*'குளோபல் ஸ்டார்' ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'எஸ் ஒய் ஜி' ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்*
'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி - கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி - பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'எஸ் ஒய் ஜி' (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் ('விருபாஷா ' மற்றும் 'BRO ' ) இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றினார். அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், அவருடைய பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சிய படைப்பான #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இவர்களின் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான 'ஹனுமான்' எனும் திரைப்படம் இந்தியா முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. இதன் காரணமாக இவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் இன்று 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் 'கார்னேஜ் 'எனும் பெயரில் இப்படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர்- சாய் துர்கா தேஜ் நடிப்பிற்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்கிறது.
எஸ் ஒய் ஜி (சம்பராலா ஏடி கட்டு ) என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இது கார்னேஜ் என வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் சக்திமிக்க.. தனித்துவமான குரல் வழியாக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் கதாநாயகனின் மர்மம் மற்றும் தோற்றத்தை காண்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. மேலும் அந்த குரல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, சாய் துர்கா தேஜின் அறிமுகத்திற்கான வலுவான களத்தையும் அமைக்கின்றன. அவர் ஒரு மரத் துண்டின் மீது அமர்ந்து மறக்க இயலாத வகையில் அறிமுகமாகிறார். மேலும் அந்த அற்புதமான காட்சியில் அவருடைய முதுகிலிருந்து ரத்தம் தோய்ந்த ஒரு சிறிய கத்தியை அகற்றி.. எதிரி மீது வீசி, தன் கோபத்தை கட்டவிழ்த்து விடுகிறார். இந்த டீசர் டீசரில் சாய் துர்கா தேஜின் சக்தி வாய்ந்த வசனங்கள்.. உச்சத்தை தொடுகிறது. மேலும் அவரது கடுமையான வாழ்க்கையை விட பெரிய இருப்பிற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துகிறது.
இந்த கதாபாத்திரத்திற்காக சாய் துர்கா தேஜ் தன்னுடைய உடல் அமைப்பை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். போர்வீரன் போன்ற உடலமைப்பை அடைவதற்கான அவரின் கடுமையான முயற்சியையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் அவர் பேசும் மொழி கூட ராயலசீமா பகுதியில் பேசும் மொழி நடையை கொண்டிருப்பதால் அவருடைய வசன உச்சரிப்பு தொடர்பான ஆளுமையையும் வெளிப்படுகிறது. மேலும் இது கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.
அறிமுக இயக்குநர் ரோகித் கேபி, சாய் துர்கா தேஜின் கதாபாத்திரத்தை வாழ்க்கையைக் காட்டிலும் ஒரு பிடிவாதமான பார்வையுடன் வடிவமைத்துள்ளார். உரையாடல்கள் கூர்மையாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமான தயாரிப்பின் அளவும், தரமும் பிரதிபலிக்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிச்சாமி பார்வையாளர்கள் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை கதையின் தன்மைக்காக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் பி. அஜ்னீஷ் லோக்நாத்தின் துடிப்பான இசை.. கதையை ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. படத் தொகுப்பம் நவீன பாணியில் அமைந்திருக்கிறது.
'எஸ் ஒய் ஜி '(சாம்பராலா ஏடி கட்டு) பட கார்னேஜ் வீடியோ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் இதனை திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெகபதி பாபு ,சாய் குமார் , ஸ்ரீகாந்த் , அனன்யா நாகல்லா ..
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ரோகித் கேபி
தயாரிப்பாளர்கள் : கே. நிரஞ்சன் ரெட்டி - சைதன்யா ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் : பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் பழனிச்சாமி
இசை : பி அஜ்னீஷ் லோகநாத்
படத்தொகுப்பு : நவீன் விஜய கிருஷ்ணா
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிகுடிகர்
ஆடை வடிவமைப்பாளர் : ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா
https://youtu.be/DjG8AFNupzI