Monday, August 21, 2023

DRA Homes அற்புதமான புதிய திட்டங்களுடன், வடசென்னை பகுதியில் கால் பதிக்கிறது !!

DRA Homes  அற்புதமான புதிய திட்டங்களுடன், வடசென்னை பகுதியில் கால் பதிக்கிறது !!


சென்னை (ஆகஸ்ட் 21, 2023): சென்னை நகரின் 384வது மெட்ராஸ் தினத்தை கொண்டாடும் விதமாக,  ரியல் எஸ்டேட் துறையில்  புகழ்பெற்ற நிறுவனமான DRA Homes, பல புதிய திட்டங்களுடன் வடசென்னையின் களத்தில் கால்பதிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DRA Homes, சென்னையில் உள்ள மிகவும் மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற ஹோம்ஸ் டெவலப்பர்களில் ஒன்றாகும்.  குறிப்பிட்ட நேரத்தில்  திட்டப்பணிகளை முடிப்பதுடன்,  மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தும், இல்லங்களை வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமாகும். சென்னை முழுவதும் பல இடங்களில் பல அற்புதமான இல்லங்களை உருவாக்கியுள்ள,  DRA Homes, இப்போது வடசென்னை பகுதியில் தன் பணியை துவங்கவுள்ளது. மேலும் 384வது மெட்ராஸ் தினத்தை  கொண்டாடும் வகையில் இந்த செய்தியை அறிவிப்பதில் DRA Homes மகிழ்ச்சி அடைகிறது.


'மெட்ராஸ்' என வரலாற்றாசிரியர்களால் அன்புடன் போற்றப்படும் வட சென்னை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் நிறுவப்பட்ட உண்மையான இடத்தைக் குறிக்கிறது, மேலும் இப்பகுதி கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் அழகியல் சாரத்தை கொண்டுள்ளது. DRA Homes இப்போது வடசென்னையின் மாதவரத்தில் இரண்டு திட்டங்களின் கூட்டு வளர்ச்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,  இந்த இரண்டு குடியிருப்பு திட்டங்களையும் விரைவில் தொடங்கவுள்ளது DRA Homes.


DRA Homesன் நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்சித் ரத்தோட் கூறுகையில், “எங்கள்  வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மெட்ரோ மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சிறந்த இணைப்பாக விளங்கும் வடசென்னையின் முக்கியத்துவத்தையும், இப்பகுதி  வலுவான  சந்தையாக இருக்கும் என்பதையும் நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம்.  இப்பகுதியில் உருவாகவுள்ள எங்கள் இரண்டு திட்டங்களும், வரவிருக்கும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பிற சமூக உள்கட்டமைப்புகளுக்கு மிக அருகில் பிரதான சாலையில் அமைந்துள்ளன். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து  இயங்கும் நேரத்திற்குள், எங்கள் திட்டங்களை முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளோம்.

 நிர்வாக இயக்குனரான திரு. ரஞ்சித் ரத்தோட் தலைமையிலான DRA Homes, ‘வாடிக்கையாளருக்கு உகந்த சேவையை வழங்கும் டெவலப்பர்’ என்ற அதன் தனித்துவமான  பண்புகளுக்காகவும்  ஒவ்வொரு முறையும் குறித்த  'நேரத்தில்' பணிகளை முடிப்பதில் சிறந்த நிறுவனமாக, மக்கள் மத்தியில்  புகழ் பெற்றுள்ளது. ஒவ்வொரு திட்டத்தினையும் வெற்றிகரமாக முடிப்பதில், சென்னை ரியல் எஸ்டேட் சந்தையின் தலைப்புச் செய்திகளில்  இடம்பெற்று வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களின்  நம்பகத்தன்மை மற்றும் 'குறித்த நேரத்தில் டெலிவரி மற்றும் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும்- முன்முயற்சிகள்' ஆகியவற்றில் தனித்துவமான நிறுவனமாக இருப்பதாக DRA Homes அனைவரும் பாராட்டி வருகின்றனர். கட்டுமான காலவரிசையை கச்சிதமாக கடைப்பிடிக்கும் நிறுவனமாக,   ரியல் எஸ்டேட் துறையில் முன்னொடியான நிறுவனமாக  DRA Homes பாரட்டுக்களை குவித்து வருகிறது.

DRA Homes உருவாக்கிய பல கட்டுமான  திட்டங்கள் சென்னையின் வரலாற்று அடையாளமாக உருவாகியுள்ளது. அதில், ட்ரூலிவ் ஒலிம்பஸ் (போரூர்), டிஆர்ஏ அஸ்காட் (ஆதம்பாக்கம்), டிஆர்ஏ 90 டிகிரி (கோவிலம்பாக்கம்), டக்ஷிடோ எலைட் (வேளச்சேரி), டக்ஷிடோ (வேளச்சேரி) மற்றும் பிரைஸ்டைன் பெவிலியன் (மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி) ஆகியவை அடங்கும். DRA Homes தற்போது சென்னை நகரம் முழுவதும் பல திட்டங்களின் வழியே  வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தை உருவாக்க தீவிரமாக நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.

டீஜய் அருணாசலம் நடிக்கும்*“ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக். வெளியீடு*

*டீஜய் அருணாசலம் நடிக்கும்* “ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.  வெளியீடு* *பிரபலங்கள் வெளியிட்ட  “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக...