Monday, December 23, 2024

சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், மருத்துவர் பைரவி செந்திலின், Dr.B 360 உலகின் முதல் டெர்மெடாலாஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டரை தொடங்கி வைத்தனர்.

*சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், மருத்துவர் பைரவி செந்திலின்,  Dr.B 360 உலகின் முதல் டெர்மெடாலாஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டரை தொடங்கி வைத்தனர்.* 

Dr.B 360 டெர்மெடாலாஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டர்  உலகின் முதல் தர அதிநவீன தோல் மருத்துவம் மற்றும் தனித்துவ தோல் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும்,  பிரத்யேகமான காஸ்மாரா தோல் பராமரிப்பு அரங்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  இது அழகியல் மற்றும் புதுமைகளில் சர்வதேச அனுபவத்தை வழங்குகிறது.

பத்திரிகையாளர், அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட அப்சரா ரெட்டி, டாக்டர் பைரவி செந்தில் எம்.டி., நிறுவனர் மற்றும் தோல் மருத்துவர், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  வருமான வரி ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், திரு.சுபம் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர தோல் சிகிச்சைக்கான, Dr.B 360  டெர்மடாலஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டரை திறந்து வைத்தனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி என்றும், தற்காலத்தில் இதுபோன்ற தோல் பராமரிப்பு நிலையங்கள் அவசியம் என்றும் கூறினார். மேலும் அழகு மற்றும் தோல் பராமரிப்பு நிலையங்களுக்கு நிறைய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்கிற எண்ணம் மக்களுக்கு தேவை இல்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது என்றும் கூறினார். 

பின்னர் பேசிய
அப்சரா ரெட்டி, அழகியல் என்பது  வாய்ப்புகளையும் சுயமரியாதையையும் வடிவமைக்கும் சகாப்தத்தில் நாம் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஒருவரின்  தோற்றத்தின் பொருளாதாரம்  நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது என்று கூறிய அவர்,  காஸ்மாரா லவுஞ்ச் போன்ற இடங்கள் வெறும் அழகியல் பற்றியவை அல்ல என்றும்  அவை நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும், ஆழமான மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிப்பதன் மூலமும் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன என்றும் கூறினார். 

மருத்துவர் பைரவி செந்தில் உரையாற்றும்போது,  தோல் ஆரோக்கியம் ஒரு ஆடம்பரம் அல்ல என்றும்,  இது ஒட்டுமொத்த நல்வாழ்வின் இன்றியமையாத பகுதி என்றும் கூறினார்.  அறிவியல், கவனிப்பு மற்றும் அக்கறையுடன் கூடிய சிறப்பு சிகிச்சை ஆகியவற்றை ஒன்றாகத் தரும் அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை காஸ்மாரா லவுஞ்ச் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  அழகியல் புதுமைகளை சந்திக்கும் தகுதியான இடமாக விளங்கும் சென்னையின் தகுதியான தோல் சிகிச்சை மையம் இதுதான் என்றும் தெரிவித்தார். 

காஸ்மாராவின் உலகப் புகழ்பெற்ற தோல் பராமரிப்பின் உருமாறும் சக்தியை மேம்பட்ட தோல்-ஒப்பனை தீர்வுகள் மற்றும் ஆல்கா பீல்-ஆஃப் முக பராமரிப்பு உள்ளிட்டவை மூலம் அனுபவிக்க முடியும்.  Dr.B 360 டெர்மடாலஜி எக்ஸ்பீரியன்ஷியல் சென்டர் தோல் ஆரோக்கியத்தை புதுமை மற்றும் தனித்துவத்துடன் மறுவரையறை செய்கிறது.

Dr.B 360 டெர்மட்டாலஜி மையம் பழைய எண்.249A, புதிய எண்.326 A, அம்புஜம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 இல் அமைந்துள்ளது

FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal*

*FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal* FICCI FLO Chennai, the women’s wing of the Feder...