Monday, August 21, 2023

பெரியார் சொன்ன பெண் விடுதலை தான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று கூறிய எம்.பி தயாநிதி மாறன் சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள், பெண்களுக்கு அந்த தன்னம்பிக்கை அளித்துள்ளது என்று பாராட்டி உள்ளார்.

பெரியார் சொன்ன பெண் விடுதலை தான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று கூறிய எம்.பி தயாநிதி மாறன் சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள், பெண்களுக்கு அந்த தன்னம்பிக்கை அளித்துள்ளது என்று பாராட்டி உள்ளார். 

சென்னை, சேத்துபட்டில் உள்ள லேடி ஆண்டாள் அரங்கத்தில் சக்திமசாலாவின் 6 வது சுயசக்தி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இல்லத்தில் இருந்தபடியே தொழில்துறையில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.  

பிராண்ட் அவதாரின் முன்முயற்சியான சக்திமசாலா சுயசக்தி விருதுகள் - 2023 வீட்டிலிருந்து வணிகத்தைத் தொடர்ந்த எண்ணற்ற பெண்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. 6 வது ஆண்டாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விருது விழாவில், உத்வேகத்திற்கான சக்தி பெண் விருதுகள் 5 பேருக்கு வழங்கப்பட்டன. 

சக்தி மசாலா நிறுவனர்களான சாந்தி துரைசாமி மற்றும்  பி.சி.துரைசாமி  ஆகியோர் 'உணவு மற்றும் பானங்கள்' பிரிவில் சென்னையைச் சேர்ந்த சாந்தாவுக்கு  விருது வழங்கினர். சென்னையை சேர்ந்த மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணனுக்கு 'சமூக நலன்' பிரிவிலும்,   பத்ம ஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன் கலை மற்றும் கலாச்சாரம் பிரிவிலும், பொழுதுபோக்கு பிரிவில் சிறந்த பெண் ஆளுமைக்கான விருது நடிகை ரேவதிக்கும், பாசிட்டிவ் இன்ஃப்ளூயன்சர் பிரிவில் ஸ்ருதி நகுலுக்கும்  சக்தி பெண் விருதுகள் வழங்கப்பட்டன.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ஹரிஷ்க்கு டிஜிட்டல் ஹோம்பிரீனர் விருதும்,  கோவையைச் சேர்ந்த எஸ்.ராதாலட்சுமி சதீஷ்குமாருக்கு விவசாயத்திற்கான விருதும் வழங்கி சிறப்பித்தார். 

இந்த விழாவில் சிறந்த பெண் ஆளுமைக்கான சக்தி பெண் விருது நடிகை ரேவதிக்கு சுகாசினி மணிரத்தினம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த ஜி.ஜோசஃபின் ரெஜினா பொன்மணிக்கு "ஹோம் புரொபஷனல்" விருது வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த காயத்ரிக்கு
அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கான விருதும்,   தஞ்சாவூரை சேர்ந்த ஷாநாஸ்க்கு கலை மற்றும் கலாச்சாரத்துக்கான விருதும் வழங்கப்பட்டன. 

 கல்வி மற்றும் இலக்கியம் விருது கோவையைச் சேர்ந்த சிந்துவுக்கும்,   திருச்சியைச் சேர்ந்த சத்ய கவிதாவுக்கு விவசாயத்திற்கான விருதும் வழங்கப்பட்டன. 

சமூக நலன் பிரிவில்  சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா சிவக்குமாருக்கும், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் துபாயைச் சேர்ந்த புவனேஸ்வரி குமரவேலுக்கும், மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் பிரிவில் கவுரிசங்கரி சுரேஷ்குமாருக்கும்,  விளையாட்டு மற்றும் உடற்தகுதி பிரிவில்  சேலத்தைச் சேர்ந்த வித்யா நாகநாதனுக்கும்  விருதுகள் வழங்கப்பட்டன. 

ஹெல்த்கேர் பிரிவில்  சென்னையைச் சேர்ந்த வர்தினி, உணவு & பானங்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த கீதா மல்லினேனி ஆகியோர் சுயசக்தி விருதுகளை பெற்றுக்கொண்டனர். 

தொழில்துறையில் சாதனை படைத்துவரும் இல்லத்தரசிகள் 12,000 க்கும் மேற்பட்டோர் கடந்த 6 ஆண்டுகளில் சக்தி மசாலாவின் சுயசக்தி  விருதுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.   விருதுகள் அங்கீகாரம் மற்றும் மானியங்கள் மூலம் 350 க்கும் மேற்பட்ட பெண்களை சக்தி மசாலா  அங்கீகரித்து அதிகாரம் அளித்துள்ளது. 

இந்த விருதுவிழாவில், நேச்சுரல்ஸ் குமாரவேல், வீணா குமாரவேல், சென்னை  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கிருத்திகா ராதாகிருஷ்ணன், சுகாசினி மணிரத்னம்,பூர்ணிமா பாக்கியராஜ், நீனா ரெட்டி, ஷைலஜா செட்லூர், சரண்யா ஜெயக்குமார், மீனா சப்ரியா,  ஆர் ஜே விக்னேஷ்காந்த், மதன் கார்க்கி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

EssEmm Corporation Unveils Cosmos CookWok Mini – A Game-Changer in Compact Cooking Solutions

EssEmm Corporation Unveils Cosmos CookWok Mini – A Game-Changer in Compact Cooking Solutions EssEmm Corporation is renowned for its commit...