Sunday, January 5, 2025

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !!
*தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த்  தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.  படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள்  பரபரப்பாக நடந்து வருகிறது.

கதைச்சுருக்கம் : நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் .இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் . நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி  தள்ளிவிட்ட  விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர் R முருகானந்த் கூறுகையில்..
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது... ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும்... ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும்... படித்தவனோ பாமரனோ... அரசனோ ஆண்டியோ... யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும்... இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும்.. வாழ்வும் சிறக்கும்.. இதைத்தான் பூர்வீகம் என்ற இந்தத் திரைப்படத்தில் வெகு ஆழமாக கூறியுள்ளோம் என்றார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர் .

இப்படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக மியாஶ்ரீ நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மாயவரம், தஞ்சாவூர், அரியலூர் , சென்னை மற்றும் திருவள்ளூர் அதனைச்  சுற்றியுள்ள பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டை மிக வித்தியாசமான மண்ணின் மைந்தர்கள்   விவசாயிகளை வைத்து, படக்குழுவினர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்:

தயாரிப்பு - பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி
தயாரிப்பாளர் - டாக்டர் R முருகானந்த்
எழுத்து, இயக்கம் - G. கிருஷ்ணன் Df Tech
ஒளிப்பதிவு - விஜய் மோகன் Df Tech
இசை - சாணக்யா
படத்தொகுப்பு - சங்கர் K
பாடலாசிரியர் - ஏகாதசி
கலை இயக்கம் - செல்லம் ஜெயசீலன்
பாடகர்கள் - சாய் விக்னேஷ், மது ஐயர், K.பார்த்திபன், G.அமிர்தவர்ஷினி, டாக்டர் R முருகானந்த்
நிர்வாக தயாரிப்பாளர் - K.சந்தோஷ்
மக்கள் தொடர்பு – செல்வரகு (Vistas Media)

சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது , "கண்நீரா" இசை வெளியீட்டு விழாவில் பேரரசு !!

"கண்நீரா"  திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது ,  "கண்நீரா"  இசை வெளியீட்டு விழாவில் பேரரசு !!

சின்னப்படங்களுக்கு 40, 50,70 என டிக்கெட் விலை வையுங்கள். "கண்நீரா"  இசை வெளியீட்டு விழாவில்,  தயாரிப்பாளர் கே ராஜன்  !!

சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது. "கண்நீரா"  இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4  Production  தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள  படம் " கண்நீரா ". மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,   பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்....

கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது...

இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.


நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது...

கண்நீரா படக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள். கதாசிரியர் பேசும்போது, இயக்குநருக்குத் தனியாக நன்றி சொன்னார். இயக்குநர் அவருடைய கணவர் தான், ஆனால் யாரோ போல அவர் பேசி நன்றி சொன்னது ஆச்சரியம் தான்.  இருவரும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இடையில் குழந்தையையும் உருவாக்கி இருக்கிறார்கள், இந்த படத்தை முடித்துவிட்டு, அவர்கள் அடுத்த குழந்தைக்கான வேலையைப் பார்க்கட்டும்.  வாழ்த்துக்கள்.  முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழா நடத்தும்போது, இரண்டாவது பாகத்தையும் முடித்து, மிகத் தயாராக வைத்துள்ளார்கள். அவர்களின் வேகத்திற்கு மூன்றாம் பாகமே எடுக்கலாம். மலேசியாவில் படத்தை எடுத்து, தென்னிந்தியாவில் ரிலீஸ் செய்கிறார்கள்  இங்குள்ள அனைத்து சங்கங்களும் உங்களை வரவேற்று ஆதரவு தருவார்கள், வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.


உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் ஹரி உத்ரா  பேசியதாவது....

உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் செய்யும் மூன்றாவது படம் இது. இந்த வருடத்தில் முதல் படம். மலேசியாவில் எடுத்த படத்தை, இங்கு பெரிய அளவில் வெளியிடுகிறோம். More 4  Production மிகச்சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் எடுத்ததால், இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பல விசயங்களை மாற்றியுள்ளோம். முக்கியமான இப்படத்தின் இசை, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இப்படம் மிகப் புதுமையாக இருக்க, இயக்குநர் கதிரவென் தான் காரணம். அவர் நாங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தந்தார். படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, ஒவ்வொன்றாக  வெளியாகும்.  இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் கதிரவென் பேசியதாவது....

எங்களுக்கு ஆதரவு தந்து, இங்கு இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.  இவர்களுடன் அமர்ந்திருப்பதே மிக மகிழ்ச்சியாக உள்ளது.  மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் உத்ரா சாருக்கு என் நன்றிகள். என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார்.  மலேசியாவிலிருந்தபோது,  இந்த கதையை என்னிடம் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தபோது, என் மனைவி கர்ப்பமானார், ஆனால் அப்போது கூட கண்நீரா படம் தான், என் முதல் குழந்தை என்று சொன்னார்.  அப்போதே இந்த படம்  பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார். ஒரு  மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை என் மனைவி இயக்க வேண்டியது, அவரிடம் சொன்ன போது, இரண்டாம் பாகத்திற்குக் கதை இருப்பதாகச் சொன்னார், அந்தக்கதையும் மிக அருமையாக இருந்தது. அந்தப்படத்தை மனைவி தான் இயக்கியுள்ளார். அந்தப்படத்தையும் முடித்து விட்டோம். நீங்கள் தான் முழு ஆதரவைத் தர வேண்டும்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது...

கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர்  இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார். சாதாரணமாக குடும்பங்களில் திரைப்படத்திற்கு எதிராகத் தான் பேசுவார்கள், ஆனால் இப்படத்தில் அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக நின்று, படத்தை உருவாக்கியுள்ளார். இருவருக்கும் என் மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரொமான்ஸ் படங்கள் வருவது இப்போது குறைந்து விட்டது. அந்த  வகையில் இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும்.  சின்ன படங்கள் ஓடவில்லை என சொல்கிறார்கள், சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். இதைக் கண்டிப்பாகப் பேசித் தான் தீர்க்க  வேண்டும். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. சின்னப்படங்களுக்கு மக்களை வரவைக்க, என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது. கார் பார்க்கிங்க் கொள்ளை இப்படி இருந்தால், மக்கள் எப்படி வருவார்கள். நம் மீது குறை வைத்துக்கொண்டு மக்களைக் குறை சொல்லக்கூடாது. இவர்கள் பல கஷ்டப்பட்டு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது.....

கண்நீரா படக்குழு குடும்பமாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். கௌசல்யா நவரத்தினம் குழந்தையை மட்டுமல்ல, இந்தப்படத்தையும் கருவாகச் சுமந்துள்ளார். கணவனுக்கு உறுதுணையாக இருந்து படத்தை இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பெண்கள் அவ்வளவு சாதாரணமாக சினிமாவுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் கதிரவெனுக்கு பின்னால் தூணாக கௌசல்யா இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இப்படம் கதிரவென் ஜெயிப்பார். மலேசியாவில் இப்படத்தை எடுத்து  தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும். கடந்த  10, 15 ஆண்டுகளாகத் தமிழகத்தில், இந்தியா முழுக்க பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இப்போது கூட ஒரு கல்லூரியில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கம் இது போன்ற விசயங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பைப் பற்றி அதன் அவசியம் பற்றி பேசியிருக்கும் இந்த கண்நீரா படம் பெரிய வெற்றி பெறட்டும். சினிமா சில நேரங்களில் நன்றாக இருக்கிறது பல நேரங்களில் நன்றாக இல்லை. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி நட்டம். மக்கள் சின்னப்படங்களுக்கு செலவு செய்வதில்லை. படம் எடுக்க முடிகிறது ஆனால் வியாபாரம் இல்லை. க்யூபிற்கு, விளம்பரத்துக்குப் பணம் இல்லாமல் 200 படங்கள் நிற்கிறது. சின்னப்படங்களுக்கு திரையரங்குகளில் தனி விலை வையுங்கள். சின்னப்படங்களுக்கு 40, 50,70 என வையுங்கள். அப்போது மக்கள் வருவார்கள். சின்னப்படங்கள் நன்றாக இருந்தால் ஓடுகிறது. பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் அதிகம் ஜெயிக்கிறது. அதன் வெற்றிக்குக் காரணமாகப் பத்திரிக்கைகள் இருக்கிறது. சின்னப்படங்களுக்கு கொஞ்சம் நல்ல விமர்சனங்கள் தாருங்கள். மலேசியாவிலிருந்து நம்பி வந்துள்ள இந்த படக்குழு ஜெயிக்க வேண்டும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது….

என்னுடைய முதல் வாழ்த்து, இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் பாடல் மிக நன்றாக இருந்தது. இயக்குநருக்கு முதல் படம் போலவே இல்லை. முதல் படத்தில் பாடலெழுதிக் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள் கதிரவென், கௌசல்யா தம்பதி. அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். என் மனைவி எழுதிய கதை தான் எஜமான்.  பொன்னுமனி அவர் எழுதிய கதை தான். அது போல் உங்கள் மனைவி எழுதிய கதையும் வெற்றி பெறும். டிரெய்லர் மிக அற்புதமாக இருக்கிறது. கண்ணெல்லாம் நீராக சுமந்து கொண்டு இருக்கிறது, விட்டுக்கொடுத்தலைப் பேசுகிறது இந்தப்படம். மலேசியா தமிழர்களுக்கு நாம் எப்போதும் அன்பும் ஆதரவும் காட்டியே வருகிறோம். மலேசியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்குத் தனி அன்பு உண்டு. அதே போல் மக்களும் உங்கள் படத்தை நேசிப்பார்கள். மலேசியாவில் இப்படத்தை ரசித்ததாகச் சொன்னீர்கள் அதே போல் கண்டிப்பாக மக்கள் இங்கும் ரசிப்பார்கள். நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சினிமா  இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் திரையரங்குகளில் நம்மை வைத்துச் செய்கிறார்கள். தலைவர் எம் ஜி ஆர் ஆட்சியில் சினிமாவில் பிரச்சனையே இருந்ததில்லை. சினிமாவும்  அரசியலும் கலந்துதான் பிரச்சனை.  சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது. அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள் நன்றி என்றார்.


