Tuesday, February 14, 2023

உலக உற்பத்தி மையமாக இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர் தொழில் துறை வேகமாக முன்னேறுகிறது.

உலக உற்பத்தி மையமாக இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர் தொழில் துறை வேகமாக முன்னேறுகிறது.
 
 
~ 12-ஆம் ஸோர்ஸ் இந்தியா மாநாடு - எலெக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.


~ “இந்த மாநாட்டின் நோக்கமாவது தமிழகத்தின் மீது முக்கிய கவனம் செலுத்தி பெரும், நடு மற்றும் சிறு இ எஸ் டி எம் தொழில் நிறுவனங்களுக்கிடையே ஓர் ஆற்றல் மிக்க நெட்வொர்க்கை ஏற்படுத்தி உற்பத்திக்கான முதலீடுகள், அதிக மதிப்புக் கூட்டல், மேலும் இத்துறையின் நீண்ட கால ஒப்பந்தங்களை மேம்படுத்துதல் ஆகும்.  
 


பிப். 13, 2023: சென்னை: கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற 12-ஆம் சோர்ஸ் இந்தியா மாநாட்டில் இந்திய மேலும் தைவான் மற்றும் இதர நாடுகளிலிருந்து வந்தவர்களயும் சேர்த்து 120-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிக்கு வைக்க, இம்மாநாட்டில் தினமும் 4000 முதல் 5000 பார்வையாளர்கள் ஆர்வத்தடன் கலந்து கொண்டனர். இந்தியாவின் மின்பொருள் மற்றும் கணிணி உற்பத்தியாளர்களின் முன்னணி பிரதிநிதியாக விளங்கும் இண்டஸ்டிரீ அசோசியேஷனான எல்சினாவில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பன்னாட்டு நிகழ்ச்சியை, திரு. தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர், தமிழ் நாடு மற்றும் பிற அரசின் மேலும் இத்தொழில் துறையின் முக்கிய பிரமுகர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 


50-க்கும் மேற்பட்ட தொழில்துறையின் முன்னணி நிறுவனத் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களாக கலந்து கொள்ள மேலும் 40-க்கும் மேற்பட்ட கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள் இந்தியாவை உலகின் முக்கிய கொள்முதல் மையமாக்க இந்தியாவின் உற்பத்தி முறையை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த மாநாட்டின் இரண்டாம் நாள், மேலும் இத்துறையில் வெற்றி பெற்று விளங்குபவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேச இருப்பவர்கள்:

பிரதான விருந்தினர்: திரு எஸ். கிருஷ்ணன், ஐஏஎஸ், அரசின் கூடுதல் தலைமை காரியதரிசி, தொழில் துறை பிரிவு


- திரு ஹன்ஸ் ராஜ் வர்மா, ஐஏஎஸ், எம்.டி. - டிஐஐசி
- திரு அருண் ராய், ஐஏஎஸ், காரியதரிசி, நடு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள்
- திருமதி ஜெய ஸ்ரீ முரளிதரன், ஐஏஎஸ், டிட்கோ நிர்வாக இயக்குநர், 
- திருமதி ஆஷா அஜித், ஐஏஎஸ், கைடன்ஸ் நிர்வாக இயக்குநர்,
- செல்வி சிஜி தாமஸ், ஐஏஎஸ், ஃபாமே நிர்வாக இயக்குநர், 
- செல்வி கிரேஸ் பச்சுவா, ஐஏஎஸ், ஃபாமே எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர், 
- திரு விஷ்ணு வேணுகோபாலன், ஐஏஎஸ், கைடன்ஸ் நிர்வாக இயக்குநர் 
- செல்வி பூஜா குல்கர்னி, ஐஏஎஸ், தொழில் துறை சிறப்பு செயலாளர், தமிழ் நாடு அரசு

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிணித் துறை அமைச்சகத்தின் சார்பில், கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்:

- ஆஷா நான்ஜியா, குழும இயக்குனர் & அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜி
- டாக்டர் சந்தீப் சாட்டர்ஜீ, மூத்த இயக்குனர்

முக்கிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விவரங்கள் பற்றிய அமர்வுகள், தொழில் அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல், எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தி முறைகளை வலுப்படுத்துதல் என இம்மாநாடு, உதிரி பாகங்கள் மற்றும் டிசைன் சார்ந்த உற்பத்தி, செமி கண்டக்டர்ஸ், ஆட்டோமேட்டிவ், மின் வாகனங்கள், 5ஜி தொழில்நுட்பங்கள், சிறப்பு கச்சாப் பொருட்கள், பிசிபி'ஸ், தொழில் தானியங்கி வழிமுறைகள் மற்றும் சோதனை & அளவீடு போன்ற பல தலைப்புகளில் முக்கிய விஷயங்கள் விளக்கப்படும். கைபேசி சாதன உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தி செய்யும் நாடாகும்.  மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் உதிரிபாகங்கள், பிசிபி-க்கள், பேசிவ்ஸ், மேலும் செமிகண்டக்டர்கள், போன்ற பொருட்களில் இந்தியாவின் இறக்குமதியை மிகவும் அதிகமாக சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, வேகமாக வளர்ந்து வரும் துறைகளான தொலைத் தொடர்புத் துறை மற்றும் 5ஜி, கைபேசிகள், மின் வாகனங்கள், எலெக்ட்ரானிக் அணிகலன்கள் மற்றும் பலதரப்பட்ட நுகர்வோர் பொருட்கள் இத்துறையின் பன்மடங்கு வளர்ச்சிக்கு உந்துதலாக உள்ளன. 
 
திருமதி ஜெய ஸ்ரீ முரளிதரன், ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கார்ப்பொரேஷன் லிட்-இன் நிர்வாக இயக்குநர், கூறியதாவது: "தமிழ் நாடு பொருளாதாரத்தில் இந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாகும். மேலும் மிகவும் பெரிய உற்பத்தி மற்றும் நுகரும் மாநிலமுமாகும். இவை எலெக்ட்ரானிக் ஹார்டுவேர் உற்பத்திக்குத் தமிழகத்தை மிகவும் பொருத்தமான தளமாக செய்கின்றன. தமிழக அரசும் மாநிலத்தில் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தி (இஎஸ்டிஎம்)-க்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அளித்து வருகிறது. இம்முயற்சிகளின் பலனாக, தமிழ் நாடு நாட்டின் மிகப் பெரிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மாநிலமாகி, இஎஸ்டிஎம்-துறையில் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கிச் சென்றுள்ளது. சோர்ஸ்-இந்தியா 2023, இஎஸ்டிஎம்-துறையின் வளர்ச்சியை வழிவகுக்கும் நிகழ்வாக நாங்கள் கருதுகிறோம்."
 
 
செல்வி சிஜி தாமஸ் வைத்தியன், ஐஏஎஸ், நிர்வாக இயக்குநர், ஃபாமே தமிழ்நாடு, கூறியதாவது: "ஃபாமே தமிழ்நாடு நடு மற்றும் சிறு உற்பத்தி நிறுவங்களுக்குப் பல்வேறு வகைகளில் உதாரணமாக, அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளி நாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டார்ய்தல், அரசு பரிசீலனை முறைகளை சீராக்குதல், தொழில்நுட்பம், நிதி மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் ஏற்படும் தடங்கல்களுக்குப் புதிய மற்றும் நவீன முறை தீர்வுகளை அளிப்பது என உதவி புரிந்து வருகிறது. சோர்ஸ்-இந்தியா 2023 நிகழ்ச்சியின் மூலம், இஎஸ்டிஎம்-துறையின் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு உதவி புரிய ஆவலாயுள்ளோம்." 

"தமிழக அரசானது தமிழ் நாட்டை, மிகவும் புத்தாக்கம் நிறைந்த உலகளவில் போட்டி போடும் அளவுக்கு எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தி (இஎஸ்டிஎம்)-மையமாக்கும் குறிக்கோள் கொண்டுள்ளது. இந்தக் குறிக்கோளை அடைய சோர்ஸ்-இந்தியா, மாநிலத்துள்ள அதன் இஎஸ்டிஎம்-துறை அங்கத்தினர்களுக்குப் பொருத்தமான தளத்தை அளிக்கும் என நான் நம்புகிறேன்" எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு உதவி புரிய ஆவலாயுள்ளோம்." இவ்வாறு செல்வி கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சுவா, ஐஏஎஸ், ஃபாமே தமிழ் நாடு எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர் கூறினார். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இத்துறையின் முக்கியத் தலைவர்கள், சால்காம்ப் மேனுஃபாக்ச்சரிங்கின் திரு சசி குமார், ஃபாக்ஸ்கான் குழுமத்தின் பாரத் எஃப் ஐ எச்-இன் திரு. ஜோஷ் ஃபோல்ஜர் கூட்டத்தினரிடையே உரையாற்றினார்கள். பின், செமி குளோபலின் தலைவரும் இந்திய செமிகண்டக்டர் மிஷனின் அங்கத்தினருமான திரு அஜித் மனோச்சா அவர்கள் கூட்டத்தினரிடையே செமி கண்டக்டர் தொழில் துறையின் எதிர்காலம் பற்றி உரையாற்றினார்.

தைவான் ஆர் ஓ சி அம்பாஸடர், திரு பொஷுவான் கேர் அவர்கள் ஆன்லைன் மூலமாக இந்நிகழ்ச்சி குறித்து தன்னுடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டு, தைவான் சோர்ஸ் இந்தியாவின் மிக முக்கியப் பங்கேற்றிருப்பது குறித்தும் தீமா மற்றும் தைத்ரா போன்ற பல தைவான் நிறுவனங்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். 

