*சுதாகர் செருகூரியின் SLV சினிமாஸ் & எம் தேஜேஸ்வினி லெஜண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் வழங்க, பிரசாந்த் வர்மாவுடன் நந்தமுரி மோக்ஷக்ஞ்யா அறிமுகாமகும், பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.*
நந்தமுரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமுரி தாரக ராமராவின் பேரனும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள வரும், ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்ஷக்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மோக்ஷக்யாவை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த, பாலகிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் சரியான ஒரு கதையையும், மிக பிரபலமான இயக்குநரையும் தேடி வந்தனர். அவர்களின் தேடல், இறுதியாக அவர்களை பிரசாந்த் வர்மாவிடம் அழைத்துச் சென்றது, அவர் ஃபேண்டஸி கமர்ஷியல் அம்சங்களுடன் அருமையான பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதில், புகழ் பெற்றவர். பிரசாந்த் வர்மாவின் சமீபத்திய ஹனுமான் திரைப்படம், மிகப்பெரிய பிளாக்பஸ்டராக பான் இந்தியா வெற்றியைப் பெற்றது. அவர் மோக்ஷக்ஞ்யா அறிமுகத்தை மிகச்சிறப்பாக அரங்கேற்றவுள்ளார்.
ஒரு சமூக-ஃபேண்டஸி படத்தில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் இணைந்து, மோக்ஷக்யாவின் திரை அறிமுகத்தை நிகழ்த்துவது, ரசிகர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாலகிருஷ்ணாவின் நம்பிக்கை ஆகும்.
மோக்ஷக்ஞ்யா தனது அறிமுகப் படத்தில், சிறந்த நடிப்பை வழங்க வேண்டுமென்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். நந்தமுரி ரசிகர்கள் மற்றும் பொதுவான திரைப்பட ஆர்வலர்களை கவரும் வகையில், நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி பெற்று வருகிறார்.
மோக்ஷக்ஞ்யா பிறந்தநாளைக் கொண்டாடவும், அவரது அறிமுகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், படக்குழு அவரை ஸ்டைலான மற்றும் அதிநவீன அவதாரத்தில் காண்பிக்கும் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர்ந்த ஆளுமையுடன், நவநாகரீக உடையில் மோக்ஷக்ஞ்யா வசீகரிக்கும் புன்னகையுடன், நேர்த்தியாக நடப்பதை அந்த ஸ்டில்லில் காணலாம். போஸ்டர் மோக்ஷக்யாவின் நேர்த்தியான மற்றும் மெருகூட்டப்பட்ட தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
பிரசாந்த் வர்மா தனது ஹீரோக்களை, தனித்துவமான ஸ்டைலான வழிகளில் காட்சிப்படுத்துவதில் புகழ் பெற்றவர். இளம் நடிகரான மோக்ஷக்ஞ்யா தோற்றத்தையும், இதேபோன்ற புதுப்பாணியுடன் வழங்குவார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா கூறியதாவது…, மோக்ஷக்ஞ்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவது, மிகப்பெரிய கவுரவம் மற்றும் மிகப்பெரிய பொறுப்பு. என் மீதும் என் கதை மீதும் பாலகிருஷ்ணா வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த ஸ்கிரிப்ட் நமது இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்ட கருவைக்கொண்டு உருவாக்கப்பட்டது, இதிகாசம் சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகளின் தங்கச் சுரங்கமாகும். இதுவும் PVCU இன் ஒரு பகுதியாகும், மேலும் இது என் சினிமா யுனிவர்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி பேசுகையில், மோக்ஷக்ஞ்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம், SLV சினிமாஸில் எங்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. பிரசாந்த் வர்மா தனது அறிமுகத்திற்கு மோக்ஷக்ஞ்யாவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு அற்புதமான ஸ்கிரிப்டைக் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தைப் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளோம். இந்த திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.
மோக்ஷக்ஞ்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நடிகர்கள்: நந்தமுரி மோக்ஷக்ஞ்யா
தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : பிரசாந்த் வர்மா தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
பேனர்: SLV சினிமாஸ், லெஜண்ட் புரொடக்ஷன்ஸ்
வழங்குபவர்: எம் தேஜஸ்வினி நந்தமுரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்