Sunday, February 23, 2025

ஆர்.சி.சி. மேக்னம் சார்பில் அதன் தலைவர் பிரதீப் சேத்தியா மற்றும் செயலாளர் ரமேஷ் சுரானா ஆகியோர் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான மேக்னத்தான் - மாரத்தானில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்.சி.சி. மேக்னம் சார்பில் அதன் தலைவர் பிரதீப் சேத்தியா மற்றும் செயலாளர்  ரமேஷ் சுரானா ஆகியோர் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான மேக்னத்தான் - மாரத்தானில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். 

சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் இருந்து, மனிதத் திறன் மேம்பாடு மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவு ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேக்னாதன் 2025 மாரத்தான் நடைபெற்றது. இதில் 5000 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.    ஆர். சி. சி மேக்னம் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை  ஸ்ரேனிக் நீது கோச்சார் முன்னின்று நடத்தினார்.  இந்த ஆண்டு, மராத்தான் இரண்டு முக்கியமான சமூக பணிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. 
தனிநபர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடுகளின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.  இந்த முக்கியமான மாரத்தனை ஆவடி காவல் ஆணையர் கே. சங்கர் ஐபிஎஸ், வருமான வரி ஆணையர் நந்த குமார், ஐஆர்எஸ், டிஜி வைஷ்ணவ் கல்லூரி செயலாளர் டாக்டர்.அசோக் முந்த்ரா, கோத்தாரி தொழில்துறை கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டாக்டர். ரஃபிக் அகமது மற்றும் காசா கிராண்டின் மார்கெட்டிங் துணைத் தலைவர் விமேஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுடன் பப்புசா ராகுல் லுனியா மராத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேக்னாதன் 2025 இல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்.  பல்வேறு வயதினரின் தன்மைக்கு ஏற்ப 4 பிரிவுகளில் மாரத்தான் நடைபெற்றது. 21 கிமீ  மராத்தானை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி செயலாளர் டாக்டர்.அசோக் முந்த்ரா, ஆர்.சி.சி. மே தலைவர் பிரதீப் சேத்தியா மற்றும் செயலாளர் ரமேஷ் சுரானா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  10 கிமீ மாரத்தானை சுதீர், நேஹா, சந்தீப், வருண், ஷாஹில், அபிஷேக், மிதேஷ் மற்றும் தேவேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  5 கிமீ மாரத்தானை நந்தகுமார் ஐ. ஆர். எஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவர்களுடன் பெற்றோருடன் - குழந்தைகள் பங்கேற்க 1.5 கிமீ ஓட்டமும் இடம்பெற்றது.    ஒவ்வொரு பிரிவும் உடற்தகுதி, சமூகப் பொறுப்பு மற்றும் தனிப்பட்ட மாற்றத்திற்கான கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலித்தது.     மாரத்தானின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தடையற்ற செயலாக்கம் ஆர். சி. சி மேக்னம் இளைஞர் அணியின்  முயற்சிகளுக்கு ஒரு சான்றாக இருந்தது.   

சமூக விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தை ஊக்குவிப்பதில் அடிப்படை முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை ஆவடி காவல் ஆணையர் கே. சங்கர் ஐபிஎஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.  வருமான வரி ஆணையர்  நந்தகுமார், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் ஆற்றல் குறித்து பேசினார்.  டி. ஜி. வைஷ்ணவ் கல்லூரி செயலாளர் டாக்டர்.அசோக் முந்த்ரா, முழுமையான வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.  மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.  மாக்னாதன் 2025 ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல-இது செயலில்  எதிரொலிக்கும் முயற்சி.   மராத்தானிலிருந்து திரட்டப்பட்ட நிதி திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மறுவாழ்வுக்காக பயன்படுத்தபடும்.  .  தொழில் வாய்ப்புகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு தளமாகவும் இந்த நிகழ்வு செயல்பட்டது.  போதைப்பொருள் இல்லாத சமூகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் என்ற அதன் தாக்கத்தையும் வெளிப்படுத்தியது.

SBOA பள்ளியின் 1995 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை செதுக்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தங்களது நன்றியை காணிக்கையாக்கினர்.

SBOA பள்ளியின் 1995 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை செதுக்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்க...