இந்த படத்தை கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை எழுதி, இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.

ஒளிப்பதிவு  -  ஏகணேஷ் நாயர் 
இசை - ஹரிமாறன் 
பாடல்கள் - கௌசல்யா.N 
கலை - குதூஸ் சங்கிலிஷா 
நடனம் - மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்
தயாரிப்பு - உத்ரா புரொடக்சன்ஸ் S.ஹரி உத்ரா - More 4  Production

Saturday, January 4, 2025

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும்  தண்டேல் படத்திலிருந்து,  நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் - வெளியிடப்பட்டது !!

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது.  ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் "புஜ்ஜி தல்லி" ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் "நமோ நம சிவாய" பாடல் வீடியோ  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு  ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது.  பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மனதை உருக்கும் இசையில், ஆன்மாவைக் கிளறி, கேட்பவருக்குள் நெருப்பை மூட்டுகின்றது. இந்தப் பாடல், நம் உணர்வோடு கலந்து, உடல் முழுவதும் எதிரொலிக்கிறது, மனதுக்குள் மகிழ்ச்சி மற்றும் பக்தியை உருவாக்குகிறது. இப்பாடல் பாரம்பரிய ஒலிகளை நவீன இசையுடன் தடையின்றி கலக்கிறது. ஜோனவித்துலா எழுதிய பாடல் வரிகள், சிவனின் சர்வ வல்லமை மற்றும் மாயத்தன்மையின் சாரத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன, அதே சமயம் மகாலிங்கம்  மற்றும் ஹரிப்ரியா தங்களது ஆத்மார்த்தமான குரல்களால் அசத்தியுள்ளனர்.  

முன்னதாக லவ் ஸ்டோரி படத்தில் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மூலம், ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி, இந்த பாடலில் மிக எளிதாக நம்மை மயக்குகிறார்கள். நாக சைதன்யாவின் நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பு,  சாய் பல்லவியின் நளினம் மற்றும் வசீகரிக்கும் பாவனைகள் நம்மை ஈர்க்கிறது.

இப்பாடலில் சேகர் மாஸ்டரின் நடன அமைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும், இந்த நடன அமைப்பு,  பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது. மிக அழகான நடன அமைப்பு, பின்னணி அரங்குகள் என அனைத்தும் , சிவபெருமானுக்கு ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது

மொத்தத்தில், நமோ நம சிவாய பாடல், கலை மற்றும் ஆன்மீக இணைப்பின் மூலம் சிவபெருமானின் மகிமையைக் கொண்டாடுகிறது. இந்த பாடல் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சார்ட்பஸ்டர்களில் ஒன்றாக மாறும்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணியாற்றியுள்ளார், ஸ்ரீநாகேந்திர தங்காலா கலை இயக்கம் செய்துள்ளார். 

"தண்டேல்"  படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி 

தொழில்நுட்பக் குழு: 

எழுத்து இயக்கம் : சந்து மொண்டேடி வழங்குபவர்: அல்லு அரவிந்த் 

தயாரிப்பாளர்: பன்னி வாஸ் 

பேனர்: கீதா ஆர்ட்ஸ் 

இசை: தேவி ஸ்ரீ பிரசாத் 

ஒளிப்பதிவு : ஷாம்தத் 

எடிட்டர்: நவீன் நூலி 

கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

Friday, January 3, 2025

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

*’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*


XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்பு மேம், அதிதி என படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆகாஷின் அறிமுகப் படம் இது. நிச்சயம் அனைவரும் வாழ்த்துவீர்கள் என நம்புகிறேன். படத்தில் யுவனின் இசை இன்னொரு ஹீரோ. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “’மாஸ்டர்’ தந்து மாஸ்டராக விளங்கி வருபவர் சேவியர் பிரிட்டோ. அவரின் மகள் சிநேகா இந்தத் தொழிலின் அத்தனை நுணுக்கங்களையும் கற்று ‘நேசிப்பாயா’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மூலம் நல்ல கதாநாயகனாக ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். யுவனின் இசை நிச்சயம் இளைஞர்களைக் கவரும். வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறார் விஷ்ணு வர்தன். நிச்சயம் படம் வெற்றியடையும்”.

நடிகர் சரத்குமார், “முரளி எனக்கு நல்ல நண்பர். அவரின் மகன் படத்தின் விழாவிற்கு வந்திருக்கிறேன். படத்திலும் முக்கியமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யுவன் இசையில் முதல் முறையாக நடித்திருக்கிறேன். ஆகாஷூக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. ‘நேசிப்பாயா’ படத்தை நிச்சயம் நீங்களும் நேசிப்பீர்கள்” என்றார். 

இயக்குநர் இளன், “’நேசிப்பாயா’ படத்தை நான் பார்த்துவிட்டேன். அருமையாக வந்திருக்கிறது. ஆகாஷிடம் இயல்பாகவே ஒரு இன்னொசண்ட் இருக்கிறது. அது இந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தி வந்திருக்கிறது. அதிதியும் நன்றாக நடித்திருக்கிறார். பல லொகேஷனில் ஸ்டைலிஷாக விஷ்ணு சார் இயக்கி இருக்கிறார். விஷ்ணு- யுவன் காம்போ மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் சிநேகா மற்றும் பிரிட்டோ சாரும் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்”

கலை இயக்குநர் சரவண வசந்த், “விஷ்ணு சாருடன் பணிபுரிந்தது நல்ல கற்றல் அனுபவம். படம் எப்படி வர வேண்டும் என்பதை அவர் தெளிவாக திட்டமிட்டிருந்தார். ஆகாஷ், அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்”.

காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன், “இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் அதர்வா முரளி, “’நேசிப்பாயா’ படம் எங்களுக்கு நெருக்கமான படம். ஆகாஷின் அறிமுகப் படம் இது. இதற்காக பிரிட்டோ சார் மற்றும் சிநேகாவுக்கு நன்றி. கதைக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார் பிரிட்டோ சார். விஷ்ணு வர்தனின் ஹீரோ ஆகாஷ் என்பது எங்களுக்கு பெருமையான விஷயம். அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார். என் முதல் படத்தில் நடந்த லக் என் தம்பிக்கும் அவரின் முதல் படத்தில் நடந்திருக்கிறது. ஆமாம்! ஆகாஷின் முதல் படத்திற்கும் யுவன் தான் இசை. நிச்சயம் படம் வெற்றி பெறும். விழாவிற்கு வருகை தந்திருக்கும் சிவகார்த்திகேயன் பிரதருக்கும் சரத் சாருக்கும் நன்றி. ஜனவரி 14 அன்று படம் வெளியாவது மகிழ்ச்சி. மகன்களின் கனவை தன் கனவாக நினைக்கும் அம்மாக்களில் எங்கள் அம்மாவும் ஒருவர். அவரது வாழ்த்து நிச்சயம் ஆகாஷூக்கு உண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!”.

நடிகை அதிதி ஷங்கர், “இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணு வர்தன் சாருக்காகதான் கதை கூட கேட்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். விஷ்ணு சாரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். ’விருமன்’ படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் போது ஒருநாளுக்கு முன்பாக எனக்கு காட்சிகளை பிடிஎஃப்பில் அனுப்புவார்கள். விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு சார். நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் சார் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம்”.

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, “சிநேகாவுக்கு அவரது கணவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது கனவு ‘நேசிப்பாயா’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. என் நண்பர்கள்தான் விஷ்ணுவும் அனுவும். விஷ்ணுவின் ஸ்டைலிஷான இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாகிறார். அதிதியும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொங்கலில் வெளியாகும் இந்தப் படத்திற்கு வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “நாங்கள் எல்லோரும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை கேட்டதில் இருந்து நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகாஷ், அதிதி அழகாக நடித்திருக்கிறார்கள். நானும் விஷ்ணுவும் பள்ளிக் காலத்தில் இருந்தே ஒன்றாக பணிபுரிகிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி”.

இயக்குநர் விஷ்ணு வர்தன், "சரத்குமார் சார், அழைத்ததும் வருவதற்கு உடனே ஒத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் சார் இருவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தின் ஜானர் இதற்கு முன்பு நான் முயற்சி செய்யாதது. அதனால், நீங்கள் எப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த பிரிட்டோ சார் மற்றும் சிநேகா பிரிட்டோவுக்கு நன்றி. ஆகாஷ் முதல் நாளிலிருந்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சரத் சார், குஷ்பு மேம், கல்கி, ஸ்ரீகர் சார் என இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அழைப்பை ஏற்று வந்த விஜய் ஆண்டனி சாருக்கும் நன்றி. அதிதியின் நடிப்பு என் இதயத்தை தொட்டுவிட்டது. யுவனின் இசை என் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 

நடிகர் ஆகாஷ் முரளி, " நிகழ்வு முழுவதும் இருந்து எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அங்கிள் மற்றும் சிநேகா பிரிட்டோவிற்கு நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்த என் குரு விஷ்ணுவர்தன் சாருக்கு நன்றி. அற்புதமான அனுபவமாக இந்த படம் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான பாடல்கள் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. அதிதி, சரத் சார், கல்கி எல்லோருக்கும் நன்றி. அண்ணா, அம்மா, அக்கா எல்லோருக்கும் நன்றி. என் தாத்தாவும் அப்பாவும் என்னையும் என் அண்ணனையும் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள். படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள் ". 

நடிகர் சிவகார்த்திகேயன், "எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் சார் தான். பிரிட்டோ சார் மிக நல்ல மனிதர். நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள். என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் சார் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு சார் இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் சார் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் சார். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றார்.

