Saturday, September 30, 2023

பிரபாஸை தொடர்ந்து 'கணணப்பா" படத்தில் இணைந்த மோகன் லால்!

பிரபாஸை தொடர்ந்து 'கணணப்பா" படத்தில் இணைந்த மோகன் லால்!

’கண்ணப்பா’ திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்! - மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல்

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்த ‘கண்ணப்பா’! 
 



தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ மிகப்பெரிய பொருட்ச் செலவில்  மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

மேலும், படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக விஷ்ணு மஞ்சு தனது குழுவினருடன் நியூசிலாந்து நாட்டில் முகாமிட்டுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்ககு அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில்,  படத்தின் புதிய தகவல் ஒன்றால் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது ‘கண்ணப்பா’ திரைப்படம். ஆம், இந்திய சினிமாவில் ’தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்று அழைக்கப்படும் நடிகர் மோகன்லால் இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

எதிர்பார்க்காத இந்த தகவலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படி தொடர்ந்து பல தகவல்கள் வெளியாவதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதோடு, இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் படத்தில் இருக்கிறது என்பதை அறிவதற்கான தேடலில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டார் ப்ளஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கி பாராட்டு பெற்ற இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு தலைசிறந்த திரை படைப்பாக உருவாகும் என்ற எதிரபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி இரைட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். ஒலி, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக உருவாக உள்ள ‘கண்ணப்பா’ சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக இருப்பதோடு, மக்கள் மனதில் நீங்கா இருக்கும் மிகப்பெரிய காவியமாகவும் உருவாகிறது.

Thanks and regards 
Saravanan N PRO
Haswath S  PRO

Rajparis Unveils New Identity, Shruti Haasan as Brand Face, and Blue Jewel at ECR

Rajparis Unveils New Identity, Shruti Haasan as Brand Face, and Blue Jewel at ECR   Announced its Golden Jubilee Vision of enter...