செமிகண்டக்டர் தொழில் துறையின் பணியாளர் வளர்ச்சி மற்றும் சப்ளை செயின் மேம்பாட்டுக்கென எல்சினா மற்றும் செமிக்கிடையே, மிகவும் விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தமுள்ளது. இந்தப் புரிதலின் அடிப்படையில் எல்சினா, செமி கண்டக்டர் துறையில் ஏற்கனவே பற்றாக்குறையிலிருக்கும் நல்ல திறனாளிகளின் தேவை மேலும் அதிகரிப்பதை எதிர்கொள்ளும் வகையில், இத்துறையின் பல்வேறு பிரிவுகளில் பயிற்சிப் பிரிவுகளை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. மிக சமீபத்தில் செமி-யானது செமி யுனிவர்சிடி மூலமாக ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இது கலிபோர்னியாவில் பிப்ரவரி 7 அன்று அறிவிக்கப்பட்டது. 

எல்சினா, இத்துறையின் முன்னணி தொழில் அசோசியேஷனாக கடந்த 55 வருடங்களாக விளங்கி, எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள், ஈ எம் எஸ் மற்றும் முழு செமி கண்டக்டர் துறைக்கான சப்ளை செயின் அதாவது செமி கண்டக்டர் மாட்யூல்களின் அசெம்பிளி சோதணை, மார்க்கிங் மற்றும் பேக்கிங் மேலும் திறன் மேம்பாடு போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கணிசமான பங்களித்து வருகிறது. வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு மைக்ரோ எலெக்ட்ரானிக் மற்றும் செமி கண்டக்டர் நிறுவனங்கள் இந்திய உற்பத்திக் கூட்டமைப்பினரின் பரஸ்பரம் சந்திப்புக்கு சோர்ஸ் இந்தியாவில் ஏற்பாடு செய்வதன் மூலம், உள் நாட்டிலேயே ஒரு செமி கண்டக்டர் சப்ளை செயின் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செமி கண்டக்டர் துறையில் இந்தியா எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை அடையச் செய்யும்.

ஸோர்ஸ் இந்தியா 12-ஆம் மாநாட்டின் நோக்கமாவது, உள்நாட்டு கச்சாப்பொருள், உதிரி பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளரிடத்தில் தங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பளிப்பதாகும். 


எல்சினா (எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்டிரீஸ் அசோஷியன் ஆஃப் இந்தியா) பற்றி
எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்டிரீஸ் அசோஷியன் ஆஃப் இந்தியா, 1967-இல் எலக்ட்ரானிக்ஸ் துறையின் ஆரம்ப கட்டத்தில், எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. அது முதலே, எல்சினா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி உற்பத்தியாளர்களின் பரஸ்பர மன்றமாக உள்ளது. எல்சினா மிகவும் முணைப்புடன் அரசுடன் கலந்தாலோசித்து, கொள்கை மற்றும் வியாபர சூழ்நிலை விஷயங்களில் அதற்கு ஆலோசனை வழங்குகிறது. இது இந்தியா மற்றும் வெளிநாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார ஆதரவு நிறுமங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டில், வியாபார விருத்தி மற்றும் தொழில் மற்றும் துறை குறித்த விவரப் பகிர்வுகளை செயல்படுத்த உதவுகிறது. தற்போதைய அதிகபட்ச பொருளாதார தாராளமயமாக்கல் சூழலில், எல்சினா எலக்ட்ரனிக்ஸ் சமூகத்திற்கான தொழில் முறை மற்றும் மதிப்புக் கூட்டு சேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறது.
 ஸோர்ஸ் இந்தியா பற்றி:  
ஸோர்ஸ் இந்தியா, எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்டிரீஸ் அசோஷியன் ஆஃப் இந்தியா (எல்சினா)-வின் முயற்சியில் 2009-ஆம் ஆண்டு இந்திய எலெக்ட்ரானிக்ஸ் சப்ளை செயினின் வளர்ச்சியை மேலும் கூட்டும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது. எந்த ஒரு இஞ்சீனியரிங் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக இருப்பது வலுவான சப்ளை செயின் என்பதை எல்சினா நன்கு அறிந்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் துறைக்கு இந்திய சந்தை மிகப் பெரும் சந்தையை அளிக்கிறது. ஸோர்ஸ் இந்தியா இந்திய எலெக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்தியின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் தனித்துவமான பி2பி தளமாகும். ஸோர்ஸ் இந்தியா மாநாடு, எக்ஸிபிஷன், வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் நேர் சந்திப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மேலும் பெரும், நடு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சிக்கு ஆலோசிக்கும் மன்றமுமாகும். இது வாய்ப்புகள், பி2பி சந்திப்புகள், இத் துறையின் எதிர்பார்ப்புகளை அரசுக்கு விளங்க வைத்தல், குறிப்பாக அரசு தொழில் ஆதரவு கொள்கைகள் வியாபார நுட்பங்கள் மற்றும் விவரங்களின் பகிர்வு போன்றவற்றை முக்கியத்துவத்துடன் செயல்படுத்துகிறது.

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட  'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகரா...