Saturday, January 25, 2025

உத்தரகாண்டில் நடைபெற்ற உள்ள 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் 393 வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்*

*உத்தரகாண்டில் நடைபெற்ற உள்ள 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் 393 வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும்  பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்*

உத்தரகாண்டில் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி உள்ள 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில்  11 மையங்களில் நடைபெற்ற உள்ள இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 393விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

 அவர்களை வழியனுப்பும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன்,SDAT பொது மேலாளர் சுஜாதா ஆகியோர் பங்கேற்று 38 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து வீரர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை  வழங்கினர் 

உத்தரகாண்டில் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி,   பிப்ரவரி 14 ஆம் தேதி வரை   நடைபெற உள்ள இந்த போட்டிகளில்  31 பிரிவுகளில் , 393 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் 102 அதிகாரிகள் கொண்ட குழு என மொத்தம் 495 பேர்  உத்தரகாண்ட் செல்கிறார்கள் . 

இவர்கள் அனைவரையும் ஐசரி கணேஷ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்ளும் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி  வழியனுப்பி வைத்தனர்.

*ஐசரி கணேஷ் பேச்சு*


குஜராத் மாநிலத்தில் நடந்த போட்டியில் ஐந்தாம் இடம் பெற்றோம் அதற்கு அடுத்து நடைபெற்ற கோவாவில் 10 ஆம் இடத்தை தமிழகம் பெற்றது இதற்கு காரணம் ஒலிம்பிக்கில் இடம்பெறாத போட்டிகள்  நடைபெற்றதாக கூறினார் 

 இந்த ஆண்டு முதல் மூன்று இடத்தில் தமிழகம் வரவேண்டும் என கூறியவர் வீரர்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என கூறினார் 

 வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் தற்பொழுதும் வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் 


 எனவே வீரர்கள் தங்கம் வெல்வதை மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும் என கூறினார்

*ஆதவ் அர்ஜுனா பேச்சு*

 இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் 393 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 102 பேர் என மொத்தம் 495 பேர் தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

 விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் நாங்கள் செய்து தருவோம் என்று கூறினார் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனக் கூறியவர்

 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் 

 எனவே வீரர்கள் மெடல் வெல்லும் பொழுது அவர்களுக்கு அரசுத் துறையில் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைகள் வழங்கப்படும் இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்

*ஐசரி கணேஷ் பேட்டி*

 38 வது தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக 393 வீரர்களும் 12 பயிற்சியாளர்களும் செல்ல இருக்கிறார்கள் 

 உத்தர காட்டில் நடைபெற உள்ள இந்த போட்டியில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார் 

 தமிழக துணை முதல்வரே விளையாட்டு துறைக்கு அமைச்சராக இருப்பதால் தமிழக அரசு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது தமிழக அரசின் ஒத்துழைப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்

*ஆதவ் அர்ஜுனா பேட்டி*

 நடைபெற உள்ள 38 வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து 393 வீரர்கள் நூற்றி இரண்டு பயிற்சியாளர்கள் என 500 பேர் செல்ல இருக்கிறார்கள் 


 இந்த ஆண்டு முதல் ஐந்து இடத்திற்குள் தமிழகம் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது 

3% விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும்

 இந்த ஆண்டும் அதிகளவிலான புதிய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள் 

 மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் பேசியுள்ளோம் வரும் ஆண்டில் தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக  கூறினார் 

 வீரர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொழுது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அந்த மாநில காவல் துறையுடன் தமிழக காவல்துறை பேச வேண்டும் இனிவரும் காலங்களில் வீரர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறினார்

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!

 ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானத...