அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.
டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளராக வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில்,
எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல 'முதல்' விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது என்று கூறினார்.
படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் பேசும் பொழுது,
இயக்குனர் வர்ஷா பரத் நிறைய காட்சிகள் படம் பிடித்து எடுத்துட்டு வந்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு வெர்ஷன் ரெடி பண்ணும் போது, அதைவிட இன்னொரு வெர்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மாறி மாறி உழைத்தோம். இப்பொழுதும் இன்னும் சிறப்பான வெர்ஷன் வர வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தினை எடிட் செய்யும் பொழுது இயக்குனர் வர்ஷாவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.
மூத்த நடிகை சாந்தி பிரியா பேசும் பொழுது,
" செண்பகமே செண்பகமே" பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு நன்றி. இப்பொழுது 'Bad Girl' படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு come back கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், casting director வர்ஷாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, " வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியதும், நானும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டேன்" . ஆனால் படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்ப முடியுமா? என்று கூறியதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன், பின் Sun light ல் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்து அனுப்பினேன். பின் இயக்குனர் வர்ஷா பரத் இந்தக் கதையை சொல்லி முடித்த பின், நான் அவரிடம், " இந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன் உங்களுக்கு சிகப்பு கம்பளம் காத்துக் கொண்டிருக்கிறது" என்று கூறினேன். ஏனெனில் இந்தப் படம், அப்படி ஒரு கதையைத்தான் அழுத்தமாக கூறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது". படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும் என்று கூறினார்.
படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன் பேசும் பொழுது,
இயக்குனர் இந்த கதையை எனக்கு சொல்லும் பொழுது, ஒரு உண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். மேலும் இந்த கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக 'ஒரு முழு கதையும் என்னை வைத்து நகர்கிறது' எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது, ஆனால் வெற்றிமாறன் சார் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி என்று கூறினார்.
இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது,
இந்தப் படத்தின் டிரைலர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, " வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார்". பொதுவாக close up shots எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, close up shots நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். ஏனெனில் Bad Girl என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண இயக்குனரால் எடுக்க முடியாது பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
நடிகை டாப்ஸி பண்ணு படத்தைப் பற்றி கூறும்பொழுது,
15 வருடத்தில் வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை? என்று யோசிப்பேன், ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.
இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கேஷ்யப் இந்த படத்தை பற்றி பேசும்பொழுது,
விடுதலை பட சூட்டிங்கின் போதுதான் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை பற்றி கூறினார். படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுது, நான் பிரமித்து போயிட்டேன். பொதுவாக ஏதாவது ஒரு படத்தின் கதையை பார்க்கும் பொழுது, இதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும், ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குனர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று கூறினார்.
படத்தின் இயக்குனர் வர்ஷாபரத் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,
பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு அவர் இந்த கதை தேரும், தேராது! படமாக வரும், வராது என்று feed back கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் "Bad Girl" படத்தின் கதை உருவானது.
நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl. பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது என்று கூறினார்.
விழா நிறைவாக இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,
இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு நான் எப்பொழுதாவது செல்லும் பொழுது, முதல்முறையாக சாந்தி பிரியா மேடமை சந்தித்தேன். அப்பொழுது அவர், " சார். இந்த படம் எல்லா Festvel லையும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் சார்" என்று கூறினார். அப்பொழுது நான் வர்ஷாவிடம், " இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா? என்று கூறினேன். வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட 100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் Gross Root Film Company ய பெருமைப்பட வைக்கும்.
நிறைவாக படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.