டீஜய் அருணாசலம் நடிக்கும்*“ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக். வெளியீடு*

*டீஜய் அருணாசலம் நடிக்கும்*
“ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.  வெளியீடு*

*பிரபலங்கள் வெளியிட்ட  “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* 
 
“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது.  

அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் போன்ற பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது.  

இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் நடித்துள்ளனர் மற்றும் ஆதித்யா கதிர் தங்கதுரை நகைச்சுவையில் அசத்தியுள்ளனர்.  

இந்த கதை உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு-ஆந்திர எல்லையான சித்தூரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*#NakshBegins❤️ : Actor Sakshi Agarwal Marries Longtime Love Navneet in a Joyous Goa Ceremony*

*#NakshBegins❤️ : Actor Sakshi Agarwal Marries Longtime Love Navneet in a Joyous Goa Ceremony*

Actor Sakshi Agarwal began 2025 with a heartwarming milestone—marrying her childhood love, Navneet, on January 2nd at the breathtaking ITC Grand Goa. The couple’s wedding was a heartfelt celebration, bringing together love, tradition, and a lifetime of cherished memories.  

Sakshi looked every bit the star in a custom red sari adorned with gold embroidery and paired with an intricately designed corset blouse. Her heritage gold jewelry completed the look, radiating elegance and timeless beauty. Navneet, her perfect counterpart, looked dapper in a tailored suit, adding a modern twist to the day’s traditional essence.  

The celebrations continued into the evening, where Sakshi stunned in a pink lehenga paired with green Kundan jewelry, and Navneet donned a mint green sherwani, complementing her style flawlessly. The couple exchanged heartfelt vows, promising to build a future filled with love, dreams, and endless support.  

Sharing her excitement, Sakshi said, “This day feels like a dream. Marrying Navneet, my best friend and soulmate, is the start of our forever story.” Navneet added, “Sakshi completes my life, and today marks the beginning of a lifetime of love.”

Fans can catch glimpses of the wedding on Sakshi’s Instagram account, @iamsakshiagarwal, as she embarks on this beautiful new journey with Navneet.

BIOSCOPE - திரைவிமர்சனம்

 சங்ககிரி ராஜ்குமாரின் பயாஸ்கோப் சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர்களின் அடங்காத ஆவிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. ராஜ்குமார் தனது முந்தைய படைப்பான வெங்கயத்திலிருந்து உத்வேகம் கொண்டு, திரைப்படத் தயாரிப்பின் சோதனைகள் மற்றும் வெற்றிகள் பற்றிய அழுத்தமான மெட்டா வர்ணனையை வடிவமைத்துள்ளார். தமிழ்நாட்டின் கிராமப்புற பின்னணிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இப்படம், இண்டி சினிமா உலகில் ஒரு நெருக்கமான பார்வையை வழங்குகிறது, அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்ளும் இயக்குனரின் பின்னடைவையும் சமயோசிதத்தையும் காட்டுகிறது.

அதன் மையத்தில், பயாஸ்கோப் என்பது நம்பகத்தன்மைக்கான ஒரு குறியீடாகும். முன் நடிப்பு அனுபவம் இல்லாத உள்ளூர் கிராமவாசிகளை நடிக்க வைப்பதன் மூலம், படம் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மூல மற்றும் வடிகட்டப்படாத யதார்த்தத்தை அடைகிறது. இந்தத் தேர்வு கதையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பயன்படுத்தப்படாத திறமைகளின் மீது ஒரு கவனத்தை பிரகாசிக்கச் செய்கிறது, படைப்பாற்றல் பெரும்பாலும் பிரதான சினிமாவின் எல்லைக்கு வெளியே செழித்து வளர்கிறது என்பதை நினைவூட்டுகிறது.

சுதந்திரமான திரைப்படத் தயாரிப்பின் பன்முகத் தடைகளை இந்தத் திரைப்படம் ஆராய்கிறது—நிதியைப் பாதுகாப்பது மற்றும் ஒரு குழுவை ஒன்று சேர்ப்பது முதல் விநியோகத்தின் சிக்கலான பிரமைக்கு வழிவகுப்பது வரை. ராஜ்குமாரின் தனிப்பட்ட பயணம், போராட்டம் மற்றும் விடாமுயற்சியின் தருணங்களால் உட்செலுத்தப்பட்டது, குறுகிய பட்ஜெட்டில் பெரிய கனவு காணத் துணிந்த எவருடனும் ஆழமாக எதிரொலிக்கிறது. தெளிவான கதைசொல்லல் மூலம், ஒருவரின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இயக்குனர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார், ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கு சுரண்டலுக்கு எதிராக தங்கள் படைப்பைப் பாதுகாக்க ஒரு எச்சரிக்கைக் கதையை வழங்குகிறார்.

