. 17 வயதில் இருந்து 27 வயது வரையிலான இளைஞன் ஒருவனின் காதல் கதையை இந்தப் படம் கூற இருக்கிறது. சென்னை, ராமேஸ்வரம், ராம்நாட், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் என வெவ்வேறு இடங்களில் இது படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' படத்திற்கு அடுத்து தமிழ்ப்படமான 'ஜோ' மட்டும்தான் முதலாமட ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: 'பேச்சுலர்' படப்புகழ் சித்து குமார்,
ஒளிப்பதிவு: ராகுல் KG விக்னேஷ்,
படத்தொகுப்பு: வருண் KG,
கலை இயக்குநர்: ABR,
சண்டைப் பயிற்சி: பவர் பாண்டியன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: LM தனசேகர்,
ஒளிப்பதிவு: அபு & சால்ஸ்,
வரிகள்: வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வீரா சங்கர்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D'One

Tuesday, January 24, 2023

கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் 'கிரிமினல்' படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது*

*பார்சா பிக்சர்ஸ் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் வழங்கும் கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் 'கிரிமினல்' படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது*

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இருவரும்  இணைந்துள்ள புதிய படம் ஒன்றிற்கு 'கிரிமினல்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இந்தப் படத்தை  எழுதி இயக்க, பார்சா பிக்சர்ஸின்  P.R. மீனாக்‌ஷி சுந்தரம், IB கார்த்திகேயனின் பிக் பிரிண்ட் பிக்சர்ஸூடன் இணைந்து தயாரிக்கிறது. ஜனவரி 23, 2023-ல் மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் பேசும்போது, "எங்களுடைய புதிய புராஜெக்ட்டான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார்". 

பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் பகிர்ந்து கொண்டதாவது, "'கிரிமினல்' படத்தின் கதையும், தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குநர் சொல்வது போல இருந்தது. கெளதம் கார்த்திக் & சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். 

*தொழில்நுட்பக் குழு விவரம்:*
இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: பிரசன்னா S குமார்,
படத்தொகுப்பு: மணிகண்ட பாலாஜி

குற்றம் புரிந்தால்"நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

"குற்றம் புரிந்தால்"
நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் "குற்றம் புரிந்தால்". இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார்.

இப்படத்தில் ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.கோகுல், இசை கே.எஸ்.மனோஜ். 

மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன் என்கிறார் இயக்குனர் டிஸ்னி. 

படபிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்த ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.

"குற்றம் புரிந்தால்" திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

@GovindarajPro

"அயலி" _ திரைவிமர்சனம்


 இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5,  தமிழில் தங்களது அடுத்த படைப்பாக " அயலி " என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5, தற்போது இந்த 2023 ஆம் ஆண்டில் மீண்டும் "அயலி "  என்ற தொடரை அறிவித்துள்ளது, இதனை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்குயுள்ளார்.. இது எட்டு தொடர்களாக வெளியாக உள்ளது. இதில் அபி நட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இது ZEE5 இல் ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.


மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி. அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற  நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள். இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா?

இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய வயதுக் கதை தான் அயலி. பழங்கால பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் உடைத்து,  தனது தேடலை அடைய போராடும் தமிழ்ச் செல்வியின் பயணத்தை  இந்த கதை கூறுகிறது. பேப்பர் ராக்கெட்டின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, இந்த தொடரை பார்வையாளர்களுக்கு பெருமையுடன் அறிவித்தார். முக்கிய நடிகர்களுடன் கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரின் சிறப்பு தோற்றத்திலும் இந்த அயலி உருவாகி உள்ளது. நட்சத்திர நடிகர்கள், சமூக செய்தி மற்றும் பொழுதுபோக்கு கதைக்களத்துடன், அயலி ஜனவரி 26 அன்று ZEE5 இல் திரையிடப்பட உள்ளது.

