Tuesday, February 28, 2023

Shasun Bazaar 2023 - Galaxy of Merchandising

“Shasun Bazaar 2023 - Galaxy of Merchandising”
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமான சபாஷ் சுய தொழில் முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் Shasun Bazaar 2023 - Galaxy of Merchandising என்ற நிகழ்ச்சி  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்,   ஐ.ஏ.எஸ்.  எஸ்.மதுமதி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், இணைச்செயலர் ஹரிஷ் எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டு தொடக்க விழாவினைச் சிறப்பித்தனர்.
சபாஷ் சுய தொழில் முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் இந்நிகழ்ச்சியில் உணவு, ஆடைகள், இயற்கை உரங்கள் மற்றும் காய்கள், மருத்துவ குணம் நிறைந்த செடிவகைகள், பல்வகைப் பூச்செடிகள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட  140 கடைகள் இடம்பெற்றன.  இதில் 6000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்ததோடு, முன்னாள் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுவை உள்ளடக்கிய சுமார் 300 கடை உரிமையாளர்களும் பயனடைந்தனர். கல்லூரி மாணவிகள் தங்களின் தொழில் முனைவினை மேம்படுத்தும் திறனை வளர்க்கும் வகையிலும் தங்களது சொந்த தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் உத்தியை அறியும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்தது. மேற்கண்ட கடைகளில் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய கடைகளைத்  தேர்ந்தெடுத்து அக்கடை உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

 கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! பட முன் வெளியீட்டு நிகழ்வில், மா...