Saturday, July 1, 2023

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் " P- 2 "

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம்    " P- 2 " 

அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக " P- 2 " என்று பெயரிட்டுள்ளனர்.

கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன்  
கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தேனிசை தென்றல் தேவா இசையாமைக்கிறார்.
ஒளிப்பதிவு - S. R. வெற்றி
பாடல்கள் - சினேகன்
எடிட்டிங் - மாதவன்
ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ்
நடனம் - ராதிகா, ஜான்
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு - P. ராமலிங்கம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் - சிவம்.

படம் பற்றி இயக்குனர் சிவம் கூறியதாவது....

ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறோம். தேனிசை தென்றல் தேவா இசையமைப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவம்.

தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் C.N. ரவிகுமார் இன்று இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் P -2  படத்தின் பூஜையுடன் பாடல் பதிவை துவக்கி வைத்தார்.

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...