ZEE5, இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “கடந்த ஆண்டு விலங்கு, ஃபிங்கர் டிப் மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற தமிழ் ஒரிஜினல்களுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பிற்கு பிறகு, மற்றொரு பொழுதுபோக்கு மற்றும் வழக்கத்திற்கு மாறான தொடரான 'அயலி'யை  நாங்கள் வெளியிட உள்ளோம்.  சமூகச் செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் எப்பொழுதும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும், கல்வியறிவு அளிக்கும், அறிவூட்டும், மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை  ZEE5 இல் உள்ள அனைவரும் நம்புகிறோம், அயலி அப்படிபட்ட கதை தான். பழங்கால பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்தும் ஒரு  இளம் பெண்ணின் கதை இது. இந்த கதை பல பெண்களை தங்கள் கனவுகளை நம்புவதற்கும் அதன் பின்னால் செல்வதற்கும் தூண்டும். நன்றி "
 
இயக்குனர் முத்துக்குமார் பேசுகையில், “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் வெகுஜனங்களின் பார்வையை மாற்றும் கதைகளை வெற்றிகரமாக வழங்குகின்றன, மேலும் அந்த மாற்றத்தை  பிரச்சாரம் போல் இல்லாமல் மக்களுக்கு கொடுக்க நாங்கள் எடுத்து இருக்கும் ஒரு உண்மையான முயற்சி தான் அயலி . இந்தத் தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் ஒரு கதையாக இருக்கும். இந்த அதிக மணி நேர கதையை சொல்வதற்காக எங்களுக்கு ஒரு தளத்தை கொடுத்த ZEE5-க்கு எங்களது நன்றியை கூறி கொள்கிறோம்." "Ayali"
A ZEE5 Original

Cast

Abi Nakshathra- Tamil Selvi
Anumol - Kuruvammal
ARUVI Madhan - Thavsi
Lingaa - Sakthivel
Singampuli - Thiruppathi
TSR - DHARMARAJ - Murthy
Lovelyn - Mythili
Gayathri - Eswari
Thara - Kayazhvili
Melodi - Selvi
Pragadheeswaran - Murugan
Jenson - Sekar 
Lakshmi Priya Chandramouli - Inspector (Guest Appearance)
Smruthi Venkat - English Teacher (Guest Appearance)
Sendhil vel - Collector (Guest Appearance)
Bagavathi perumal (Bucks) - M.L.A (Guest Appearance)

Crew

Director: Muthu Kumar 
Producer Name: Kushmavathi
Production House: Estrella Stories
Screenplay & Dialogues: Veenai Maindhan, Sachin, Muthu Kumar
Music: Revaa
Editor: Ganesh Siva
Cinematographer: Ramji

Kabzaa' to have a worldwide release for Puneeth Rajkumar's birth anniversary on March 17th


 The team of the highly anticipated Kabzaa has decided to pay a fitting tribute to Superstar Puneeth Rajkumar. Yes! The makers have come forward to releasing the movie on Puneeth Rajkumar's birth anniversary on March 17th. 


Kannada leading star actors Upendra and Kicha Sudeep are playing lead characters in 'Kabzaa', of which the teaser was released by Rana Daggubati.

The attention of the entire Indian film industry is currently back on the Kannada film industry as the big-budget productions like 'KGF1 & 2', '777 Charlie', 'Vikrant Rona' and 'Kantara' have raked in huge moolah after hitting the screens! Upendra and Kichha Sudeep starrer 'Kabzaa' is highly anticipated across India. Accordingly, this film is not only released in Kannada but also in seven Indian languages like Tamil, Telugu, Hindi, Malayalam, Marathi and Oriya.

Produced by R. Chandrasekhar on behalf of Sri Siddeshwara Enterprises in a grand scale, the film is touted as an action thriller in the gangster genre The film stars Upendra andn Kicha Sudeep along with actress Shriya Saran, actors Murali Sharma, Sudha and many others. Arjun Shetty is the cinematographer for this film. Composer Ravi Basrur who had composed the music for KGF, 1 & 2 has scored the music for this flick . Deepu s kumar is the editor. Shiva Kumar has assumed responsibility for the art work and the stunt sequences have been choreographed by three trained stunt choreographers, namely, Ravi Verma, Vijay and Vikram Mor. Kannada film world's leading filmmaker, R. Chandru has directed this flick which is presented by MTB Nagaraj. 
 

Speaking about the film, the director said, “In 1947, an Indian freedom fighter is brutally attacked. His son gets entangled with the mafia due to unavoidable reasons. What happena after that? 
'Kabzaa' is a gigantic production that vividly tells that. 'The Rise of a Gangster in India' is the film' s tagline. In other words, we have discussed the history of the rise of illegal shadow-world fathers of crime in India after independence. " said.
 
'One of the reasons for the success of KGF 1 & 2 was the contribution of music composer Ravi Basrur. He has also composed the music for the film 'Kabzaa', the expectations of the fans have increased multifold! 

After the success of 'KGF', the Kannada film industry is delivering different projects on a pan Indian basis, with new vigor.


4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்


 4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் !!  



பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பதான் .

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் ,   'ஜூம் ஜோ பதான்' ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும்  ஏற்படுத்தியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு  'கிங் கான்' 'பாலிவுட்டின் ராஜா'ஷாரூக் கான்  திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக் கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர் .


ஏற்கனவே இப்படம்  டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய  பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Monday, January 23, 2023

Victory Venkatesh, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project #Venky75 Announcement Out January 25th*

*Victory Venkatesh, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project #Venky75 Announcement Out January 25th*

Victory Venkatesh who is riding high with the blockbuster success of F3 will be joining forces with the very talented director Sailesh Kolanu who delivered consecutive hits with the HITverse, for a high-budget film to be produced by Venkat Boyanapalli of Niharika Entertainment.

The landmark 75th film of Venkatesh- #Venky75 is production No 2 from Niharika Entertainment and they made a successful foray into production with Shyam Singha Roy. The most prestigious project of the production house will be mounted on a large scale. This indeed will be the highest-budget movie for Venkatesh.

Obviously, there will be high expectations on the film coming from successful people. The pre-look poster sees a silhouette image of Venkatesh who holds something in his hand. It’s not a gun and it’s something else that will be revealed on the 25th of this month. The pre-look poster with a huge blast and dense smoke indicates Venkatesh’s intense character and an action genre of the movie.

Sailesh Kolanu who wrote a winning script will be presenting Venkatesh in a first-of-its-kind role in the movie that will feature several prominent actors. Noted technicians will handle different crafts. The makers will announce the other cast and crew soon.

Cast: Venkatesh

Technical Crew:
Writer-Director: Sailesh Kolanu
Producer: Venkat Boyanapalli
Banner: Niharika Entertainment
PRO: Yuvraaj

Sunday, January 22, 2023

சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.*

*சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.*

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். திரிபுரனேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல் எல் பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் பரத் சவுத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நாராயணதாஸ் கே நரங் வழங்குகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் கதையின் நாயகனான சந்தீப் கிஷனின் தோற்றம், அவரது நடிப்பு, சண்டை காட்சிகள், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடும் உழைப்பு... ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. முன்னோட்டத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், பின்னணியையும் விளக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக காதலிக்கும் பெண்களைப் பற்றி கௌதம் மேனன் எச்சரிக்கும் வசனங்களும், அதற்கு சந்தீப் கிஷன் பதிலளிக்கும் வசனங்களும் உணர்வுபூர்வமாகவும், வலிமையானதாகவும் இடம் பிடித்திருக்கிறது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கின் திரை தோன்றல் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்திருக்கிறது. மேலும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் மிரட்டும் வகையிலான தோற்றமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. இள வயதில் தோன்றும் சந்தீப் கிஷன், ஒருவரை துப்பாக்கியால் நேருக்கு நேர் சுடுவதுடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.

ஒரு அழகான காதல் கதையை ஸ்டைலிஷான காட்சி அமைப்புகளுடன் ரத்தம் தோய்ந்த ஆக்சன் என்டர்டெய்னர் போல் முன்னோட்டம் இருப்பதால், வழக்கமான கேங்ஸ்டர் படங்களை விட கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், பிரத்யேகமான முயற்சி எடுத்து, திரைக்கதை அமைத்து அதனை திரையில் காட்சிப்படுத்தியிருப்பதால் அவரது முயற்சி வெற்றியை தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காதலி மீது காட்டும் அன்பும், எதிரிகள் மீது அவர் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை கொண்டாடி வருகிறார்கள். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் , அனுசுயா பரத்வாஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒவ்வொருவரும் வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுவதால், 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. https://youtu.be/HBTaKskrt9w

Saturday, January 21, 2023

ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியாரின் எந்தையும் தாயும் பாடல் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியாரின் எந்தையும் தாயும் பாடல் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.
*எந்தையும் தாயும்_வந்தேமாதரம்* எனும் தலைப்பில் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி இசையமைத்துவெளியிடப்படவுள்ள இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் இயக்கியுள்ளார். 

திரைப்படங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பாடியிருந்தாலும், தான் தயாரித்து இசையமைத்துப்பாடிய இந்த பாடலை தேசத்திற்கான நன்றிக்கடனாக  கருதுவதாக ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்காதிரி தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து இசையமைப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சக்ஸஸ் 11 நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடலை குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். மேலும் பல்வேறு சிறந்த கலைஞர்களின் பங்களிப்போடு இந்த பாடல் வெளியாக உள்ளது.

Friday, January 20, 2023

பெருங்காம பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா உடைத்து பேசுவோம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை ஒய் எம் சி மைதானத்தில் நடைபெற்றது

'பெருங்காம பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா உடைத்து பேசுவோம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை ஒய் எம் சி மைதானத்தில்  நடைபெற்றது


திருமதி  சுப்பு ( எ )கனலி எழுதிய "பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா உடைத்து பேசுவோம்" என்ற நூல் முன்னாள் நீதி அரசர் ஆ முகமது ஜியாவுதீன் வெளியிட்டார் புத்தகத்தின் முதல் பிரதியை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி பெற்றுக் கொண்டார்
 இந்நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் கொளளுப்பேத்தி இரா. உமா பாரதி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா,  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர்  டி.எஸ். ஆர் சுபாஷ்  சமூக ஆர்வலர் கல்யாணந்தி, லயன் அபி சங்கரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூலில் சிறப்பை எடுத்துரைத்தனர்  மேலும் நிகழ்வில் கிங்மேக்கர் ராஜசேகர்    இணை நிறுவனர் வள்ளிதாசன்    
 புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட ஹென்றி கூறுகையில் அன்பு சகோதரி அகில இந்திய ரியல் எஸ்டேட் குடும்பத்தை சார்ந்தவர்  இன்று எழுதி வெளியிட்டுள்ள நூல்  தலைவர் சாதனைகளை புரிய வேண்டும் என்றும்  மென்மேலும் வளர்ந்து பல உயரங்களை அடைய வேண்டும்  மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்

ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன் வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்ட்'*

*ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன்  வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்ட்'*

நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் மூலம் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான 'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இப்போது 'ரெய்ட்' படத்துடன் வருகிறார். 

தயாரிப்பாளர் S.K. கனிஷ்க் & GK. G. மணிகண்ணன் பேசியதாவது, "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப் போய் அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் இதன் உரிமத்தை பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய அசிஸ்டெண்ட் கார்த்தியை வைத்து படம் இயக்கவும் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார்.

இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தபோது அவர் இளமையாக இருந்தார். ஆனால், அவரது கதை சொல்லலில் அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். கதையை நாங்கள் இறுதி செய்த பிறகு இதில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு சார் மிகச்சரியாக பொருந்திப் போவார் என முடிவு செய்தோம். அவரை அணுகி பேசியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு பல ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்" என்றார். 

விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா & அனந்திகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

வசனம்: இயக்குநர் முத்தையா,
இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: கதிரவன்,
படத்தொகுப்பு: மணிமாறன்,
கலை: வீரமணி கணேசன்,
நடனம்: பாபா பாஸ்கர்,
ஆக்‌ஷன்: கே. கணேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: மாலினி பிரியா,
ஒப்பனை: வி. சேகர்,
VFX: G.E. அசோக் குமார்,
SFX: சேது,
DI கலரிஸ்ட்: சிவசங்கர்.V,
மிக்ஸிங்: T. உதயகுமார்,
எக்ஸிகியூட்டிவ் புரொடக்சன்: தம்பி M. பூபதி

மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !!

மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !! 


தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி  ஆக்சனோடு களம் இறங்குகிறார். 

6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், இப்படத்திற்கு வித்தியாசமாக  'வாட் தி ஃபிஷ்' 'WHAT THE FISH' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. 

உலகத்தரத்தில்  அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை  மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.  மனோஜின்  இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்

ரசிகர்களுக்கு புதிய உலகைக் காட்டப்போகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

அனைவரும் ரசிக்கும் வண்ணம் உலகின் பல மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஒரு அதிசய உலகத்தை உங்கள் கண்முன் காட்டும் திரை அனுபவமாக இப்படம் இருக்கும். 

“வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் 6ix Cinemas தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. 


நடிகர்கள் 
மனோஜ்குமார் மஞ்சு 


தொழில்நுட்ப கலைஞர்கள் 
எழுத்து இயக்கம் - வருண் 
தயாரிப்பு நிறுவனம் - 6ix Cinemas
மக்கள் தொடர்பு - சதீஷ்குமார், சிவா ( AIM )

The exciting “HI LIFE BRIDES” exhibition kicked off on Friday, January 20th 2023, at the Hyatt Regency, Chennai.


 

The exciting “HI LIFE BRIDES” exhibition kicked off on Friday, January 20th 2023, at the Hyatt Regency, Chennai.

 

The Inaugural Edition of Hi Life Brides Chennai launched on January 20th 2023, at the Hyatt Regency and was graced by celebrities and inspirational women across all spheres of life.

 

The launch ceremony was inaugurated by Guests of Honor Vidya Singh (Wedding Planner), Ratika Haksar (Jewellery Designer), Akriti Sachdev (Bridal Make Up Expert), Dr. Aishwarya (Celebrity Dermatologist), Jeyasree Ravi (Owner Palam Silks), Karthik Srinivasan (Moonstruck Wedding Photographer), Bandana Narula (Lakme Fashion Week Designer), Rashmi Bothra (Image Consultant), Mital Surendra (Wedding Gifting) and Preeti Nagpal (Mehak Florist) and scores of fashion influencers.


Aby Dominic, MD & CEO, noted, “Hi Life Brides Chennai brings brides-to-be the latest bridal trends handpicked from across India. With 100+ designers showcasing their unique collections, the brides and families will indeed be spoilt for choice. The most trusted and trendy jewelers will also be showcasing the latest range of Bridal Jewellery. This will be a single destination where they can shop their entire bridal look at one go.”


For every Indian woman, her wedding day is the most memorable day of her life. Every bride-to-be wants to stand apart with an exclusive bridal look, dressed in bridal finery. Understanding these aspirations, Hi Life Exhibition launched Hi Life Brides, an exclusive bridal luxury exhibition dedicated to Bridal Couture, Jewellery, Accessories, Gifts and other essentials. These glittering events have been extremely successful when held at cities like Hyderabad, Bengaluru, Vijayawada, Ahmedabad and Surat.

 

About Hi Life

Hi Life Exhibition is a signature fashion, wedding, lifestyle & luxury exhibitions company that is visited by over 1 Million fashionistas across 130+ exhibitions held in 30 cities in a year. Each exhibition features a trendsetting range of Designer Wear, Jewellery, Wedding Fashion, Accessories, Luxury, Home Decor, Furnishing Concepts, Gifting Ideas, Artefacts & Avant Garde Art from across India.


The exhibitions are carefully curated to cater to the fine tastes of a high-end clientele who are well-travelled and exposed to the best of luxury, fashion and lifestyle from across the globe. Every exhibition is an exclusive experience in a luxurious ambience where visitors love shopping and also enjoy the vibrant, upbeat atmosphere.  It is India’s first Crisil-rated exhibitions company that is also ISO 9001:2015 quality certified.


Hi Life also operates brands like Design Library and Hi Life Jewels. Design Library offers exclusively curated collections in designer wear, jewelry, wedding trousseau, home décor, fine leather goods, unique accessories and more. India’s top fashion influencers besides the rich and famous find this an engaging and differentiated shopping experience.



For More Information:


Venue: Hyatt Regency, Rostrevor Garden, Teynampet, Chennai – 600018

Date: 20th - 22nd January 2023

Timings: 10 AM – 8PM

Website: http://www.hilifeexhibitions.in/ 

Social Media: https://instagram.com/hi_life_exhibition 


-


Media Contact:

Red Consulting

Sunita/ Kamal/ Rakib



Wednesday, January 18, 2023

White Carpet Films Productions* *Filmmaker Venki directorial* *Actor Sathish starrer* *“White Carpet Films Production No. 3”*

*White Carpet Films Productions* 
*Filmmaker Venki directorial* 
*Actor Sathish starrer* 
*“White Carpet Films Production No. 3”*

White Carpet Films K. Vijay Pandi’s upcoming production, featuring actor Sathish in the lead role, directed by debutant Venki, was launched this morning (January 18, 2023) with a simple ritual Pooja ceremony. 

Filmmaker Lokesh Kanagaraj, Trident Arts Producers R. Ravindran, Seven Screen Studio Producer Lalith, Escape Artists Madhan, PVR Cinemas Meena, Doctor Nisha, Advocate Dhamodara Krishnan, and many others were present. 

This yet-to-be-titled movie marks the third production outing of producer K. Vijay Pandi of White Carpet Films. He had earlier produced Arulnithi starrer Dejavu, and Naveen Chandra’s Telugu film ‘Repeat’.  It is worth mentioning that Venki earlier worked as associate director with Lokesh Kanagaraj. 

The film, tentatively titled ‘White Carpet Films Production No.3’, features Sathish as the lead character and Simran Gupta performs the female lead role. Anand Raj, John Vijay, Ramesh Thilak, Thangadurai, Madhusudhanan, and many others are a part of this star-cast. 

Yuva is handling cinematography, and VBR is composing the music for this film.  

Editor - Siddharth 
Art - Durai Raj
Costume Designer - Kiruthikha Sekar
CO producer - Murali Krishnan
PRO: Sathish-Sathish Kumar (AIM) 
Publicity Designer: Thandora 

The crew officially confirms that the shooting will be commencing shortly.

Monday, January 16, 2023

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் 'ஜெயம்' ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் 'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு*

*பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் 'ஜெயம்' ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் 'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு*


பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் 'ஜெயம்' ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் 'இறைவன்' திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். 

படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, "'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 'இறைவன்' படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது. 'ஜெயம்' ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்தது தயாரிப்பாளராக பேஷன் ஸ்டுடியோஸிற்கு மகிழ்ச்சியான விஷயம். எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி சார் அவர்களுக்கு நன்றி. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான 'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்', 'ஜனகனமன' ஆகிய படங்களைப் போலவே 'இறைவன்' திரைப்படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்.   ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். 'ஜெயம்' ரவி சார், நயன்தாரா மேம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர்களது ஸ்டார் வேல்யூ மற்றும் கடந்த 2022-ல் வெளியாகி வெற்றிப் பெற்ற அவர்களது படங்களும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'இறைவன்' படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்". 

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி,  பொற்கொடி இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்*:

ஒளிப்பதிவு : ஹரி கே வேதாந்த்,
இசை : யுவன் ஷங்கர் ராஜா,
படத்தொகுப்பு : மணிகண்ட பாலாஜி,
கலை இயக்குநர் : ஜாக்கி,
சண்டை பயிற்சி : டான் அசோக்.

Saturday, January 14, 2023

Prince Pictures signs director Manu Anand for a new project*

*Prince Pictures signs director Manu Anand for a new project*

Following the grand success of Sardar and Kaari, Prince Pictures S Lakshman Kumar is producing a new film, which will be directed by Manu Anand. 

He has earlier directed a Box Office Hit movie FIR. 

It is noteworthy that the production house had signed filmmaker Andrew Louis for a new project. 

Prince Pictures is now signing filmmakers who are consistently delivering movies with  unique contents that appeals to the interests of universal crowds. 

The official announcement about the actors and technicians in the film will be revealed soon.

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா-...