வெங்கயத்தின் சமூக உணர்வுப்பூர்வமான கருப்பொருள்களைத் தொடர்ந்து, பயாஸ்கோப் தனிப்பட்ட முறையில் வேரூன்றி இருக்கும் அதே வேளையில் பரந்த சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைக்கிறது. பொழுதுபோக்கிற்கும் உள்நோக்கத்திற்கும் ஒரு ஊடகமாக சினிமாவைப் பயன்படுத்தி, அர்த்தமுள்ள கதைசொல்லலில் இயக்குனரின் இடைவிடாத நாட்டத்தை இது பிரதிபலிக்கிறது.

பயாஸ்கோப்பை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக ஆக்குவது அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிரான படைப்பாற்றலைக் கொண்டாடுவதாகும். வரம்புகளை வாய்ப்புகளாக மாற்றும் ராஜ்குமாரின் திறமை அவரது புத்திசாலித்தனத்திற்கும் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்திற்கும் சான்றாகும். அவரது பயணம், உறுதியுடனும் மன உறுதியுடனும், தங்கள் கதைகளை உயிர்ப்பிக்க விரும்பும் எண்ணற்ற கனவு காண்பவர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.

முடிவில், பயாஸ்கோப் என்பது ஒரு திரைப்படம் என்பதைவிட மேலானது - இது கதை சொல்லும் கலையின் கொண்டாட்டம், இண்டி சினிமாவுக்கு ஒரு காதல் கடிதம் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். அதன் உண்மையான விவரிப்பு மற்றும் இதயப்பூர்வமான செயல்திறனுடன், இது பார்வையாளர்களின் மீது ஒரு அழியாத அடையாளத்தை விட்டு, கலையின் மாற்றும் சக்தியை நமக்கு நினைவூட்டுகிறது.

SEESAW - திரைவிமர்சனம்


 குணா சுப்ரமணியம் இயக்கிய “சீசா”, நட்ராஜன் சுப்ரமணியன், பதின் குமார் மற்றும் மூத்த நடிகர் நிழல்கள் ரவி உட்பட ஒரு விதிவிலக்கான நடிகர்களுடன் ஒரு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. படத்தின் தயாரிப்புக் குழு, டாக்டர். கே. செந்தில்வேலன் தயாரிப்பாளராகவும், என். சுகுணா ராமு இணை தயாரிப்பாளராகவும், ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்த தரத்தை உறுதி செய்துள்ளது.

எஸ்.ஆர். ஆனந்தகுமார் இணை இயக்குநராக இணைகிறார், கதை சொல்லலுக்கு ஆழம் சேர்க்கிறார். மணிவண்ணன் மற்றும் பெருமாளின் ஒளிப்பதிவு படத்தின் பிடிமான மனநிலையை கணிசமாக அதிகரிக்கிறது, அதன் சஸ்பென்ஸ் சூழலை திறமையாக படம்பிடிக்கிறது. வில்சி ஜே. சசியின் எடிட்டிங் கூர்மையாகவும், வேகத்துடனும் உள்ளது, கதை ஒரு மந்தமான தருணமும் இல்லாமல் தடையின்றி ஓடுவதை உறுதி செய்கிறது. காட்சியமைப்புகளை நிறைவு செய்வது சரண் குமாரின் துடிப்பான இசை, இது கதையின் பதற்றத்தையும் உணர்ச்சிகரமான தாக்கத்தையும் தீவிரப்படுத்துகிறது.

சதி இரண்டு கட்டாயக் கருப்பொருள்களைக் கையாளுகிறது-ஆன்லைன் கேமிங் அடிமையாதல் மற்றும் எம்பாமிங் செய்யும் கவர்ச்சிகரமான செயல்முறை. ஆன்லைன் கேமிங், தீவிரமான நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், வாழ்க்கையை எவ்வாறு அழித்து, கொலை உள்ளிட்ட அவநம்பிக்கையான செயல்களைச் செய்ய சிலரைத் தள்ளும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதற்கு இணையாக, இது எம்பாமிங் என்ற சிக்கலான சடங்கிற்கு பார்வையாளர்களை அறிமுகப்படுத்துகிறது, இது பிரிந்தவர்களுக்கு கண்ணியமான பிரியாவிடையை அன்பானவர்கள் அனுமதிக்கும் ஒரு கடுமையான செயல்முறையாகும். இந்த தனித்துவமான மைய புள்ளிகள் சதி மற்றும் அசல் தன்மையின் அடுக்குகளை சேர்க்கின்றன, பார்வையாளர்களை தொடக்கத்திலிருந்து இறுதி வரை கவர்ந்திழுக்கும்.

படத்தின் மையத்தில் செட்டிபாளையத்தில் பணிபுரியும் அர்ப்பணிப்புள்ள போலீஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் முகிலன், ஒரு குழப்பமான கொலை வழக்கைத் தீர்க்கும் பணியில் இருக்கிறார். ஒரு பணக்கார தொழிலதிபர் ஆதவன் வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வேலைக்காரன் இறந்து கிடந்தான். ஆதவனும் அவரது மனைவி மாளவிகாவும் விவரிக்க முடியாத வகையில் மறைந்துவிட, விடை தெரியாத கேள்விகளை விட்டுச் செல்வதால் சதி அடர்த்தியாகிறது. முகிலனின் விசாரணை விரிவடையும் போது, ​​அவர் மறைக்கப்பட்ட நோக்கங்கள், இருண்ட ரகசியங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளின் வலையில் சிக்கிக் கொள்கிறார். உண்மையைத் தேடும் அவரது இடைவிடாத நாட்டம் இந்த மனநோய்-த்ரில்லரின் முதுகெலும்பாக அமைகிறது.

சீசா அதன் தனித்துவமான கதைக்களம், இறுக்கமான திரைக்கதை மற்றும் அற்புதமான நடிப்பிற்காக தனித்து நிற்கிறது, இது த்ரில்லர் ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதன் தீவிரமான கதைக்களம் மற்றும் இருக்கையின் விளிம்பு தருணங்களுடன், இது ஒரு மறக்க முடியாத சினிமா சவாரிக்கு உறுதியளிக்கிறது.

XTREME - திரைவிமர்சனம்

கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடத்தில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, விசாரணையைத் தூண்டியது, இது அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. “எக்ஸ்ட்ரீம்” சஸ்பென்ஸை சமூகப் பொருத்தமான செய்தியுடன் இணைத்து, கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்த்து, இன்றைய சிக்கலான சமூகத்தில் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைக் கதையை வழங்குகிறது.

ராஜவேல் கிருஷ்ணா இயக்கிய, "எக்ஸ்ட்ரீம்" நவீன சமுதாயத்தின் இருண்ட அம்சங்களுக்குள் நுழைகிறது. சில நடத்தைகள்-பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என நிராகரிக்கப்படும்-எவ்வாறு கவனக்குறைவாக அபாயங்களை அதிகரிக்கலாம் என்பதை படம் ஆராய்கிறது. ஆத்திரமூட்டும் சமூக ஊடக நடத்தை மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு மற்றும் சவால்களை கதை பிரதிபலிக்கிறது.

ராஜவேல் கிருஷ்ணா அர்த்தமுள்ள வர்ணனையுடன் வணிக முறையீட்டை சமநிலைப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார். துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் தனிப்பட்ட பொறுப்புக்கூறல் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களைக் கையாள்வதன் மூலம், அவர் பொழுதுபோக்கு மட்டுமல்ல, பிரதிபலிப்பையும் தூண்டும் ஒரு கதையை உருவாக்குகிறார்.

"எக்ஸ்ட்ரீம்" ஒரு த்ரில்லரை விட அதிகம்; இது ஒரு விழிப்புணர்வு அழைப்பு, சமூக இயக்கவியல் மற்றும் தனிப்பட்ட பொறுப்பு பற்றி சிந்திக்க பார்வையாளர்களை வலியுறுத்துகிறது. கவர்ச்சிகரமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் திரைப்படம், அதன் அழுத்தமான நடிப்பு மற்றும் சக்திவாய்ந்த செய்திக்கு இது ஒரு பார்வைக்கு தகுதியானது. த்ரில்லர் ஆர்வலர்கள் மற்றும் அர்த்தமுள்ள சினிமாவை விரும்புபவர்களுக்கு ஏற்றது, "எக்ஸ்ட்ரீம்" ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்கிறது.
 

Thursday, January 2, 2025

இன்று தேதி வெளியாகிறது டோவினோ தாமஸ் - த்ரிஷா நடிக்கும் IDENTITY!

இன்று தேதி வெளியாகிறது  டோவினோ தாமஸ் - த்ரிஷா நடிக்கும் IDENTITY!  

ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு, டோவினோ - த்ரிஷா - வினய் ராய் நடித்துள்ள "IDENTITY" படம் ஜனவரி 2, 2025 இன்று வெளியாகிறது.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ஃபாரென்சிக் படத்திற்குப் பிறகு, இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோருடன் டோவினோ தாமஸ் இணைந்திருக்கும் படம் தான் IDENTITY. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் ஜனவரி 2, 2025 இன்று திரையரங்குகளில் வெளியாகியது. ராகம் மூவிஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் மூலம் சி.ஜே.ராய் IDENTITY படத்தை தயாரித்துள்ளனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் த்ரிஷா முதன்முறையாக இந்த படத்தில் டோவினோ தாமஸ் உடம் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். IDENTITY படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது, மேலும் படம் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரில் திரையரங்குகளில் வரவுள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

IDENTITY படத்தின் இயக்கம் மற்றும் திரைக்கதையை அகில் பால் மற்றும் அனஸ் கான் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவும், சமன் சாக்கோ படத்தொகுப்பும் செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 2 இன்று முதல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது!

நிர்வாக தயாரிப்பாளர்கள்: நிதின் குமார், பிரதீப் மூலேதரா
தயாரிப்பு வடிவமைப்பு: அனீஷ் நாடோடி
இணை தயாரிப்பாளர்கள்: ஜி. பிந்து ராணி மல்லையாத், கார்த்திக் மல்லையாத், கிருஷ்ணா மல்லையாத்
நடனம்: யானிக் பென், பீனிக்ஸ் பிரபு
ஒலிக்கலவை: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்
ஒலி வடிவமைப்பு: ஒத்திசைவு சினிமா
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர், ஆடை: காயத்திரி கிஷோர் மாலினி,

சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

*சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு* 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். 

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். 

விரைவில் இப்படத்தின்  வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதனையடுத்து படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார்- சிம்ரன் இணைந்து நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய Mr, Miss, Mrs தமிழகம் 2024, Mr தமிழகம் பட்டத்தை பரத்வாஜ், ஜூட்,இப்ராஹிம் மற்றும் மானவ். Miss.தமிழகம் பட்டத்தை அனுஷா மற்றும் கீர்த்தனா Mrs தமிழகம் பட்டத்தை ரக்சனா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் வென்றனர்

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய Mr, Miss, Mrs தமிழகம் 2024, Mr தமிழகம் பட்டத்தை பரத்வாஜ், ஜூட்,இப்ராஹிம் மற்றும் மானவ். Miss.தமிழகம் பட்டத்தை அனுஷா மற்றும் கீர்த்தனா Mrs தமிழகம் பட்டத்தை ரக்சனா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் வென்றனர்

 இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய Mr, Miss, Mrs தமிழகம் 2024 நிகழ்ச்சி பிரமாண்டமாக சென்னை சேத்பட் லேடி ஆண்டாள் பள்ளியில்  நடைபெற்றது 

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் 

 பிரமாண்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் Mr தமிழகம் 2024 பட்டத்தை பரத்வாஜ்  மற்றும் ஜூட் கைப்பற்றினர் .Mr தமிழகம் 2024 1வது ரன்னர் அப் - இப்ராஹிம்,Mr தமிழகம் 2024 2வது ரன்னர் அப் - மானவ் படேல் வென்றனர்

 Miss தமிழகம் 2024 பட்டத்தை கீர்த்தனா கைப்பற்றினார்... Miss தமிழகம் 2024 முதல் ரன்னர் அப் - அனுஷா,Miss தமிழகம் 2024 2வது ரன்னர் அப் - சினாமிகா ஆகியோர் வென்றனர்

 Mrs தமிழகம் 2024 பட்டத்தை ரக்சனா கைப்பற்றினார்.Mrs தமிழகம் 2024 1வது ரன்னர் அப் - ப்ரீத்தி,Mrs Goddess தமிழகம் 2024 சீதா லட்சுமி வென்றனர்

Mr பட்டம் வென்றவர்களுக்கு விஜய் கபூர் பட்டத்தை வழங்கினார்... Mrs, Miss பட்டம் வென்றவர்களுக்கு நடிகைகள் ரோஷினி, அம்மு அபிராமி மகுடத்தை சூட்டினார்கள்... நிகழ்ச்சிக்கான வடிவமைப்பை பாகிம் செய்திருந்தார்.

 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனர் ஜான் அமலன்Mr, Miss,Mrs தமிழகம் 2024 வெகு சிறப்பாக நடைபெற்றதாகவும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவரும் வருங்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும்... அதற்கான பயணமாகவே இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சிறந்த வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தமிழகத்தின் சார்பாக இந்திய அளவில் கோவாவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பார்கள் என கூறினார்.

இளம் தொழில் முனைவோர் மையம் YES(Young Entrepreneur school)சார்பில் YESCON-2025 மாநாட்டினை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளதாக மையத்தின் தலைவர் நீதி மோகன் தெரிவித்துள்ளார்

இளம் தொழில் முனைவோர் மையம் YES(Young Entrepreneur school)சார்பில் YESCON-2025 மாநாட்டினை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளதாக மையத்தின் தலைவர் நீதி மோகன் தெரிவித்துள்ளார்

  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  YES(Young Entrepreneur school) தலைவர் நீதி மோகன், ஒருங்கிணைப்பாளர் நடேசன், துணைத் தலைவர் ராஜ்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசியவர்கள் இளம்தொழில்  முனைவோர் மையத்தின் சார்பாக YESCON 2025 மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டினை   தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார்
 இந்த மாநாட்டில் 2500 க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளதாகவும் 
 அதேபோல் இந்த மாநாட்டில்  Yesmart பர்த்டே கண்காட்சி 270 ஸ்டால்கள் மூலம் அமைக்கப்பட உள்ளதாகவும் இதனை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என கூறினார் 
 சிறு,குறு, இளம் தொழில் முனைவோர்களுக்கு பல்துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கும் விதமாக பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக கூறினார் 
 தங்கள் மையத்தின் முக்கிய நோக்கம் சிறு குறு தொழிலாளர்களை மிகப்பெரிய தொழிலாளர்களாக உயர்த்துவதும்.. இதன் மூலம் இந்தியாவை மிகப் பெரிய பொருளாதார நாடாக உயர வேண்டும் என்பதே தங்களது நோக்கம் எனக் கூறினார்

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !! *தமிழனின் வர...